இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா?

படம்
இன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. தான் உச்சத்தில் இருந்த முப்பது வருட காலத்தின் அத்தனை இளம் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் வியந்து பார்க்கவைத்த எழுத்தாளர் சுஜாதா. அவர் இறந்து இத்தனை நாட்களின் பின்னரும் அவருக்கான வீச்சு குறையாதிருப்பது தமிழ் எழுத்துலகில் அதிசயமே. ஏனெனில், பல எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவதுதான் தமிழர்களின் ஸ்டைல். உதாரணமாக, ஜெயகாந்தன் என்கிற தமிழ் இலக்கிய உலகின்... இலக்கிய உலகின் உச்சங்களில் ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பது பலருக்கு தெரியாது, அவர்களுக்கு தேவைப்படவும் இல்லை. ஆனால் சுஜாதா? இறந்த பிறகும் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை வாசிக்கலாம் என்று வந்தால் இது என்னப்பா ஆவணப்படம் மாதிரி போகிறது என்று முணுமுணுப்பது கேட்கிறது. சுஜாதா என்கிற பௌதீக மனிதரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், அல்லது எங்கே தெரிந்துகொள்ளலாம் என்பதாவது தெரிந்திருக்கும். இந்தப் பதிவு அவர் சம்பந்தப்பட்ட இருவேறு பார்வைகள

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-03(ராக்கிங்க்)

படம்
இதன் முன்னைய பதிவில் விரிவுரைகள் முக்கியமாக அதிக பயனுள்ளதாக இருந்த பாலியல்கல்வி தொடர்பான விரிவுரைகள் தொடர்பாக பார்த்தோம் இவை முரண்பாட்டுமுகாமைத்துவம் என்ற தலைப்பினூடு நடத்தப்பட்ட விரிவுரைகள். இதே தலைபின் கீழ் அடுத்து ஒரு விரிவுரை நடத்தப்போகின்றோம் அதற்கு சாப்பாடு வழங்குமிடமான மெஸ்ஸிற்கு செல்லுமாறு கூறினார்கள்.சென்றோம் அங்கே சென்று அனைவரும் அமர்ந்தோம்  ஒவ்வொரு குழுவும் இப்போது முரண்பாட்டு முகாமைத்துவம் தொடர்பில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை செய்துகாட்டவேண்டும் என்று கூறினார்கள்.ஏ யில் இருந்து ஏஜ் வரைக்குழுக்கள் இருந்தன.ஒரு குழு முன்னே சென்று  நாடக பாணியில் ஒன்றை செய்தார்கள்  தரப்பட்ட தலைப்பு தொடர்பில் நாடகம் ஒன்றைசெய்வோம் என்று அக்குழுவைச்சேர்ந்த போய்ஸ் கூற ஆரம்பிக்க கேர்ல்ஸ் இல்லை இல்லை வேறு கொன்செப்டைசெய்வோம் என்று கருத்துமோதலில் ஈடுபட்டார்கள் முடிவில் இப்படி  கருத்துமோதலில் ஈடுபடுவதைவிடுத்து புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவேண்டுமென தமது நாடகத்தை முடித்தார்கள்.இவ்வாறு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொன்றை செய்துகாட்டினார்கள்.இவை முடிந்ததும் புரொஜக்ரரில் சிலைடர் சிலைடராக அடுத்த விரிவுரை ஆரம்பமானது.வி

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)

