Ballpoint Pens எப்படி இயங்குகின்றது?
பேனைகளில்/பேனாக்களில் பலவகைகள் இருக்கின்றட்ன. fountain pen , ballpoint pen , rollerball pen ஆனால் பெருமளவானவர்களால் இப்போது Ballpoint Pensதான் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.உலக அளவில் மாணவர்கள் இதை அதிகமாகப்பயன்படுத்துகின்றார்கள். Ballpoint Pens எவ்வாறு இயங்குகின்றது? 90 களில் பிறந்தவர்களுக்கு இந்தப்பேனாவை நினைவிருக்கும். Ballpoint Pen குமிழ்முனைப்பேனா... reed pen, quill pen, metal nib pen, fountain pen போன்றவற்றைவிட இது வித்தியாசமான முறையில் உருவாக்கப்படுகின்ற து,இதன் குமிழ் செப்பு,ஸ் ரீல்,தங்குதன் கார்பைட் போன்றவற்றினால் உருவாக்கப்படுகின்றது.இப்பேனைக்குப்பயன்படுத்தும் மை பின்வரும் இயல்புகளைக்கொண்டிருக்கவேண்டும். 1)ஒரே சீராகப்பரவும் இயல்பைக்கொண்டிருக்கவேண்டும். 2)மை பேனாவைவிட்டுவெளியே காற்றில் தொடுகையுறும்போது மெதுவாக உறையக்கூடியதாக இருக்கவேண்டும்.ஏனெனில் தவறுதலாக பேனாவின் உள்ளேயே மை உறைந்துவிட்டால் பேனாவை எறிவதைத்தவிரவேறு எதுவும் செய்யமுடியாது.அத்துடன் குமிழ்முனையும் இறுகிவிடும். ஆனால் இவ்விரு இயல்புகளையும் கொண்ட மை இருத்தல் ஒரு ...