இடுகைகள்

religion லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்மஸ் - ஜேசு பிறந்த நாள்தானா?

படம்
கிரிஸ்மஸ் என்பது ஒரு உலகளாவிய பண்டிகை என நம்பப்பட்டு வருகிறது. மத எல்லைகளைத் தாண்டி இது பெரும்பாலும் உலகத்தின் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையாகவே இது அத்தனை மத சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. ஆனால் அதற்காக நாம் கொண்டாடுவதால் பாதகமில்லை என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அப்படி இருந்தால்கூடப் பரவாயில்லை. இது உண்மையில் காலநிலை சம்பந்தப்பட்ட பண்டிகை. டிசம்பர் மாதம் என்பது மேற்குலக நாடுகளின் அதி பனிப்பொழிவுக் காலம். சீசன். அந்த நேரத்திலே உருப்படியாக எதுவுமே செய்ய முடியாது என்பதால், மகிழ்ச்சிகரமாக ஏதாவது செய்வோம் என முடிவெடுத்துக் கொண்டாடுவதுதான் கிரிஸ்மஸ். உண்மையில் இது ஒற்றை நாள் தேவதூதன் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. அந்தக் காலப்பகுதி முழுவதற்குமான மொத்தப் பண்டிகை. உண்மையில், இயேசு பிறந்தது டிசம்பரில் இல்லை, ஒக்டோபரில்தான் என ஒரு கதை காற்றிலே உலாவுகிறது. (அதுபற்றி பெரிதாக ஆதாரம் சிக்காததால் நான் மூக்கைக் கொடுத்து புண்ணாக்கிக்கொள்ள விரும்பவில்லை. J ) ஆங்கிலேயர்களால், அல்லது மொத்தமாக மேற்குலகத்தவர்களால், அவர்கள் நம்மை ஆண்டபோது கடத்தப்பட்ட கலாசாரம்தான் இந்தப் பண்டிகை. போதாததற்கு கிறி

தேரேரும் வண்ணை வரதராஜப் பெருமாள்

படம்
வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்  கோயில்களால் நிறைந்த யாழ்ப்பாணத்திலே புகழ் பூத்த கோயில்களில் வண்ணார்பண்ணை பெருமாள் கோயிலும் ஒன்று. அத்தகைய சிறப்பு மிக்க கோயிலின் தேர் திருவிழா இன்று ஆகும். அதனை முன்னிட்டு அக்கோயிலின் வரலாற்றை வாசகர்களுக்கு அறியத்தருவதே இக்கட்டுரையின் நோக்கம்.  தோற்றமும் வரலாறும் யாழ்ப்பாணத்திலே வண்ணையம்பதி எனும் பெரு நிலப்பரப்பை உள்ளடக்கிய பிரதேசத்திலே அமைந்துள்ள கோயில்களில் வண்ணார்பண்ணை சிவன் கோயிலும், வண்ணார்பண்ணை பெருமாள் கோயிலும் முக்கியமான இடத்தை பெறுகின்றன. அந்த வகையில் வண்ணார்பண்ணை பெருமாள் கோயிலின் தோற்றம் கிபி 14  ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ளது. அக்காலத்தில் இப்பிரதேசத்தில் நெசவுத்தொழிலை மேற்கொண்டுவந்த பத்மசாலி செட்டிகள் தம் வைணவ வழிபாட்டை பேணும் முகமாக தற்போது கோயில் காணப்படும் பிரதேசத்தில் சிறிதாக ஒரு ஆலயத்தை அமைத்து வழிபட்டு வந்துள்ளார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இப்பெருமாள் வழிபாட்டால் அவர்களது குலமும் குடும்பமும் மகிழ்வுடன் வாழத்தொடங்க அக்குலத்தினரும் மேலும் பக்தியுடன் இவ்வாலயத்தை சிறப்புற கவனித்து வரலாயினர்.                  

