இடுகைகள்

நுண்கலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா?

படம்
இன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. தான் உச்சத்தில் இருந்த முப்பது வருட காலத்தின் அத்தனை இளம் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் வியந்து பார்க்கவைத்த எழுத்தாளர் சுஜாதா. அவர் இறந்து இத்தனை நாட்களின் பின்னரும் அவருக்கான வீச்சு குறையாதிருப்பது தமிழ் எழுத்துலகில் அதிசயமே. ஏனெனில், பல எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவதுதான் தமிழர்களின் ஸ்டைல். உதாரணமாக, ஜெயகாந்தன் என்கிற தமிழ் இலக்கிய உலகின்... இலக்கிய உலகின் உச்சங்களில் ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பது பலருக்கு தெரியாது, அவர்களுக்கு தேவைப்படவும் இல்லை. ஆனால் சுஜாதா? இறந்த பிறகும் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை வாசிக்கலாம் என்று வந்தால் இது என்னப்பா ஆவணப்படம் மாதிரி போகிறது என்று முணுமுணுப்பது கேட்கிறது. சுஜாதா என்கிற பௌதீக மனிதரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், அல்லது எங்கே தெரிந்துகொள்ளலாம் என்பதாவது தெரிந்திருக்கும். இந்தப் பதிவு அவர் சம்பந்தப்பட்ட இருவேறு பார்வைகள

விஸ்வரூபம் - சூரியன் பார்த்து குரைக்கும் நாய்கள்...

படம்
எந்த நேரத்தில் படத்துக்கு விஸ்வரூபம் என்று கமல் பெயர் வைத்தாரோ தெரியவில்லை, படம் தொடர்பான பிரச்சனைகள் இத்தனை விஸ்வரூபம் எடுத்து அவரையும், அவர் அல்லது அவர் சார்ந்தது சார்பானவர்களையும் குடைந்து வருகிறது. முதலில் அது தொடர்பான பிரச்சனைகள் எழுந்து, தான் தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து முதலிட்டு எடுத்த படம் கையை சுட்டுவிட்டால் என்ன பண்ணுவது என்று பயந்ததால் டி டி ஹெச் முறையில் தொலைக்கட்சிகளில் படத்தை ரிலீஸ் திகதிக்கு முன் இரவில் ஒளிபரப்ப திட்டமிட்டு, அதனால் வந்த பிரச்சனைகளை தாண்டி வந்தபிறகும், இந்த முஸ்லிம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தங்களை புண்படுத்துவதாக கமல் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் ஏதாவது ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்குவது சாதாரணமாகி விட்டது. என்னய்யா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? கலை, கலைஞன் என்பதெல்லாம் காட்டாறு மாதிரி. அப்படித்தான் இருக்கும். எங்களால் தாங்க முடியாவிட்டால் ஒதுங்கிப் போய்விட வேண்டியதுதான். என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது? உங்கள் விருப்பத்துக்குத்தான் படம் எடுக்க வேண்டுமா ஒரு மகா கலைஞன்? பணத்துக்காக பெண்களது அங்கங்களை கா

தமிழர்களின் பெருமை... ஓவியமாக

படம்
தமிழர்களிடையே ஓவியக்கலைக்கு போதிய மதிப்பு இருப்பதில்லை. இது உலகத்தின் பெரும்பாலான நவீனர்களின் வழக்கம் என்று பொதுவாக இந்தக் குறைபாட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், ஓவியக்கலையில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திலேயே உலகத்தின் முக்கியமான கலைப்பீடமாக தமிழகம் இருந்துள்ளது. தஞ்சாவூர் ஓவியங்கள் உலகத்தின் முக்கியமான பாரம்பரிய சொத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது உள்ளிட்ட ஓவியக்கலையை தமிழர்கள் புறந்தள்ளி விட்டோம். தமிழிலே ஓவியர்களுக்கு மதிப்பு பெரிதாக இல்லை. அதிலும், இலங்கையில் ஏறத்தாழ துண்டாக இல்லை. (இலங்கையில் ஓவியக்கலையின் நாட்டம் குறைந்ததற்கு, ஓவியம் என்றாலே புத்தரின் சிலைகள்தான் என்பதாக உள்ள கடினமான சிங்கள ஆதிக்க பாடசாலை சிலபசும், பிள்ளை படம் கீறுவதை ரசிக்காத பெற்றோரும் காரணமாக இருக்கலாம்.) தமிழர் தம் அருங்கலைகளுள் ஒன்றான ஓவியக்கலையை மறக்க, உள்ள பல ஓவியர்களும், காலத்தின் புரிதல் இல்லாமல் அழிகிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே. இது புரியாத எந்தக்  கலையும், இனமும், மனிதரும் உலகில் நிலைக்க முடியாது. தமிழர் ஒவியத்தின் நிலையம் அ

தமிழ் சினிமாவின் பித்தலாட்டங்கள்.

படம்
தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் எல்லோருமே நாக்கையோ, அல்லது அகப்படும் எதையாவதோ பிடுங்கிக்கொண்டு சாகவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. தனிமனிதர்களின் துதிபாடி, நாயக வழிபாட்டை முன்னிறுத்தி எடுத்தால் மட்டுமே படம் ஓடும் என்கிற ஒரே ஒரு மந்திரத்தை வைத்துக்கொண்டு உலக மொக்கையாக படங்களைக் கொடுத்து வெறுப்பேற்றியதும் அல்லாது, அவை தொடர்ச்சியாக படுதோல்விகளை மட்டுமே அடைந்தாலும், தொடர்ச்சியாக – விடாப்பிடியாக அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த நிலைமையில் 2012 இன் மெகாஹிட் படமாக ஒரு இலையான் நாயகனாக நடித்த படம் பெருவெற்றி பெற்றிருக்கிறது. தமிழர்களுக்கு அறிமுகமான நாயகன் இல்லை, இயக்குனர் இல்லை, கதை இல்லை, நாயகி இல்லை, ஒப்புக்காக மூன்று காட்சிகளில் மட்டும் வரும் சந்தானம்.. ஆனால் அஜித் என்கிற மந்திரப் பெயருக்காகவே – இந்தியாவிலேயே பெரிய ஒபினிங்கை தரக்கூடிய அந்த உச்ச நட்சத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட பில்லா 2 வை மிஞ்சி வாரி எடுத்தது நான் ஈ படம் வசூலை. 6 , 000 , 000 $ செலவில் தெலுங்கில் எடுக்கப்பட இந்தப் படம் தெலுங்கில் 20 ,000,000 $ ஐயும் , தமிழில் 4 ,000,000 $ ஐயும் அள்ளிக் குவித்துள்ளது. தேவை