இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓளவையார் ஒருவர்தானா?-03

படம்
உறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்செருக்குடையவர் யாரையும் மதிக்கமாட்டார் ஓளவையையும் அவர் மதிக்கவில்லை.அவரது செருக்கை அடக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்தார் ஓளவையார்.ஒருசமயம் மன்னனது அவைக்குச்சென்றிருந்தபோது அங்கிருந்த புகழேந்திப்புலவருக்கு மதிப்புக்கொடுத்துவிட்டு ஒட்டக்கூத்தரை மதியாது அமர்ந்துவிட்டார். உடனே கூத்தர் "கிழவி நீ என்னை  அவமதிக்கக்காரணம் என்ன? என்றார்.உடனே நும்மை விட அறிவிற் சிறந்தவராதலின் அவ்வாறு செய்தேன்" என்றார் உடனே கூத்தர் எம்மிருவரது அறிவின் ஏற்றதாழ்ச்சிகளை உன்னால் அளவிடமுடியுமா?என்று கேட்க.ஓளவை இப்போதே அளவிட்டுக்காட்டுகின்றேன் நற்றாய் இரங்கற்றுரையில் சோழனை முன்னிலைப்படுத்தி ஈற்றடியில் திங்களின் பெயரை மூன்று முறை அமைத்து நீ ஒரு செய்யுள் பாடுபார்க்கலாம் என்றார் ஓளவை. உடனே கூத்தர் செய்யுளை விரைவாக எழுதிப்பாட ஆரம்பித்தார் அதில் தன்னைக்குழந்தையாகவும் ஓளவையை பேதையெனவும் வருமாறு... வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித் துள்ளி முகிலைக் கிழி

ஓளவையார் ஒருவர்தானா?-02

படம்
இலக்கியங்களில் ஓளவை என்னும் சொல் அன்னை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் "அம்மை என்பதன் திரிபாகிய அவ்வை என்ற சொல்லுடன் சிறப்புணர்த்தும் விகுதியாகிய ஆர் சேர்ந்து ஓளவையார் என்னும் சொல் பெண்களில் உயர்ந்தவரைக்குறிக்கின்றது." என குறிப்பிடப்பட்டுள்ளது. "அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலா வையேயிற்று ஐயைக்கண்டாயோ தோழி" இது சிலப்பதிகாரத்தில் கூறபப்ட்டது.இதில் தாய் என்னும் பொருளில் அவ்வை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மணிமேகலைக்காப்பியத்தில் "தவ்வைய ராகிய தாரையும் வீரையும அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன வாய்வ தாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் " இதில் தமக்கை என்னும் பொருளில் தவ்வை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒளவையின் வரலாறுபற்றி துணைக்கதைகளுடன் பல கதைகள் உள்ளன.திருவள்ளுவர் கதையில் ஓளவையார் பற்றிய வரலாற்றைப்பார்ப்போம். பாண்டி நாட்டில் தமிழ்ச்சங்கப்புலவர்கள் தம் புலமைச்செருக்கால் கர்வமுற்றிருந்தார்கள்.சிவன் அவர்களின் அகந்தையை அடக்க நான் முகனை திருவள்ளுவராகவும்,திரு

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து

படம்
10 வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ? 15 வயதில் : நானும் அவனும் தனியாக இருந்த  ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது. 18 வயதில் : பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன. 21 வயதில் : நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்பு

அணு vs ஓளவையார்,ஓளவையார் ஒருவர்தானா?-01

படம்
அணு என்ற விடயத்தை முன்பே ஓளவையார் கூறிவிட்டார் என்பதை ஆராய்ச்சி செய்வதற்கு முன்பாக ஓளவையார் யார்?என்பதைப்பார்த்துவிடுவோம்.சிறியவயதில் தவ்வலாக கல்வியை ஆரம்பிக்கும்போது அ,ஆ கற்பிக்கும் அதே நேரத்தில் முதன் முதலில் எமக்கு அறிமுகமான புலவர்தான் ஒளவையார்.தமிழ்ப்பாட்டி என்றழைக்கப்படுபவர்.ஆத்தி சூடி அமர்ந்த தேவனை என்று ஆரம்பிக்கும் கடவுள்வாழ்த்துடன் ஆத்திசூடியை கீச்சிட்டு கத்தி கற்றிருக்கின்றோம்.(அப்பொழுதெல்லாம் படித்தல் அல்லது பாடமாக்கல் என்றால் கத்துதல் என்றுதான் பொருள் தன் பிள்ளை படிக்கின்றது என்பதைத்தாய் அடுத்த வீதியில் இருந்து சீரியல்பார்த்துக்கொண்டே தெரிந்துகொள்ளமுடியும்...) உயிர் எழுத்துக்களைக்கற்றுக்கொண்டிருக்கும்போது எமக்கு அறிமுகமானதுதான் சமயம்,"கடவுள் எங்கும் இருக்கின்றார்","கடவுள் எல்லாம் வல்லவர்","கடவுள் எங்கும் நிறைந்தவர்","கடவுள் எல்லாம் அறிபவர்" குருளை மாணவர்களாக நாம் உரத்துக்கத்தியவை தொடரும் எதிரொலிகளாக எம்முள் சமய நம்பிக்கையை ஆழமாக ஊன்றின.அதில் கடவுள்  நிதானமாக அமர்ந்துகொண்டார்.ஓளவையார் பற்றிய கதைகள் எமக்கு இன்னமும் நினைவில் இருக்

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-01

படம்
[ரசிகர்கள் வேறு வெறியர்கள் வேறு இப்பதிவு வெறியர்களுக்குரியது] தமிழனாய் வாழப்பெருமைப்படுவோம், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றெல்லாம் வாய் கிழியக்கத்தும் நாம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மூதாதையர் சாதித்த சாதனைப் பெருமைகளின் பின்னால் நம் கையாலாகாத தனத்தை மறைத்து  கொள்ளப்போகிறோமோ தெரியவில்லை. இன்று தமிழரெல்லாம் ஆனா ஊனா என்றால் தமிழனும் சாதித்தவன் தான் என்று சில நூற்றாண்டுக்கு முன்நடந்த சரித்திரச்சான்றுகளை எடுத்துக்காட்டுவது பிள்ளை பெறாத மலடி தன் தாயும் முன்னோரும்  பிள்ளை பெற்றவர்கள் தான் என்று பெருமைப்படுவதுபோல்தான் இருக்கிறது.                                                                                                                    அதுவும் ஒருவகையில் சரிதான் நாங்கள் சாதித்திருந்தால் தானே இன்றைய சாதனைகளை இட்டு பெருமைகொள்ள. நமக்குத்தான் சாதிக்கும் எண்ணமே இல்லையே நம்மட எண்ணமெல்லாம் திரையுலக கதாநாயகர்கள் காறித்துப்பின இடத்தில் கற்கோயில் அமைப்பதில்தானே இருக்கிறது. திரையுலகுக்காக நம் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள்  ஊரூராக சாதித்துக் கொண்டிருப்பது என்ன