இடுகைகள்

history லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......

படம்
      உங்களில் பலர் " ஜோதா அக்பர்(2008)" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் செய்யப்பட்ட ஒரு திரைப்படம். உண்மையிலேயே அழகான, காதலை மையப்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது மிகையாகாது. மொகலாயப் பேரரசர் அக்பருக்கும் (இஸ்லாமியர்), ஜோதா எனும் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அவரின் ராணிக்கும் (இந்து) இடையிலான காதலை ஊடல் கலந்து ரசிக்கும் படியாகக் காட்டியிருந்தார்கள். "ஜோதா அக்பர்", காதலை விடவும் மேலதிகமாக சமயங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தது - மாமன்னர் அக்பரின் கதாபாத்திரம் மூலமாக. இது அதன் திரைவிமர்சனம் என எண்ணியிருக்கும் அன்பர்கள் என்னை மன்னித்து, தொடர்க. அக்பரின் தொலைநோக்குப் பார்வையும், ஆட்சித் திறமையும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நல்லதோர் முன்னுதாரணம். ஒரு மன்னன்- அதுவும் பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு நாட்டின் மன்னன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அக்பர் பாதுஷா 100% சரியான உதாரணம்.                        திரைப்படத்தில் ஜோதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் (ம்ம்... எப்பிடி இருந்த பொண்ணு ..

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - சனிப்பெயர்ச்சி என்ன செய்கிறது?

படம்
பிறக்கும் ஆங்கில புதுவருடத்துக்கு வெட்கமே இல்லாமல் ராசிபலன் எழுதத் தொடங்கியிருப்பார்கள் நமது சோதிடர்கள். அதை வாங்க முன்பதிவு செய்திருப்பார்கள் நமது மக்கள். ‘ஆங்கில புதுவருட சனிப்பெயர்ச்சி... ’ கேட்கவே கேவலமாக இல்லை? சனிபகவான் என்ன, மக்களை வதைப்பதற்கான கோர்ஸை ஈஸ்வரனிடம் இங்கிலிஷ் மீடியத்திலா படித்தார்? இது ஒரு கூட்டம், அடுத்தது தமிழ் புதுவருடத்தை தான் கொண்டாடுவோம், இதெல்லாம் இங்கிலிஸ்.. என்று. ஜனவரி, பெப்ரவரி என்பதை தை, மாசி என எழுதும் கூட்டம். எந்தக் கூட்டமும் எக்கேடும் கெடட்டும், உலகத்துக்கே, அல்லது பெரும்பான்மை உலகத்துக்கு பொதுவான கிரகேரியன் புதுவருடத்தை, அதன் உண்மையான அர்த்தம் தெரிந்துவிட்டு கொண்டாடுவோம், வாருங்கள். தற்போது பயன்படுத்தப்படும் கிரகரியன் கலன்டருக்கு முதல் உலகத்தில் ஜூலியன் கலண்டர் பயன்பட்டது. (அதுவரை பயன்பட்ட ரோமன் கலண்டர் சூரிய சுழற்சியிலிருந்து நான்கு மாதங்கள் பின்னால் இருந்ததால் கி மு 49 இல் ஜூலியஸ் சீசர், வானியலாளர் சொசிஜீனஸ் ஐ, புதிய கலண்டரை உருவாக்குமாறு பணித்தார். அவ்வாறு உருவாக்கப்பட்டதே ஜூலியன் கலண்டர். ) ஆனால் அது உண்மையான புவிவியல் ஒரு வருடத்

வெள்ளைமாளிகையின் கறுப்பு அடிமைகள்- ஒரு முழுத்தொகுப்பு

படம்
இன்று உலகின் அரசனாகவும் தேவைப்படுகையில் அரக்கனாகவும் திகழும் அமெரிக்காவின் அட்டகாசங்கள் சொல்லில் அடங்காது. தன் வளர்ச்சிக்காக ஏனைய நாடுகளை ஓட்ட உறிஞ்சிக் கொள்ளும் வழக்கத்தைதான் அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து தன்னை தனி நாடக பிரகனடப்படுத்திக்கொண்டிருந்த நாட்களில் இருந்து கொண்டிருக்கிறது. அன்று முதல் ஒவ்வொரு அடியையையும் தூர நோக்குடன் முன்னெடுத்து வைத்து அதில் வெற்றியும் கண்டுகொண்டு இன்று வல்லரசாக உயர்ந்து நிற்கிறது.                  ஆனால் உலக அரங்கில் இது கொண்டிருக்கும் இந்த நாட்டாமை நாற்காலி தனிய அமெரிக்கர்களின் உழைப்பினால் மட்டும் விளைந்தது அல்ல. அக்காலங்களில் செவ்விந்தியர்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்ட விளை நிலங்களில் ஆபிரிக்க அடிமைகளின் இரத்தத்தை விதைத்ததன் மூலம் ஏராளமான வருமானத்தை விவசாயத்தில் பெற்றுக்கொண்டது அமேரிக்கா. ஆனால் அமெரிக்கா தன்னை உயர்த்திக்கொள்வதற்காக செவ்விந்தியர்களை கொன்று ஆபிரிக்கர்களின் இரத்தத்தை அடியொட்ட உறிஞ்சிக்கொண்டது. அந்த வகையில் அமெரிக்காவில் கறுப்பு அடிமைகளுக்கு  நடைபெற்ற துன்பங்களையும் கொடுமைகளையும் அதிலிருந்து எப்படி அவர்கள் விடுபட்டார்கள் என்