இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போராட்டமில்லாமல் விடுதலை இல்லை

படம்
வெள்ளை மாளிகையின் கருப்பு அடிமைகள்-05  போன பதிப்பில் அடிமைகளுக்காக போராடிய அபாலிஷனிஸ்ட் எனும் இயக்கத்தையும் அதற்கு உறுதுணையாய் நின்ற காரிசன் மற்றும் டக்ளசைப் பற்றி பார்த்தோம். அப்பதிவை வாசித்து விட்டு தொடர இங்கே கிளிக்.                 இவ்வாறு காரிசனும், டக்ளசும் இணைந்து மேற்கொண்ட பிரச்சாரங்களும் போராட்டங்களும் அமெரிக்க மக்களுக்கு அடிமைகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை தெளிவுபடுத்த தொடங்கின.                                             தங்களை போன்ற ஓர் அடிமை தப்பித்ததும் அல்லாமல் தமக்காக எல்லாம் போராட்டங்களிலும் கூட்டங்களிலும் ஈடுபடுவது கறுப்பினக் கூட்டத்தாரிடையே டக்ளசை தங்கள் மனச்சாட்சியின் உருவமாக பார்க்க வழிவகுத்தது. 1840 ஆம் ஆண்டுகளின் பின்னர் எல்லாம் கருப்பினத்தாருக்கும் அடிமைகளுக்கும் டக்ளஸ்தான் ஒரு நடமாடும் கடவுளாக தென்பட்டார். இவ்வாறு ஆங்காங்கே தலை தூக்கிய “அடிமை முறையை ஒழிப்போம்” எனும் இக்கோசம்தான் படிப்படியாக வளர்ந்து 1860  ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  அடுத்த அமெரிக்க அதிபர் யார்..?? எனும் கேள்விக்கு பதிலாக அமைந்தது. இக்காலகட்ட தேர்தலில் அடிமைகள்

முகம்மது நபி கிளம்புகின்றது வேறொரு பூதம்

படம்
ஏற்கனவே நபிகளைப்பற்றிய ஒரு ட்ரெயிலருக்கு உலகத்தை படாதபாடு படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.படத்தின் சர்ச்சையை முடித்துக்கொள்ள முனையாது சில நாடுகளில் சில  புரட்சிகரமான எழுத்தாளர்கள் நபிகளுக்கெதிரான படத்தை ஆதரித்தும் எதிர்த்துப்போராடும் முஸ்லீம்களை நையாண்டி செய்தும் தமது கருத்துக்களை வெளியிட்டு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கூத்துப்பாக்கின்றார்கள்.இதைப்பற்றிய ஒரு பதிவை முன்பே இட்டிருந்தேன்.அந்தப்பதிவில் நான் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவையும் இட்டிருந்தேன்.நபிகளுக்கெதிரான கருத்துக்களை கூறுவிட்டார்கள் நபியைஅவமானப்படுத்திவிட்டார்கள் என்று குமுறும் சிலரை விசாரித்ததில் அவர்கள் வெறும் கேள்விப்பட்டிருக்கின்றார்கள் அவளவுதான்.அந்த வீடியோவைப்பார்த்திருக்கவில்லை தாம் எதற்காக எதிர்க்கின்றோம் என்றவிடயத்தை செவிவழியாக அறிந்திருக்கின்றார்கள் அவ்வளவுதான்.பதிவின் இறுதியில் அந்த வீடியோவை யூ டியூப்பில் இருந்து  ஏன் நீக்கவேண்டும் என்பதற்காக காரணத்தையும் இறுதியில் நீக்கவேண்டும் என்றும் கூறியிருந்தேன் அந்தப்பதிவுக்கு எனக்கு நல்லபதில் கிடைத்தது. தெரியாமலே பலர் வீறுகொண்டெழுகின்றார்களே என்றுதான் லிங்கை

உழுந்து வடையில் பிரபஞ்ச ரகசியம்...

படம்
இந்து சமய விழக்களில் அதிகமாகப்பயன்படுத்தப்படுவது வடை இதில் மெது வடை கீரை வடை உழுந்துவடை என்று பல வகையறாக்கள் இருந்தாலும் இந்த ஓட்டை வடை இருக்கின்றதே அதில் இந்து சமயம் பிரபஞ்ச விடயம் ஒன்றை மறைத்துவைத்துள்ளது....ஓட்டைவடை அல்லது மெதுவடை பலரது வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அம்சம்...உழுந்துவடை சம்பல் ஒரு டி இதற்கு கே.எப்.சி யும் இணையாகாது என்பது எனது கருத்து.மேலே இந்துசமய விழாக்களில் என்று கூறியிருந்தேன்..கல்யாணவீடு,அந்தியோட்டி என்று எந்த நிகழ்விலாவது பலகாரங்கள் இருக்குமாயின் நிச்சயமாக மெதுவடை இருக்கும். நமது இந்து சமயத்தின் ஊடாக நமது அன்றாட வாழ்வின் அனைத்துவிடயங்களிலும் சம்பந்தப்பட்ட ஓட்டைவடையில் நம் முன்னோர்  ஒரு இரகசியத்தை மறைத்துவைத்துள்ளார்கள் என்று நம்முள் எத்தனை பேருக்குத்தெரியும்? இது நமக்கு மிகப்பெரிய வெட்கக்கேடு...சரி சரி வாருங்கள் நமது முன்னோரின் விஞ்ஞானத்தை அறிவோம்.......ஒரு கலக்ஸியின் பொதுவான வடிவமும் ஓட்டைவடையின் வடிவமும் ஒன்றுதான் ஒரு கலக்ஸியின் மத்தியில் ஒரு கருந்துளை இருக்கும் வடையின் மத்தியில் ஓட்டை இருக்கும்....உழுந்துவடையில் உள்ள உழுந்து துகள்கள்தான் கோடிக்கணக்கான நட்ச

எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் Batteries எப்படி இருக்கும்?

