கலிலியோ vs ரோமன் கத்தோலிக்க திருச்சபை...
கலிலியோ தொடர்பில் 2 பதிவுகள் ஏலவே பார்த்தாயிற்று இது இறுதிப்பதிவு.கலிலியோ என்ற விஞ்ஞானி மரபு ரீதியாக நம்பிவந்த விடயங்களை எதிர்த்தான் ஆனால் அந்த மரபுரீதியான விடயங்கள் கிறீஸ்தவ சமயத்திற்குள்ளும் ஆழ ஊடுருவி இருந்ததால் கலிலியோ மீது மதத்தாக்குதல் நடத்தப்பட்டது.ஆயுள்தண்டனை வீட்டுச்சிறை எனப்பலவற்றை கலிலியோ அனுபவிக்க நேர்ந்தது கலிலியோவின் புத்தகங்களை விற்றல் வாங்குதல் மரணதண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்பட்டது.இறுதி நாளில் தொற்று நோயால் பாதிக்கபப்ட்டபோது கூட வைத்தியர் அனுமதிக்கப்படவில்லை மதம் கலிலியோவை முற்றாக அழிப்பதற்கு தன்னால் ஆனமுழுமுயற்சியையும் மேற்கொண்டு தோற்றது ஆனால் கலிலியோவும் மனமுடைந்துதான் போனார் ஒரு மனிதன் எத்தனை எதிர்ப்புக்களைத்தான் தாங்கமுடியும்? ஒருவேளை கலிலியோ கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து தான் உண்டு தன் வேலையுண்டு என்று குடும்பத்தை கவனிக்கசென்றிருந்தால் நாம் சில நூறுவருடங்கள் பின்னே இருன்திருப்போம் நல்லவேளையாக மதம் ஜெயிக்கவில்லை... கலிலியோ vs மதவாதிகள் மரபு ரீதியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரே சக்திதான் ஒரு பொருள் மீது தாக்கும் என்பதை கலிலியோ உடைத்தெறிந்தார்.அதற...