இடுகைகள்

politics லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?

படம்
நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது -------------------------------------------------------------------------- விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி  நடத்தினார். எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர். அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம்!! என்ற அளவுக்கு பேஸ்புக்கிலும், சமூக தளங்களிலும் விமர்சனங்களை எழுதித் தள்ளினர். என்னை போன்ற மாணவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பெருத்த அவமானமாகவே பட்டது. ஒரு தொலைகாட்சி ஐம்பது பேரை மாணவர்கள் பிரதிநிதியாக பிரதிபலித்து மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் போன்ற தோற்றத்தை எவ்வளவு மலிவாக தோற்றுவித்தது. இதோ இன்று மாணவர்கள் ஈழத்திற்காக போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். அரசியல்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இந்தியா?

படம்
Repeat what you saw ....ஒரு சிங்களஎக்கவுண்டால் செயார் செய்யப்பட்ட போட்டோ இது ஓ இந்தியாவே இதுக்குத்தானே நீங்கள் எல்லாம் ஆசைப்படுகின்றீர்கள்? இன்று ஒருவன் செயார் செய்தான் நாளை பல சேனா என்ன செய்யப்போகிறதோ... ஏண்டா வேற ஒருதனில இருக்கிற கடுப்பில ஒரு புத்த துறவியை அடிக்கேக்க இஞ்ச அவன் என்ன செய்வான் எண்டு உங்களுக்கு யோசனை வரவில்லையா? இன்னுமா உங்கள் அரசியல் ஆதாய வெறி தீரவில்லை // இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 19 பேர் டெல்லியில் தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலையில் சென்னை திரும்பினார்கள். அவர்கள் வந்த ரெயில் காலை 7.30 மணி அளவில் சென்டிரல் ரெயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்துக்கு வந்தது.   ரெயிலில் இருந்து இறங்கி அனைவரும் நடந்து வந்தனர். அப்போது காவி உடையுடன் புத்த துறவிகளான என்.கே. பண்டாரா (70), வங்கிசா (40) ஆகியோரும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் திடீரென்று 3 பேர் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்தனர். கால்களாலும் எட்டி உதைத்தனர்.   இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத

2012-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்

படம்
வ ங்கக் கடலில் உருவான 'தானே’ புயல், ஓர் அதிகாலை தமிழகக் கரையைக் கடந்தபோது, அது ஒரு பேரழிவின் துவக்கப் புள்ளி என்பதை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'தானே’ தாண்டவத்தால் கடலூர், புதுச்சேரி பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டன. தலைமுறை... தலைமுறையாக நட்டு வளர்த்த பலாவையும் முந்திரியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்தது 'தானே’. வீடுகள், வெறும் கற்குவியல்களாகின. சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் சூறையாடப்பட்டது. போக்குவரத்து தடைபட்டு, மின்சாரம் முற்றிலும் இல்லாமல் போன நிலையில், அன்றாட உணவுக்கே வழியின்றி நரக வேதனையில் தவித்தனர் கடலூர் பகுதி மக்கள். வாசகர்களின் அருளும் பொருளும் கொண்டு 'தானே துயர் துடைப்பு அணி’ உருவாக்கி, கடலூர் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது விகடன்.    மு ல்லைப் பெரியாறு அணைத் தண்ணீரில் தமிழகத்துக்கு உள்ள உரிமை என்பது சட்டப்பூர்வமானது. அதையும் தாண்டி 'அணை வலுவிழந்துவிட்டது... உடையப்போகிறது’ என்று கேரளா கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துவந்த விஷமப் பிரசாரம் இந்த ஆண்டு உச்சத்துக்குப் போனது. விளைவு... தமிழக-க