படம்
மின்கலங்கள்  மின்சக்தியை இரசாயனசக்தியாக சேமித்துவைத்திருப்பவை.முதலாவது மின்கலம்    Alessandro Volta இனால் 1800 இல் அமைக்கப்பட்டது.செப்பு, நாகத்தகடுகளுடன் மேலும் மெருகூட்டப்பட்ட வடிவம் 1836 இல் டானியல்லினால் உருவாக்கப்பட்டது.இவர்கள்தான் நமது இன்றைய மின்கலத்தின் முன்னோடிகள்.ஆரம்பத்தில் உலக அளவில் சக்திமுதலுக்காக இது பயன்படுத்தப்படாதுவிடினும் தற்பொழுது உலகம் முழுவதிலும் சக்திமுதலாகப்பயன்படுத்தப்பட்டுவருகின்றது.இதற்கு ஆதாரமாக மின்கலங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் வருடத்திற்கு 46 பில்லியன் டொலர்களை ஈட்டுகின்றன. காலாகாலமாக மின்கலங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.பயன்படுத்துவோம் எறிந்துவிடுவோம்.சில மின்கலங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றிப்பயன்படுத்தலாம்.ஆனால் எவ்வளவு காலம்தான் இப்படியே பயன்படுத்துவது.இதன் காரணமாக சில டிஸைனேர்ஸ் எதிர்கால மின்கலங்களை வடிவமைத்துள்ளார்கள்.இவை எதிர்காலத்தில் பயன்பாட்டுக்குவரலாம்.இவற்றால் சூழலுக்கு பாதிப்பும் குறைவு செலவும் மிச்சம். மின்கலத்தின் வரலாறு Wind-Up Batteries உங்களது மின்கலத்தில் சார்ஜ் முடிந்துவிட்டது என்றால் க

நடராஜர் - 6 - மதங்கள் கடந்த உன்னதம்

படம்
அறிமுகம் : ஆனந்தக் கூத்தும் அறிவியலும் பதிவு #2 - தமிழர் தலைவன் பதிவு #3 - சிதம்பரமும் திருனடனமும் பதிவு #4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள் பதிவு #5 - ஆடல் வல்லான் 6: மதம் தவிர்த்த பார்வை இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் உன்னதமான கலாசிருஷ்டியாக தெரியக்கூடியது நடராஜர் உருவம். எத்தனையோ கண்ணோட்டத்தில் எத்தனையோ உன்னதங்களை தன்னகத்தே கொண்டது அது. இறைவன், கடவுள் என்கிற பார்வையை தவிர்த்து, ஒரு இந்து அல்லாதவராக நாம் அதை பார்ப்போம். கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் 6.1: சிற்பக்கலை நடராஜர் சிற்பமானது சிக்கலான வடிவமாகும். சிற்பம் அமைக்கும் மூன்று முறைகளில் சித்திர முறைப்படியே நடராஜர் உருவம் அமைக்கப்பட வேண்டும். அதாவது முப்பரிமானத்திலே, முன்னும், பின்னும் பார்க்கக்கூடிய மாதிரி. திருவாசி வளைவு, தூக்கிய நான்கு கரங்கள், தூக்கப்பட்ட இடக்கால், விரிந்து பறக்கும் சடை, மற்றும் தோலாடைகளோடு ஒரு சிற்பத்தை முப்பரிமானத்திலே அமைப்பது என்பது ஒரு சவால். அதுவும் முழு உடலுமே ஒற்றைக் காலின் ஆதாரத்தில் நிற்பதாக அமைக்கவேண்டும். கிடை மட்டத்தில் ஐந்து சம பாகங்களாக பிரித்தால், உச்

Will smithபிறந்த நாள்வாழ்த்துக்கள்+ I, Robot

படம்
முதலில் வில்சிமித்திற்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்.. நேற்றைய தினம் சிமித்தின் 44 ஆவது பிறந்ததினம்.முழுப்பெயர் Willard Christopher Smith Jr . செப்டம்பர் 25, 1968 இல் பிறந்தவர்.புகழ்பெற்ற நடிகர் மாத்திரமல்ல பிரபல ரப் பாடகர் எந்த அளவிற்கு தெரியுமா ? இதுவரை 4 Grammy Awards வாங்கியிருக்கின்றார். 4 தடவைகள் கோல்டன் குளோப்பிற்கும் 2   தடவைகள் அக்கடமி அவார்ட்டுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர். 2007 இன்   நியூஸ்வீக் பத்திரிகை சிமித்தை the most powerful actor in Hollywood என குறிப்பிட்டுள்ளது.திரைப்படத்துறைக்கு தலைகாட்டமுன்பாக 1980 இல் The Fresh Prince என்ற பெயரில் ரப் பாடல்களை பாடிவந்தார்.பின்னர் 1990 இல்   The Fresh Prince of Bel-Air என்ற டி.வி தொடரில் நடித்தார் இதுதான் சிமித்தை பிரபலமாக்கியது.தொடர்ந்து 6 வருடங்கள் இத்தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.தொடர்ந்து அடுத்தடுத்து 8 படங்கள் தொடர் வெற்றியாகஓடிய , 100 மில்லியன் டொலர்கள் உழைத்த ஒரே ஒரு நபர் ஹொலிவூட்டில் சிமித் மட்டும்தான். இறுதிப்படமான men in black 3 உலகம் முழுவதும் 600 மில்லியனுக்குமேல் வசூலை குவித்துள்ளது.சிறந்த நடிகருக்காக 2 தடவைகள