இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்களே தமிழர்களே! (3)

படம்
அறிமுகப் பதிவு , மற்றும் முன்னைய பதிவு . இன்னும் இந்த நிலை என்றால் என்ன பெருமை? ஈமம் மனிதனின் இறப்புக்குப்பின் தாழிகளில் அந்த உடலை இட்டு அடக்கம் செய்வதே தமிழர் பண்பாடு. அதுதான் சூழலுக்கு நல்லது. பொம்பரிப்பு உள்ளிட்ட இலங்கையின் பல பிரதேசங்களில் ஈமத் தாழிகள் கிடைத்துள்ளன. எரிப்பது என்பது பார்ப்பன சார்பான ஆரிய அடிப்படை இந்துமதக் கொள்கை. சூழலுக்கும் பாதிப்பானது. மண்ணிலிருந்தே நாம் அனைத்தையும் எடுத்துக்கொள்ளுகிறோம். எனவே எமது வாழ்க்கை முடிந்ததும் மண்ணுக்கே நம்மை வழங்குகிறோம் என்கிற உன்னதமான, இயற்கைக்கு உரமாகிற கொள்கை அது. அதை விட்டு, காற்றுக்கு SO 2 CO 2   உள்ளிட்ட எத்தனையோ ஆபத்துக்களை விட்டுச்செல்லும் எரித்தலை செய்கிறோம் நாம். தாலி தமிழர் அடையாளமாக, குடும்ப வாழ்வின் குறியீடாக தாலி ஒரு தமிழர் உன்னதம் என நாம் அனைவரும் இறுமாந்திருக்கிறோம். ஆனால் பத்தாம் நூற்றாண்டுவரை தாலி கட்டும் வழக்கம் தமிழரிடையே நிலவியதற்கு எவ்வித சான்றும் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்திலேகூட தாலி கட்டப்படுவதாக எங்கிலுமே கூறப்படவில்லை. அகழ்வாராய்ச்சிகளில் தாலி சம்பந்தப்பட்ட எதுவுமே கண்டுபி

பசுமாடு தமிழிலே அம்மா என்கிறது – தமிழ் உறவுப் பெயர்கள்

படம்
பசு அம்மா என்று கூப்பிடுகிறது, தமிழா! நீ என் ஆங்கிலத்திலே மம்மி என்று கூப்பிடுகிறாய்? என்று ஒரு கூட்டம் கத்திக் கொண்டிருக்கிறது. தனது அம்மாவை நாகரிகம் கருதி மம்மி என்று கூப்பிடும் கேவலம் கேட்ட நாய்களுக்கு பரிந்து பேச நான் இங்கே வரவில்லை. ஆனால் அம்மா என்பது ஒரு தமிழ் சொல் அல்ல, அதையும் தாண்டி உன்னதமான உலகின் முதல் ஒலி என்பதை கூறவருகிறேன். ஏதோ தமிழில் மட்டும்தான் அம்மா, மிச்ச எல்லாமே சும்மா என மொக்கை போடாதீர்கள் நண்பர்களே! மம்மியும் அம்மாவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஒரே ஒலிதான். இன்னொரு விடயம், அம்மா என்பதற்குரிய உண்மையான தமிழ்ச் சொல், தாய் என்பதுதான். ஆகவே, தமிழை கட்டிக் காக்க விரும்பினால் உங்கள் அம்மாவை தாயே என்று அழையுங்கள். என் மாடு கூப்பிடுவதுபோல   கூப்பிடுகிறீர்கள்? உலகத்தின் எந்த இனத்துக்குமே பெற்றவளை குறிக்கும் ஒலி பொதுவானதுதான். ஒரு பிறந்த குழந்தையால் சிரமப்படாது சொல்லக்கூடிய ஒரே வார்த்தை “ம்மா ” என்பதுதான். காற்றோ, அழுத்தமோ இல்லாமல் மூடி வைத்திருக்கும் வாயை ‘அ‘ அல்லது ‘இ ’ என எளிதாக திறக்கும்போது வருகிற ஒலிதான் ‘ம்மா ’ , அல்லது ‘ம்மி ’ . உலகத்தின் சகல மானுட இ