இடுகைகள்

legends லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலிலியோ vs மதவாதிகள்-01

படம்
கலிலியோ கலிலி இத்தாலியை சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானி.பௌதிகவியல் முன்னோடிகளுள் முக்கியமானவர். நியூற்றனுக்கு முற்பட்டவர்.பூமி பிரபஞ்சத்தின் மையம் எனவும் பூமியைச்சுற்றித்தான் சூரியன் ஏனைய கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன  என நம்பிக்கொண்டிருந்தகாலம் அது.அக்காலத்தில் முக்கிய புள்ளிகள் யாராவது எதையாவது சிந்தித்துக்கூறினால் உடனே ஏற்றுக்கொள்வார்கள்.இக்காலத்தில் போகிற போக்கில் ஒன்றைக்கூறிவிட்டு விஞ்ஞானிகளே இதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று கூறியதும் மக்கள் நம்பவில்லையா?அதே மாதிரித்தான்.மக்களோ வேறுயாரொருவரோ  கூறியவற்றை குறைந்தபட்ச பரிசோதனைக்குக்கூட உட்படுத்த மாட்டார்கள்.அதுவும் கூறுபவற்றை மதத்திற்கூடாக எடுத்துக்கூறினால் மறுபேச்சிற்கே இடமில்லை.உடனே அதை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்.(இப்போதும்தான்) தங்களது மத நம்பிக்கை காரணமாக கலிலியோவின் விஞ்ஞானக்கருத்துக்களை கொள்கைகளை கண்டுபிடிப்புக்களை சிந்தித்துப்பார்க்கக்கூட மறுப்புத்தெரிவித்துவந்தார்கள் மதவாதிகள். மத நம்பிக்கையாளர்களுக்கும் கலிலியோவிற்கும் இடையில் நடைபெற்ற மோதல்தான் கலிலியோவை உலகறியச்செய்வதில் முக்கிய பங்குவகித்தன.தான் கண்டு பிடிப்பவற்றை

கணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்

படம்
கணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் !!..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப்பில் ஆழ்த்திய ஒப்பற்ற பெரும் கணிதமேதை இவர்  .  1914 முதல் 1918 வரை உள்ள சில வருடங்களில்  3000  இற்கும் அதிகமான புதிய கணிதத் தேற்றங்களைக் கண்டு பிடித்தவர்  .  இங்கிலாந்தின்   F.R.S  { Fellow of Royal Society } விருதையும்  ,  இங்கிலாந்து  Trinity  கல்லூரியின்  Fellow  of  Trinity  College விருதையும் ஒருங்கே பெற்ற முதல் இந்தியன்  .  தமிழ்நாட்டில் பிறந்த ஒரு தமிழரான இவரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்  ?  இவரது வாழ்க்கை வரலாற்றை அலசுவதே இத் தொடர்  .        ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 டிசம்பர் 22 இல் தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார்  . வளர்ந்ததும் படித்ததும் கும்பகோணத்தில்  .  தந்தையார் பெயர் கும்பகோணம் ஸ்ரீனிவாசயங்க்கார்  ,  தாயார் ஈரோடு கோமளத்தம்மாள்  .  மிகவும் வறுமையான பிராமணக் குடும்பம்  .    இவரது அபாரக் கணிதத்திறன் சிறு வயதிலேயே வெளிப்பட்டது  .  சிறுவயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்

வாலி-வாலில்லையே எப்படி வாலியானாய்?

படம்
ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின் படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு நக்கலாக வேறொன்றையும் சொன்னார். “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?” அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில் இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார். “வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா? காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?” All India Radio வில் ஆரம்பத்தில் பணிபுரிந்தவர் பின்னர் நண்பர்களுடன் நேதாஜி என்ற பத்திரிகையை வெளியிட்டார் முதல் பிரதியை வெளியிட்டவர் யார் தெரியுமா கல்கி. அந்தகையெழுத்துப்பத்திரிகையில் சேர்ந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவர்தான் எழுத்தாளர் சுஜாதா. இயற் பெயர் ரங்கராஜன் சைக்கிள் காப்பில் ஆட்டோ ஓட்டுவதில் வாலி வல்லவர் உதாரணம் வேண்டுமா? தசாவதாரம் படத்தில் கல்லைமட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடல் கேட்டிருப்பீர்கள்..அதில் ஒரு வரிவரும் நீங்கள் கவனித்திருக்கலாம்.." நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன்தான்" எந்த ரங்கராஜன் என்று நினை