இடுகைகள்

religion லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

களை கட்டாத நல்லூர் திருவிழா ~ கல்லா கட்டும் கொள்ளையர்கள்?

படம்
நிலவின் ஒளியில் உயிர்த்தெழும் கோபுரம். அண்மைக்காலமாக நமக்கு எதை எதிர்பார்த்தாலுமே அது சப்பென்று முடிகிறது. அதுக்காக நல்லூர் கூடவா? என்னவாயிற்று இந்தமுறை? நல்லூர் திருவிழாவை நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் கண்டுகளிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக கால வரையறையற்ற விடுமுறை வேறு வழங்கப்பட்டுள்ள நிலைமையில் இது என்ன கொடுமை? நல்லூரானின் அருட்கடாட்சத்தை பெற்று வாழ்வில் உய்யும் பொருட்டு அங்கே போகும் உண்மையான பக்தர்கள் எண்ணிக்கை ஐயரையும் சேர்த்து இருபத்தி இரண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த எண்ணிக்கை கடந்த முப்பது வருடமாக மாறவில்லை என்பதுவும் வேறுகதை. ஆனால் நல்லூர் என்பது என்ன?  'அந்த' இருபத்திரண்டு பேர். அது யாழ்ப்பாணத்தின் அடையாளம். சுற்றுலாத்தலம். வரலாறு. ஆண்டுதோறும் உலகெங்கிலும் சிதறிக்கிடக்கும் யாழ்ப்பாணத்தார் சொந்த மண்ணில் குவிவதற்காக நடத்தப்படும் 25 நாள் திருவிழாதான் இலங்கைத் தமிழர்களின் மிக முக்கியமான நிகழ்ச்சி. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு இந்தமுறை ஈ காக்காவைக்கூட காணோமே? இத்தனைக்கும் உலகத்திலுள்ள ‘வெளிநாட்டுக்காரர் ’ எல்லாம் வேறு இங்கேதான்