இடுகைகள்

டிசம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - சனிப்பெயர்ச்சி என்ன செய்கிறது?

படம்
பிறக்கும் ஆங்கில புதுவருடத்துக்கு வெட்கமே இல்லாமல் ராசிபலன் எழுதத் தொடங்கியிருப்பார்கள் நமது சோதிடர்கள். அதை வாங்க முன்பதிவு செய்திருப்பார்கள் நமது மக்கள். ‘ஆங்கில புதுவருட சனிப்பெயர்ச்சி... ’ கேட்கவே கேவலமாக இல்லை? சனிபகவான் என்ன, மக்களை வதைப்பதற்கான கோர்ஸை ஈஸ்வரனிடம் இங்கிலிஷ் மீடியத்திலா படித்தார்? இது ஒரு கூட்டம், அடுத்தது தமிழ் புதுவருடத்தை தான் கொண்டாடுவோம், இதெல்லாம் இங்கிலிஸ்.. என்று. ஜனவரி, பெப்ரவரி என்பதை தை, மாசி என எழுதும் கூட்டம். எந்தக் கூட்டமும் எக்கேடும் கெடட்டும், உலகத்துக்கே, அல்லது பெரும்பான்மை உலகத்துக்கு பொதுவான கிரகேரியன் புதுவருடத்தை, அதன் உண்மையான அர்த்தம் தெரிந்துவிட்டு கொண்டாடுவோம், வாருங்கள். தற்போது பயன்படுத்தப்படும் கிரகரியன் கலன்டருக்கு முதல் உலகத்தில் ஜூலியன் கலண்டர் பயன்பட்டது. (அதுவரை பயன்பட்ட ரோமன் கலண்டர் சூரிய சுழற்சியிலிருந்து நான்கு மாதங்கள் பின்னால் இருந்ததால் கி மு 49 இல் ஜூலியஸ் சீசர், வானியலாளர் சொசிஜீனஸ் ஐ, புதிய கலண்டரை உருவாக்குமாறு பணித்தார். அவ்வாறு உருவாக்கப்பட்டதே ஜூலியன் கலண்டர். ) ஆனால் அது உண்மையான புவிவியல் ஒரு வருடத்

டெல்லி பெண்ணின் நண்பனின் பேட்டி- நடந்தது என்ன?

படம்
'நாங்கள் மீள்வோம் என்று தெரியும், அவர்கள் என்னை சாலையில் ‌வீசும் போது வலியையும் மீறி நான் கூறிய வார்த்தைகள், 'உ‌ன்னை தனியாக து‌ன்புறவிடமாட்டேன் என்பது தான். சாலையில் தூக்கி வீசப்பட்ட போது தோழியின் அலறல் என்னை கொன்றே விட்டது'' டெல்லி‌யி‌ல் ஓடு‌ம் பேரு‌ந்‌தி‌ல் மாணவி கற்பழிக்கப்பட்ட போது உடன் இருந்த ந‌ண்ப‌ர் இ‌வ்வாறு உரு‌க்கமாக கூ‌றியு‌ள்ளா‌ர். வார இதழ் ஒன்றுக்கு மாண‌வி‌யி‌ன் ந‌ண்ப‌ர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். இதோ:- நான் அந்த நிகழ்வின் மு‌க்‌கிய சாட்சி. அந்த அசாதாரண சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ந‌ண்பனாக அந்த இடத்தில் சமூகத்தை நினைத்து தலைகுனிய வைத்தது அந்த மோசமான இரவு. நான் இப்போது அந்த சம்பவத்தை மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை. எனினும் தொடர்பான சாட்சியத்தை என் மனசாட்சிக்கு உட்பட்டு காவல்துறையிடம் அளித்துவிட்டேன். அசம்பாவிதத்தில் கடுமையாக தாக்கப்பட்ட நான் தற்போது உடல் தே‌றியு‌ள்ளே‌ன். காயங்கள் பலம் என்பதால் அதிலிருந்து விடுபட சில நாட்கள் ஆகும். ஆனால் என் தோழிக்கு ஏற்பட்ட பாதிப்புகள், கோரங்கள் என்றும் மாறாது, அழியாது. என் தோழி குறித்து என்னால் எதுவும

டாப் 12 போஸ்ட் 2012-வெங்காயம்

படம்
உண்மையைக்கூறினால் பதிவுலகத்தில் நுழைந்து முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை.எமக்கு பதிவுலகமே ஆரம்பத்தில் புதிராகத்தான் இருந்தது.இப்பொழுது ஓரளவு தெளிந்துவிட்டோம் என நம்பிகின்றோம்.வெங்காயத்தில் 2012 இன் டாப் 10 பதிவுகள் கீழே அதிக பேஜ் கிட்களைவைத்து இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.கஸ்ரப்பட்டு தகவல்களை சேகரித்து போஸ்ட்டாகப்போடும் பதிவுகள் சிலவை 200 பேஜ் கிட்டுடன் படுத்துக்கொள்வதும்.அன்றைக்கு அவசரமாகப்போடப்படும் பதிவுகள் 2000 பேஜ் கிட்டைதாண்டுவதும் அனைத்து  பிளாக்கர்களுக்கும் பொதுவானதுதானா?  அரசியல்ல இது சகஜம்... லிஸ்ட் இதோ.. உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது? இன்றைய தினத்தில் ஒரு கெட்டவார்த்தையாக ஆகிவிட்டது உலக அழிவு யாராவது இதைப்பற்றிக்கதைத்தாலோ அல்லது கேட்டாலோ  மக்களுக்கு கோபம்/எரிச்சல் வந்துவிடும்.காரணம் சகலருமே உலக அழிவுதொடர்பாக  அனைத்து விடயங்களையும் பி.எஎஹ்.டி முடிக்காத குறையாக அறிந்துவிட்டார்கள்.எல்லாவற்றிற்கும் காரணம் மரணபயம்தான்.பதிவர்கள் ஒவ்வொருவரும் நாஸ்கா லைன் தொடக்கம் ஹரிசன் போர்ட்டின் இண்டியானா ஜோன்ஸ் வரை அனைத்தையும் இழித்து பயப்படுத்திவிட்டதால் அட நாஸா  உண்மையில் என்ன