இடுகைகள்

நமது வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூடத்தார் கோயிலும் குமுறலில் தப்பித்த கதையும்

படம்
ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும்  சிதைந்து போகும் சின்னங்களும் - 03 எங்கள் ஊர்சுற்றலில் நடந்த அனுபவங்களுடன் வரலாறுகள் பற்றியும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் இல்லையா...??? இவ்வாறு யாழ்ப்பாணத்தின் ஊர்களையே மேய்ந்து கொண்டிருந்த நமக்கு இளவாலை எனும் ஊருக்கும் போக வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே கூடத்தார் கோயில் எனும் இந்நினைவுச்சின்னம் குறித்த கட்டுரையொன்று எங்களூர்ப் பத்திரிகைகளில் வெளியாகி இருந்ததால் அதையும்  படித்து விட்டு மிக்க ஆவலுடன் அங்கே பயணித்தோம். முன்னைய பதிவுகளில் கூறியது போல் கோப்பாய் கோட்டை ,வெடியரசன் கோட்டை என கோட்டையையே சுற்றி திரிந்து நொந்து நூலாய்ப்போன எங்களுக்கு இளவாலையில் வசந்தபுரத்திலிருந்த கூடத்தார் கோயில் எனும் சரித்திர நினைவுச் சின்னம் ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுத்தது. அது எந்தளவிற்கு இருந்ததென்றால் “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” எனும் பழமொழியின் ஆழத்தை ஆத்மசுகத்துடன் அனுபவித்து மூச்சு கூட விட முடியாதபடி மூச்சை விட்டு தப்பி ஓடி வரும்படி செய்துவிட்டு  இருந்தது.  கூடத்தார் கோயிலும் வரலாறும்                        இலங்கையின் தொல்குடி திராவிடர

எரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்

படம்
புதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும்  [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே]   யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவாக்கத்திற்காக தொடங்கப்பட்ட இச்சபையின் தலைவராக நகரபிதா சாம் சபாபதி அவர்களும் உபதலைவராக லோங் சுவாமிகளும் இருந்து கடுமையாக உழைக்கலாயினர். பல இடங்கள் நூலகத்தின் அமைவிற்காக பலதரப்பட்ட சிக்கல்களின் மத்தியில் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக அரசினர் நகரநிர்மான நிபுணர் திரு.வீரசிங்கா அவர்களின் தெரிவிற்கமைய தற்போது நூலகமுள்ள பழைய முற்றவெளி எனும் இடம் தெரியப்பட்டது. நல்ல நேரத்தில் லோங் சுவாமிகளின் ஆசியுடன் சைவாசாரமுறைப்படி அத்திவாரம் வெட்டி 29/03/1954 அன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அன்றைய நகர மேயர் சாம் சபாபதி, வணக்கத்திற்கு உரிய தந்தை லோங் சுவாமிகள், பிரித்தானியத்தானிகர் சேர்.செரில்சையஸ், அமெரிக்க தூதுவர் எச்.ஈ.பிலிப்கிகுறோவ், இந்தியத்தூதுவரின் முதற் செயலாளர் ஸ்ரீ சித்தார்த்த சாரதி, போன்றோர் திரை நீக்கம் செய்து வைத்தார்கள்.                                                             அன்றைய நாளில் நூலகத்தின் வளர்ச்சிக்காக அமெரிக்க உதவியாக 22000 டொலர்கள

யாழ்பாண நூல்நிலையம் – ஆரம்ப வரலாறு

படம்
ஓர் சமூகத்தின் சிறப்புமிக்க அடையாளமாக காணப்படுவது அச்சமூகத்தின் அறிவுத்தேடலும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்தான். அந்தவகையறாக்களில் யாழ்பாண நூல்நிலையம் என்பது வெறுமனே யாழ்பாண தமிழர்களின் அடையாளமாக மட்டும் நோக்கப்படாது ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் சாதனைச்சின்னமாக நோக்கப்படுகிறது. அதன் காரணமாகத்தான் அது தன் வர்ணப்பூச்சு சுவர்களுக்குள்ளே பல யாழ்ப்பானத்தவரின் உழைப்பை மட்டும் சுமக்காது பல எரிகாயங்களையும் சுமந்து நிற்க்கிறது. ஓரிடத்தில் ஒரு அறிவுசார்ந்த கட்டிடம் எழுகிறதென்றாலே அதன் பின்னால் அவ்விட மக்களின் கடின உழைப்பும் கடும் முயற்சியும் இருக்கிறது என்று தானே பொருள். அந்தவகையில் யாழ்பாண நூலக வரலாற்றை அரசியல் சார்ந்த காரணங்கள் அன்றி வரலாற்று நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு அறியத்தருவதே இத்தொடரின் நோக்கம். தோற்றுவாயும் தொடக்கமும் இன்று பெரியஅளவில் பல புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் தன்னுள்ளே கொண்டு இருக்கும் இந்த நூலகம் 1933 ஆம் ஆண்டு ஒரு சிறு கொட்டிலில் வாசிகசாலையாக இருந்து படிப்படியாக அறிஞர்களின் கடும் முயற்சியாலேயே இன்றைய நிலையை அடைந்துள்ளது.                            

