இடுகைகள்

வெங்காயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெறி

“ரோபி ஆஸ்பத்திரியிலையாம். ” எதிர்பார்த்ததுதான் என்றாலும், சஹா தொலைபேசியில்  சொன்னபோது சற்று அதிர்ச்சியாகத்தானிருந்தது. “எப்படி? ” ..என்பதை ஊகித்திருந்தாலும், கேட்டேன். “இடது கையில பிளேட்டால வெட்டி இருக்கிறாள். ரூமுக்குள்ள இருந்து முனகல் சத்தம் வர, மாமிதான் முதல்ல பார்த்திருகிறா.. இரவே கொண்டுவந்தாச்சு.. தேப்பன் தாயும் வந்திருக்கினம். நல்ல காலம் பெரிசா ஒண்டும் நடக்கேல்ல.. ” ‘கெட்ட காலம்.. ’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். நான் ரிசீவரை எடுத்து காதில் வைத்ததுமே துள்ளி மேசைமேல் ஏறி, தலையை நுழைத்து காதை ரிசீவரின் அந்தப் பக்கம் வைத்து ஒட்டுக்கேட்கும் பழக்கமுள்ள என்  சம்யு நான் ரிசீவரை வைத்ததுமே கேட்டாள்.. “ஆரப்பா கைய வெட்டினவா? நோகாதோ? ” குழந்தைகள் வாழ்க்கை எளிமையானது.. கேள்விகள் கேட்பது - எல்லாவற்றையும். பெரியவர்கள் வாழ்க்கை சிக்கலானது. பதில் சொல்வது - எல்லோருக்கும். *       *       * இரண்டு வருடங்களுக்கு முன்னர், உயர்தரப் பரீட்சைக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போது, பௌதிகவியல் மீட்டலுக்காக – பரீட்சை வினாத்தாள்கள் செய்துவிடச் சொல்லி என்னிடம் வந்தவர்கள் சஹானாவும், ரோபியு

யாழ்மாணவரின் தலைவிதி-முடிந்தது

படம்
உதயனில் ஒருவருடத்திற்கு முன்பு ஒரு கட்டுரைவெளிவந்தது பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோற்றுவிட்டார்களா? மாணவர்களால் ஏளனமாக நோக்கப்படுகின்றார்களா? என்பதுதான் தலைப்பு  உள்ளே டீப்பாக அவளவாக எழுதவில்லை சபை நாகரீகம் என்றுவிட்டார்களோ தெரியாது ஆனால் ஒரு ஸ்ருடன்ற்றாக நிலமைகளை அனுபவித்தமையால் அப்பட்டமான உண்மைகள் என்னவென்று எனக்குத்தெரியும்.அதாவது ஆசிரியர்களுக்குமாணவர்கள் வைக்கும் பட்டப்பெயர்கள் அவர்களை அவர்கள் இல்லாத நேரத்தில் இமிட்டேட் செய்வது போன்றவை இந்தத்தலைப்பிற்குள் அடங்காது அது தொடர்ந்துவரும் ஸ்ருடன்ற் கல்சர்.அந்த விவாதம் இப்போதுவேண்டாம் உண்மையில் ஆசியர் என்பவர் வேறு குரு என்பவர் வேறு ஆனால் இப்போது இரண்டையும் ஒன்றாக்கிவிட்டார்கள்.  பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களால் ஏன் ஏளனமாக நோக்க வேண்டும். காரணம்  மாணவர்கள் முற்றுமுழுதாக தமது படிப்பில் நம்பியிருப்பது  தனியார்கல்வி நிறுவன ஆசிரியர்களை அவர்களின் படிப்பித்தல்களை அவர்களது முறைகளை அதோடு தனியார் கல்வி நிலையம் நடத்தும் ஆசிரியர்களின் கௌரவம் மரியாதை மாணவர்களிடத்தில் எதைவைத்துக்கொண்டு  தீர்மானிக்கப்படுகின்றது?அதற்குப்பல காரணங்கள் இருந்தாலும

யாழ்ப்பாண சாப்பாடு : பசி மயக்கத்திலே ஒரு அலைச்சல்..

படம்
(நாக்கில் எச்சில் ஒழுக..)கடல்மட்டத்துக்கு கீழே வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்தவற்றின் கறிகள். இந்தப் பதிவுடைய முன்னைய பதிவு இங்கே உள்ளது. அதற்கு இத்தனை ஆதரவு வரும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தமிழனின் உணவு சார்ந்த பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றி விட்டோம் நாங்கள். உண்மையில் இந்தப் பதிவுகள் எங்களது கடந்த பலகால யாழ்ப்பாண சாப்பாட்டுக்கடை அனுபவங்களைப் பற்றிய ஒரு பகிர்வு. (அதுவும் முக்கியமாக சென்ற வருட நடுப்பகுதியில் எமது வலைத்தளப் பதிவர்கள் நால்வர் யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்லும், அங்கெல்லாமுள்ள உணவுக் கடைகளில் சாப்பிடும் அனுபவத்தை பெற்றதால்.) எமக்கு தகுதியும், காலமும் வாய்த்தால், யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கங்கள் பற்றிய விரிவான பதிவை எழுதுகிறோம்.  இப்போதைக்கு – முப்பது ஊர்களில் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டவர்கள் என்கிற தகுதியில் எழுதப்பட்ட -  முன்னைய பதிவின் தொடர்ச்சி... யாழ் நகரத்திலே சாப்பாட்டுக் கடைகள் மூன்று பெரிய பிரிவுகளாக இருக்கின்றன. நகரின் புறப் பகுதியிலே பிரபலமாக இருக்கும் அசைவக் கடைகள் , ( பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்துக்கும் , படிக்கும்