இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை - 'நடந்தது' என்ன?

படம்
எந்த நேரமும் வேலை வெட்டி இல்லாமல் காலை எழுந்து தேநீர் குடித்துவிட்டு பேஸ்புக்கில் அமர்ந்து நாங்கள் லைக்குகள் மூலம் சிகிச்சைக்கு உதவி செய்தும், ஷேயார்கள் மூலம் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவதுமாக மனித சமுதாயத்தை காப்பாற்ற, இரண்டு தொழிலதிபர்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள் தேசத்தில் ஒரு நல்ல வேலையை செய்ய. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை கடந்த 19 ஜனவரி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் பின்னணி அத்துணை இதயபூர்வமானது. பரவசமான மனிதாபிமான நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்த ஒரு பெரிய தொடர்கதையின் பாகம் ஒன்றின் கதையின் முத்தாய்ப்பே அந்த வைத்தியசாலை திறப்பு. இந்த நல்ல காரியம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதுதான் இங்கே முக்கியம். இதுவரை இதுபற்றி அறியாதிருந்தவர்களும் அதன் அடுத்த கட்டத்தில் மனமிருந்தால் இணைந்துகொள்ளலாம் என்பதே இந்தப் பதிவின் செய்தி. எப்படி பல வியாதிகள் மனிதர்களின் மொழி, இன, பொருளாதாரப் பின்னணி பார்த்து வருவதில்லையோ, அதுபோலத்தான் அவற்றுக்கு எதிரான மனிதர்களின் போரும் இருக்கவேண்டும். எத்தனையோ மனிதர்களும