வெடியரசன் கோட்டையா.....???? வெடிமிகு பேட்டையா.......????

படம்
ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும் சிதைந்து போகும் சின்னங்களும் - 02  போன பதிப்பில் கோப்பாய் கோட்டை பற்றியும் அங்கு சென்று நாமடைந்த புளகாங்கிதத்தையும் தெரிவித்திருந்தேன். அப்பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும். இவ்வாறு வெங்காயம் நண்பர்களுடன் நாம் சில பல ஊர்களுக்கு சென்று அடிவாங்காத குறையாய் நின்ற நிலையில் அடுத்ததாக நாம் செல்ல திட்டமிட்டிருந்த இடம்தான் ஊர்காவற்றுறையும் அதன் சிறப்பு மிக்க இடங்களும். ஒரு வழியாக ஊர்காவற்றுறைக்கு போய் சேர்ந்தோமா...........பிற ஊர்களில் நாம் பெற்ற அனுபவங்களையும் வலிகளையும் கொஞ்சமும் குறையவிடாது உயர்த்திவிட்டது அந்த ஊர். விஷ்ணு புத்திர வம்சமும் வெடியரசன் கோட்டையும்  இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களை எல்லாம் பல தமிழ் மன்னர்களும் வன்னிமைகளும் ஆண்ட அதேநேரம் அவற்றுக்கெல்லாம் தலைமை அரசாக விளங்கியது யாழ்ப்பாண இராசதானிதான். உண்மையில் யாழ்பாண அரசை பேரரரசாக கொண்டு பிற தமிழர் வாழ் பகுதிகளில் சிற்றரசுகளே நடந்து கொண்டிருந்தன. இது குறித்து நாம் யாழ்பாண இராஜ்ஜியம் எனும் தொடரில் வரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.                                          

நல்லூர் கந்தசாமி கோயில்

படம்
நல்லூர் கந்த சு வாமி கோயிலானது இலங்கை தமிழரின் மத மற்றும் கலாசார , வரலாற்று   அடையாளமாகும். இது யாழ்ப்பாணத்தின் முப்பெரும் முருகத் திருத்தலங்களுள் ஒன்றாகும். ( அன்னதானக் கந்தன் – செல்வச் சந்நிதி , அபிஷேகக் கந்தன் – மாவிட்டபுரம் , அலங்காரக் கந்தன் – நல்லூர்.) இலங்கையின் செல்வச் செழிப்புமிக்க கோயிலும் இதுவேயாகும். அத்துடன் உலகெங்கிலுமிருந்து அதிகளவு பக்தர்களை கவரும் த ல மும் இதுவே. நல்லூர் கந்தசுவாமி கோயிலானது பலதடவைகள் இடிக்கப்பட்ட வரலாறு உடையது. அவ்வாறு ஒவ்வொரு முறை இடிக்கப்படும்போதும் மீண்டும் பு துப்பொலிவுடன் அது கட்டப்பட் டு ம் வருகிறது. தற்போது காணப்படுவது நான்காம் முறை கட்டப்பட்ட கோயிலாகும். முன்னைய கோயில்களைப் பற்றியும் , அவை கட்டப்பட்ட ஆண்டு , கட்டியவர் போன்ற தகவல்கள் உறுதியானதாக கிடைக்கவில்லை. கைலாயமாலை போன்ற வரலாற்று நூல்களில் உள்ள தகவல்களின்படி முதலாவது கோயில்   கி. பி.948 இல் கோயில் கட்டப்பட்டதாக நம்ப இடமுண்டு. அது கலிங்க மாகனின் அமைச்சராக யாழ்ப்பான இராசதானியை ஆண்டவரால் கட்டப்பட்டதாக அறியக்கிடைக்கிறது. தற்போது ஆலயம் உள்ள குருக்கள் வளவு என்கிற இடத்தில் அது கட்