வித்தியாசமான இறுதிச்சடங்குகள்

படம்
மரணச்சடங்குகள் உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து சமயங்களுக்கும் பொதுவான விடயம்.இவற்றில் சமயம் கலாச்சாரத்தில் பாரியவேறுபாடுகள் உண்டு.ஏன் ஒரே சமயத்துக்குள்ளுமே பிரதேச ரீதியாக வேறுபாடுகள் இருப்பதுண்டு.ஆனால் அனைத்திலும் பொதுவான அம்சமாக மதிக்கப்படுவது இறந்தவருக்கு மரியாதைசெலுத்தல்.இது அனைத்து மரணசடங்குகளிலும் பின்பற்றப்படும் விடயம்.பலர் சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் இறந்ததன் பின்னரான வாழ்க்கை என்பவற்றில் நம்பிக்கைகளுடன் இவற்றை செய்கின்றார்கள்.இந்துசமயத்தில் இறந்த உடலை எரித்தல் முக்கியமுறையாக இருந்தாலும் சடங்கு  நடைபெறும் முறை இடத்திற்கிடம் மாறுபடுகின்றது சிலர் வாழையை அடையாளமாக சந்திகளில் கட்டுவார்கள் சிலர்  தென்னோலையைக்கட்டுகின்றார்கள்.பாடையில் கொண்டு செல்லல் அலங்கரித்த பல்லக்கில் கொண்டுசெல்லல் போன்று பல முறைகள் உள்ளன.உலகெங்கிலும் உள்ள இறுதிச்சடங்குகளைப்பார்ப்போம். காரில் இருந்துகொண்டு இறுதி அஞ்சலி இது அமெரிக்காவில் வழக்கமான முறையாக இருக்கின்றது..இறந்தவரின் உறவினர்கள் உடலை பொதுவான ஓரிடத்தில் பார்வைக்காக வைத்திருப்பார்கள்.நீங்கள் காரில் அவ்விடத்திற்கு சென்று காரில் இருன்டபடியே அஞ்

மீசாலை சோலையம்மன் கோயில்

படம்
மீசாலை சோலையம்மன் கோயில் வெங்காயம் நண்பர் குழுவுடன் நாங்கள் மேற்கொண்டிருந்த யாழ்பாணச்சுற்றுப் பயணத்தின் போதுதான் தற்செயலாக சாவகச்சேரியிலுள்ள மீசாலை சோலையம்மன் கோயிலுக்கு செல்ல நேர்ந்தது. சாதாரண கோயில்களைப்போலவே அக்கோவிலையும் எதிர்பார்த்துச்சென்ற எங்களுக்கு ஒரே பிரமிப்பாகவும் வியப்பாகவும் போய்விட்டது. யாழ்ப்பாணத்தில் இவ்வளவு அழகான இடமா...?? என எல்லோரும் ஒரு கணம் பிரமித்து விட்டோம். அத்தகைய இயற்கை சூழ் சூழலில் அமைந்திருந்தது அக்கோயில். பெயருக்கேற்றால் போலவே அக்கோயிலை கருநாவல், கொன்றை ,கொக்கட்டி ,கிஞ்சா ,கூகைமா, மகிழமரம் போன்ற மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்திருந்தது. அங்கு சென்றவுடனேயே அங்கிருந்த இயற்கை சூழல் எங்களுக்கு ஒருவித மனஅமைதியை அளித்ததை எங்களால் உணர முடிந்தது. கோயிலின் சூழலில் அமைந்திருந்த ஆல மரமும் அதுசார் பகுதியும் இக்கோயிலுக்கு மேலும் அழகை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இம்மட்டுக்கும் கோயிலின் அமைப்பும் அளவும் பாரியதாக இல்லையாயினும் இங்கிருக்கும் இயற்கையே கோயிலுக்கு பிரமிக்க தக்க வடிவையும் சிறப்பையும் வழங்கியுள்ளது. வரலாறு  இவ்வாலயத்தின் தோற்றுவாய் பற்றி சரியாக