இடுகைகள்

இடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்லூர் கந்தசாமி கோயில்

படம்
நல்லூர் கந்த சு வாமி கோயிலானது இலங்கை தமிழரின் மத மற்றும் கலாசார , வரலாற்று   அடையாளமாகும். இது யாழ்ப்பாணத்தின் முப்பெரும் முருகத் திருத்தலங்களுள் ஒன்றாகும். ( அன்னதானக் கந்தன் – செல்வச் சந்நிதி , அபிஷேகக் கந்தன் – மாவிட்டபுரம் , அலங்காரக் கந்தன் – நல்லூர்.) இலங்கையின் செல்வச் செழிப்புமிக்க கோயிலும் இதுவேயாகும். அத்துடன் உலகெங்கிலுமிருந்து அதிகளவு பக்தர்களை கவரும் த ல மும் இதுவே. நல்லூர் கந்தசுவாமி கோயிலானது பலதடவைகள் இடிக்கப்பட்ட வரலாறு உடையது. அவ்வாறு ஒவ்வொரு முறை இடிக்கப்படும்போதும் மீண்டும் பு துப்பொலிவுடன் அது கட்டப்பட் டு ம் வருகிறது. தற்போது காணப்படுவது நான்காம் முறை கட்டப்பட்ட கோயிலாகும். முன்னைய கோயில்களைப் பற்றியும் , அவை கட்டப்பட்ட ஆண்டு , கட்டியவர் போன்ற தகவல்கள் உறுதியானதாக கிடைக்கவில்லை. கைலாயமாலை போன்ற வரலாற்று நூல்களில் உள்ள தகவல்களின்படி முதலாவது கோயில்   கி. பி.948 இல் கோயில் கட்டப்பட்டதாக நம்ப இடமுண்டு. அது கலிங்க மாகனின் அமைச்சராக யாழ்ப்பான இராசதானியை ஆண்டவரால் கட்டப்பட்டதாக அறியக்கிடைக்கிறது. தற்போது ஆலயம் உள்ள குருக்கள் வளவு என்கிற இடத்தில் அது கட்