இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-02

படம்
முதல்பதிவை வாசிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து வாசித்து விட்டு தொடரவும்.   போன பதிப்பில் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றியும் அவர்களின் மீது அடக்குமுறைகளை திணிப்பதற்க்காகவே உருவாக்கப்பட்ட சட்டங்களின் சாராம்சத்தையும் பார்த்தோம்.                               எதையாவது ஒன்றை பெறுவதற்காக ஏதோ ஒன்றை கொடுப்பது காலம் காலமாக இந்த உலகில் நடந்து வருவதுதான். ஆனால் வெறும் இரண்டு வேளை உணவுக்காகவும், உடை எனும் பெயரில் வழங்கப்படும் ஏதோ ஒன்றிற்காகவும் கருப்பின அடிமைகள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. மானம் ,உடம்பு ,உயிர் ,உறவுகள் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இவை கூடப் பரவாயில்லை இழைக்கப்பட்ட கொடுமைகளும் சித்திரவதைகளும் கூறிமாளாது. ஆடு ,மாடு, பன்றி போன்ற விலங்குகள் கூட கறுப்பர்களை விட ஒரு படி உயர்ந்ததாகவே கருதப்பட்டது அன்றைய அமெரிக்க சரித்திரத்தில். கறுப்பர்களை கொடுமைப்படுத்துவது தவறாகக்கூட அன்றைய அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை மாறாக அதை ஒரு கடமையாக கருதிக்கொண்டதுடன் மதரீதியிலும் அதை நியாயப்படுத்த காரணங்கள் தேடிக்கொண்டனர்.     வேலைகளும் நடைமுறையும்............

நித்தி வலையில் அடுத்த நடிகை

படம்
அட உலகமே எதிர்த்து நின்றாலும் சற்றும் அராம இருக்கான்யா அந்த ஆளு.முடியல இதுக்குள்ள நித்தியை சுற்றியிருப்பவர்கள் சரியில்லை என்று ஒருமுறை ஆதீனம் சொல்லியிருக்கின்றாராம்.(ஆமா நாமதானே குட்டிபோட்ட நாய் மாதிரி சுத்திக்கிட்டிருக்கிறம் ).ரஞ்சிதா புகழ் நித்தி(நல்லா இருக்கெல்ல) இப்பொழுது அடுத்த நடிகைய விழுத்தியிருக்க்ன்றாராம் வலையில்.யாரந்த நடிகை?கௌசல்யா எங்கின்றன வட்டாரங்கள். இவருக்கு முதுகுவலி இருந்ததாம் யாரோ நித்தியிடம் சென்றால் முதுகுவலியை தீர்த்துவிடுவார் என்று கௌசல்யாவிடம் சொன்னார்களாம்(முதல்ல இப்படி சொல்லுரவங்கள தூக்கணும்).அவரும் நித்தியிடம் செல்ல வலியை முதுகுவலியை தீர்த்திருக்கின்றாராம் நித்தி.உடனே நித்தியின் தீவிர பக்தையாகிவிட்டாராம் கௌசல்யா.என்ன கொடுமை மூக்சுக்கு 300 தடவை பத்திரிகைகள் டி.விக்கள் என அத்தனையிலும் போட்டு துவைத்து எடுத்தாலும் ஏன் இப்படி தறிகெட்டு மக்கள் அலைகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.ஒன்று சொல் புத்தி இருக்கணும் இல்லை சுய புத்தியாவது இருக்கணும்.இன்னுமா திருந்துறானுக இல்லை.என்ன கொடுமை சரவணா? The Real story behind the lies என்ற தலைப்பிட்டிருக்கும் வீடியோவில

சங்கத்தமிழ்- செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்

படம்
தொல்காப்பியர் உலகில் தற்போது வழங்கிவரும் மொழிகளில் பல முதன்முதலில் உச்சரிக்கபடத் தொடங்கமுன்னரே இலக்கிய ரீதியாகவும் இலக்கண ரீதியாகவும் உச்சம் தோட்ட மொழி தமிழ்மொழி. பிறத்தலை , வளர்தலை , காதலை , பொருதலை , வாழ்தலை , தலை தாழாது வாழ்தலை , இறத்தலை , சிறத்தலை... என  தம் அனை த் தையும் இலக்கியமாக்கியவர்கள் நம் முன்னவர்கள். இன்று நாமனைவரும் பேஸ்புக்கில் சிலபல தமிழ் பெருமை புகைப்படங்களையும் அபத்தங்களையும் ( அணுவை பிளந்து எழ்கடலை புரட்டி... என்ற பாடலின்மூலம் ஔவையார் அணு சக்தி கோட்பாட்டை வலியுறுத்தியுள்ளார். share if you are proud to be a tamilian… என்றவாறான பல ஸ்டேட்டஸ்களை நீங்கள் “ முகப்புத்தகத்தில் ” சந்தித்திருப்பீர்கள். நாங்க யாரு ? முகப்புத்தகம் , சாளரம் என்று வணிகப்பெயர்களுக்கே தமிழ்ப்பெயர் வைத்து தமிழை வளர்ப்பவர்களாயிற்றே ? ) பகிர்ந்து வளர்க்கும் தமிழை சங்கம் வைத்து வளர்த்தவர்கள். இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு மொழியில் இத்தனை செழுமை இருப்பது உலக ஆச்சரியம். எனது மொழி என்று அல்லாது நடுநிலையாக பார்த்தாலுமே இது வியப்பான தக வல் தான்.  அதிலும் , இன்றைவரை வாழ்