கற்பழிக்கப்பட்டால் பெண்கள் தற்கொலைசெய்யவேண்டுமா
ஆணாதிக்கம் பேஸ்புக் அதிகமாக கேட்ட வார்த்தைகள். பெண்ணாதிக்கம் கட்டில்கள் அதிகமாக கேட்டவார்த்தைகள். இவ்விரண்டைப்பற்றியுமான நேர்மறைவிவாதங்கள் சகலஇடங்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.பெண் என்பவள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் இந்த ஆணாதிக்கம் ஆரம்பிக்கின்றது. ஒரு வேளை எனக்குவரும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் இது ஆரம்பிக்கலாம்.அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு... இப்படி அடங்கினால் அல்லது அடக்கிவளர்த்தால்தான் அவள் பெண் என்பது சமூகம் காலாகாலமாக விதைக்கும் அடிமைத்தனங்களில் ஒன்றுதான். அப்படியானால் பெண்ணிற்கு அடிமையாக இருக்கவேண்டுமா என மீசையை முறுக்குகின்றார்கள். உங்கள் பால்ய நண்பனுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை சுதந்திரத்தை உங்களைச்சார்ந்த ஒரு பெண்ணுக்கு நீங்கள் கொடுத்தாலே போதும் அது அவளுக்கு மிகப்பெரிய சுதந்திரமாக இருக்கும்.மீசை இதுவும் ஆணாதிக்கத்தின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது முக்கியமாக சினிமாக்களால் பெட்டை உனக்கே இவளவு திமிரிருந்தால் ஆம்பிளை எனக்கு எவளவு இருக்கும்? நீ உண்மையிலேயே மீசைவைச்ச ஆம்பிளைன்னா என்று மீசையை முறுக்குவத...