இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சரியான கணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

படம்
புகைப்படங்களுக்கு உயிர் கொடுப்பதில் முக்கியமானது டைமிங்க்..டைமிங்க் சரியாக அமையா விட்டால் அவ்வளவுதான் எவ்வளவு குனிந்து நிமிந்து எடுத்தாலும் சொதப்பி விடும்..சரியான டைமிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை...பொதுவாக இவ்வாறான காட்சிகள்தான் பிரபல்யமான டி.வி விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்..டைமிங்க் புகைப்படக்கருவிய்யின் தரத்திலும் தங்கியுள்ளது நமது கைகளிலும் தங்கியுள்ளது. டைமிங்க்கை வரவழைப்பதற்கு ஒரு பரிசோதனை கூறுவார்கள் இரு விரல்களுக்கிடையில் (ஆட்காட்டி விரல்,சுட்டுவிரல்களுக்கிடையில்) சவிரல்களுக்கு சிறிது உயரத்தில் ஒரு பேனாவை பிடித்து வைத்திருப்பார்கள் அப்பேனாவை அவர்கள் கீழே போடும் போது அதை நாம் எமது இரண்டு விரல்களாலும் பிடிக்கவேண்டும்...முடிந்தால் முயற்சிசெய்யுங்கள்

டைட்டானிக்கின் பொக்கிசங்கள்

படம்
டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100 ஆவது நினைவு தினம் ஏப்ரல் 15 இல் கொண்டாடப்பட்டது. டைட்டானிக் ஏப்ரல் 14 1912 இரவு 11 .40 pm   க்கு ஒரு பெரிய பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது. பனிப்பாறை கப்பலின் முன்பகுதியை 220 -245 அடி நீளத்திற்கு வெட்டித்தள்ளியது கப்பலின் முழு நீளம் 882 அடிகள் மோதிய பனிப்பாறையின் நீளம் 220 அடிகள் 1.40 pm இற்கு மூழ்க ஆரம்பித்து அதிகாலை 2.20 am இற்கு டைட்டானிக் முழுமையாக மூழ்கியது.பயணித்தவர்களுள் 706 நபர்கள்தான் பிழைத்தார்கள்.அவர்களை வரவேற்க நியூயோர்க்கில் 40 000 மக்கள் கொட்டும் மழையில் காத்துக்கொண்டிருந்தார்கள்.மிகவும் சோகமான கடல்பிரயாணம் ஆகிப்போனது டைட்டானிக்.டைட்டானிக் கப்பலைகப்பல் மூழ்கி 74 ஆண்டுகளின் பின்னர்தான் அது கண்டுபிடிக்கப்பட்டது.டைட்டானிக் பற்றிய முழு விபரங்களை அறிய... நிஜ டைட்டானிக் ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து சில பொருட்களை மீட்டிருக்கிறார்கள்,அத்துடன் கப்பலில் இருந்து தப்பியவர்களிடமிருந்து போட்டோக்கள் போன்றவற்றையும் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.அவ்வாறானவை கீழே.. ...