படம்
அந்த ரெயினிங்கில் தந்த பயிற்சிகளை ஓரளவிற்குக்கூறினேன் காலையில் தேசிய கீதம் பாடிவிட்டு.மலை வீதிகளில் ஓடினோம் வழக்கமாக பாடசாலைகளில் கொடுக்கப்படும் பயிற்சிகளே கொடுக்கப்பட்டன.என்றாலும் மலைவீதிகளில் ஓடுவது ஒன்றும் அவளவு இலகுவாக இருக்கவில்லை.ஓடி முடித்ததும் காலை சாப்பாடு பெரும்பாலும் சோறுகிடைத்தது அல்லது அரை றாத்தல் பாண் சகல்தும் முடிந்ததும்.ஒவ்வொரு குரூப்பிற்கும் வேறு வேறு இடங்களில் லெக்ஸர் நடந்தது.எமது குழுவிற்குப்பொறுப்பான அதிகாரியிம் முதல் நாள் லெக்ஸர்...அவர் சிங்களத்தில் கூற எங்களுக்கு ரான்சிலேட் செய்யப்பட்டது..இங்கே வரும்போது  நீங்கள் பெற்றோர் எல்லோருமே சற்று பயந்துகொண்டுதான் வந்திருப்பீர்கள்.பலருக்கு இதுதான் பெற்றோரைப்பிரிந்து வெளியே 10,14 நாட்களைக்கழிக்கும் முதலாவது அனுபவமாகக்கூட இருந்திருக்கும்.ஆனால் எதற்கும் பயப்படவேண்டாம் நாம் உங்களை எமது பிள்ளைகள் மாதிரித்தான் பார்த்துக்கொள்வோம். என்று கூறினார்.பின்னர் ஜென்ரல் கோப்ரல்,லெப்டினல் என்று பதவிகளின் ஓடர்களை கூறினார்கள்.அவர்களுக்கிடையிலான வேறுபாடு இராணுவ உடைகளில் உள்ள அரச இலச்சனைகள் என்பவை தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.அங்கு 3 ம

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்

படம்
காம்ப் வாசல் உள்ளே இருந்து வெளியே உண்மையில் அதன் பெயர் தலைமைத்துவப்பயிற்சி பல்கலைக்கழகத்திற்குள் உள்ளீர்க்கப்படும்மாணவர்களுக்கு தலைமைத்துவத்தையும் நேரிய சிந்தனையையும் மேம்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டபயிற்சி.இதற்கு  நம்மவர்மத்தியில் பலத்தஎதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன.   அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதை நிறுத்தாமாறு 2011 இல் கோரியது பயிற்சிக்கு சென்றமாணாவி இறந்தமையே முக்கியகாரணம்.அது தொடர்பான செய்தி( குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி ( வயது – 24 ) என்பவராவார். ஒவ்வாத பயிற்சியும், மாசு நிறைந்த சூழலில் தங்கி இருந்து அசுத்தக்காற்றினை சுவாசித்ததன் காரணமாக சுவாசப் பையினுள் கிருமிகள் புகுந்ததனாலேயே இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  ) எதிர்ப்புக்கள் அரசாங்கத்தின் மீதுகேஸ்கள் என எதுபோடப்பட்டாலும்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் மில்லியனர்

படம்
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி அடுத்த சீசனுக்கு பிரகாஸ்ராஜ் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான விளம்பரம் இடையிடையில் விஜய் டி.வியில் ஓடிக்கொண்டிருக்கின்றது. படிச்ச படிப்பு என்னைக்குமே காப்பாத்தும்... முதல் சீசனில் சூர்யா  கலக்கிசென்றிருந்தார். நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் சூரியா கண்கலங்கி  சிலபல வார்த்தைகள் பேசி அனைவருக்கும் நன்றிகூறி விடைபெற்றுசென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்த இறுதி எபிசோட்... ஆரம்பத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி அதிகவரவேற்பைப்பெற்றாலும்.பின்னர் போக போக ஒரே பாணியிலான கேள்விகளால் பலர் சலிப்படைந்தார்கள் சோ..சாதாரணமான மக்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றுவது இடையில் நின்று கோபினாத்,சிவகார்த்தி,போன்ற விஜய் ஸ்ரார்களும்,ஸ்ருதி கார்த்தி,சிவகுமார்,சுஹாசினி,ஜெயம் ரவி,சத்தியராஜ் போன்றவர்களும் நிகழ்ச்சியில் பங்குபற்றி டி.ஆர்.பியை ஓரளவு தாக்குப்பிடித்தார்கள். கோபினாத்,சிவார்த்தி இருவரும்வந்ததுடன் மட்டுமல்லாது தமது சோகவரலாறுகளைச்சொல்லி கண்ணீர்சிந்திச்சென்றார்கள்.. சிவகார்த்தி  கண்ணீர் சிந்தியது... கோபிநாத்... நீங்களும்