இடுகைகள்

யாழ்ப்பாண சாப்பாடு : பசி மயக்கத்திலே ஒரு அலைச்சல்..

படம்
(நாக்கில் எச்சில் ஒழுக..)கடல்மட்டத்துக்கு கீழே வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்தவற்றின் கறிகள். இந்தப் பதிவுடைய முன்னைய பதிவு இங்கே உள்ளது. அதற்கு இத்தனை ஆதரவு வரும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தமிழனின் உணவு சார்ந்த பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றி விட்டோம் நாங்கள். உண்மையில் இந்தப் பதிவுகள் எங்களது கடந்த பலகால யாழ்ப்பாண சாப்பாட்டுக்கடை அனுபவங்களைப் பற்றிய ஒரு பகிர்வு. (அதுவும் முக்கியமாக சென்ற வருட நடுப்பகுதியில் எமது வலைத்தளப் பதிவர்கள் நால்வர் யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்லும், அங்கெல்லாமுள்ள உணவுக் கடைகளில் சாப்பிடும் அனுபவத்தை பெற்றதால்.) எமக்கு தகுதியும், காலமும் வாய்த்தால், யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கங்கள் பற்றிய விரிவான பதிவை எழுதுகிறோம்.  இப்போதைக்கு – முப்பது ஊர்களில் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டவர்கள் என்கிற தகுதியில் எழுதப்பட்ட -  முன்னைய பதிவின் தொடர்ச்சி... யாழ் நகரத்திலே சாப்பாட்டுக் கடைகள் மூன்று பெரிய பிரிவுகளாக இருக்கின்றன. நகரின் புறப் பகுதியிலே பிரபலமாக இருக்கும் அசைவக் கடைகள் , ( பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்துக்கும் , படிக்கும்

யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகள் : பசியுடன் ஒரு ஆய்வு.

படம்
கொழும்பின் தெருவோர சாப்பாட்டுக்கடைகளில் சாப்பிட்டு வயிறு பழுதாகி, ‘மடைதிறந்து பாயும் நதி அலைதான்... ’ என்கிற நிலைமையில் இருக்கும்போது இந்தப் பதிவை எழுதவேண்டிய நிலைமையில் இருக்கிறேன். காலத்தின் கோலம். ஒருவேளை இந்த மொக்கை சாப்பாடுகளால் மனமுடைந்து, அடிக்கடி சொம்போடு காணாமல்போகவேண்டிய நிலைமைதான் பழசை அசைபோடும் வகையில் யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக்கடைகளைப்ப்றி எண்ண வைத்ததோ, தெரியவில்லை. கொழும்பின் எந்த உணவுக் கடைக்கும், அது ஐந்து நட்சத்திர ஹோட்டலானாலும் சரி, பத்துக்கு பத்து கடையில் அப்பம் சுட்டு விற்கும் கடையாகட்டும், ஒரு ஒற்றுமை உண்டு. அவரின் மலசலகூடமும், சாப்பாட்டு மேசையும் ஒரே சுத்தத்தில் இருக்கும். இதிலே முன்னையது நமது ஒருவருட பாதீட்டை ஒரே நாளிலே முடிக்குமாதலால், மிளகாய், எண்ணை, பழைய மாவில் செய்த பட்டப்பழைய பண்டங்கள், முகத்துராஞ்சிப் பெண்களின் நடமாட்டம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்த மொக்கை கடைகளிலே சாப்பிட வேண்டி வருகிறது. இது ஆப்பை தேடிப்போய் உட்காரும் வேலைதான் என்றாலும் வேறு வழி இல்லை அமைச்சரே. சாப்பாட்டுக்கு என்று யாழ்ப்பாணத்துக்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது. அது உ