வரலாற்றின் மிகவும்மோசமான சித்ரவதை கருவிகள்-02
இது இரண்டாவது பதிவு முதல்பதிவிற்கு இங்கே கிளிக். வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட கொலைக்கருவிகளில் சிலவற்றை சென்றபதிவில்பார்த்தோம். ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கானவர்களை இவை பலிவாங்கியிருக்கின்றன.குற்றவாளிகள் துரோகிகளைப்பலிவாங்கியவர்களுடன் நிறுத்திக்கொள்ளாமல் தம்மைக்கண்டுபிடித்தவர்களையும் சேர்த்து இக்கருவிகள் பலிவாங்கி உள்ளன.இப்பொழுது இக்கருவிகளை பார்வைக்காக மியூசியத்தில் வைத்திருக்கின்றார்கள்.இதற்காக இக்கருவிகள் எல்லாம் வழக்கொழிந்துவிட்டதாக கருதவேண்டாம்.இப்பொழுது உலகப்புகழ்பெற்ற உளவு ஸ்தாபனங்கள்,இராணுவங்களில் பயன்படுத்தப்படும் கொலைக்கருவிகள்,சித்ரவதைக்கருவிகளின் மூதாதையர்கள் இவர்கள்தான்.தமது அடுத்த தலைமுறையினூடாக இவை இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.ஹிட்லரின் சித்ரவதைக்கூடத்தை அலசினால் இதே மாதிரியான 1000 கருவிகளைப்பற்றிய பதிவைஇடலாம்.இப்பொழுது ஏனைய கருவிகளைப்பார்ப்போம்.
Scavenger’s Daughter
இதைக்கண்டுபிடித்தவர் Scavenger. 8 ஆம் ஹென்றியின் காலத்தில் இக்கருவிகண்டுபிடிக்கப்பட்டது.படத்தில் காட்டியதுபோல் குற்றவாளியை முட்டிபோட்டு கருவியில் இருக்கும் 2 உலோக கேடர்களுக்கிடையில் இருத்திவிட்டு சிறிது சிறிதாக கருவி இறுக்கப்படும்.அழுத்தம் அதிகரிக்க குற்றவாளியின் விலா என்புகள் உடைந்துபோகும்.முள்ளந்தண்டு விலகவும் வாய்ப்புக்கள் உள்ளன.இந்தக்கருவியின் மூலம் அழுத்தத்தை அதிகரிக்கும் போது குற்றவாளியின் நகம்,வாய்,மூக்கினால் இரத்தம் பீறிடும்.இங்கிலாந்தில் புரொடஸ்தாந்த் மதத்தவர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டது.
Breast Ripper
பெண்குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்குவதற்காக இது கண்டுபிடிக்கப்பட்டது.மதங்களுக்கு எதிரான கொள்கை, நிந்தித்தல், விபச்சாரம், சுய கருக்கலைத்தல், பாலுணர்வைத்தூண்டல்,துரோகம் போன்ற குற்றங்களில் ஈடுபடும் பெண்களைத்தண்டிப்பதற்கு இக்கருவி பயன்படுத்தப்பட்டது.சுவரில் இக்கருவியை நிலையாக மாட்டிவிடுவார்கள்.பெண்களை மக்கள் முன்னே நிர்வாணமாக்கி அவர்களுடைய மார்பை இக்கருவியில் பொருத்திவிடுவார்கள்.இதன் கூர்மையான முனை மார்பினுள் நல்ல ஆழமாக உள்ளே செல்ல இரத்தம் பீறிடும்.நன்றாக கருவி மார்பினுள் பொருந்தியதும்.பெண்ணை சடுதியாக கருவியை விட்டு வெளியே இழுத்து எடுப்பார்கள்.மார்பு துண்டாகி கிழிந்துவிடும். ரோமில் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டன.குற்றமிழைத்தபெண்களை வண்புணர்வில் ஈடுபடுமாறு வீரர்களை ஏவுதல்.பெண்ணை விபச்சாரத்தில் வலிந்து ஈடுபடுத்தலும் தண்டனைகளாக அமைந்தன.
The Pear of Anguish
இது பொதுவாக பெண்குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்குவதற்காக பயன்படுத்தப்படும் கருவி.மிகவும் கொடூரமான வலியையும் மரணத்தையும் வழங்கக்கூடியது.3கூர்மையான உலோக இதழ்களைக்கொண்டது.ஒரு ஸ்பிங்க் மூலம் அழுத்தம்கொடுக்கப்பட்டு இதழ்கள் மூடப்பட்டிருக்கும்.இதில் இருக்கும் ஒரு ஆளியை அழுத்தியவுடன் வலுவான விசையுடன் திறந்துகொள்ளும்.குற்றமிழைக்கும் பெண்களின் பெண்குறிக்குள் இதை செலுத்திய பின் ஆளியை அழுத்திவிடுவார்கள்.அல்லது தொண்டைக்குள் இதை செலுத்தி ஆளியை அழுத்திவிடுவார்கள்.உலோக இதழ்கள் சடுதியாக விரிந்து உள்ளே இருக்கும் அங்கங்களை கிழித்தெறிந்துவிடும்.பின்னர் உருவி வெளியே இக்கருவியை எடுப்பார்கள்.மிகவும் கொடூரமான தண்டனைமுறை இது.
Chastity belts
தனவான்கள்,கனவான்கள்,அரச குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவர்கள் தாம் வெளியூர் செல்லும்போது வேறு நாடுகளுக்கு செல்லும்போது தமது மனைவிகளை/மனைவியை பாதுகாப்பதற்காக/அவளது நடத்தையைக்கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கருவி.கணவன் இல்லாத மாற்றானுடன் உடலுறவுகொள்ள முயன்றால் ஆடவனின் கதி அதோ கதிதான்.இதை அணிபவருக்கு மிகுந்த அசௌகரியமாக இருக்கும்.இதற்கு பூட்டும் உள்ளது.பூட்டிவிட்டு திறப்பை கொண்டுசென்றுவிடுவார்கள்.
கழுவில் ஏற்றல்
Vlad the Impaler என்ற மன்னனை அறிந்திருக்கின்றீர்களா? இவனைத்தான் மக்கள் ரெகுல்லா என்று அழைத்தார்கள்.15 ஆம் நூற்றாண்டில் ரொமேனியாவில் வாழ்ந்த கொடுங்கோலன் இவன்.யார் எந்த சிறுதவற்றை செய்தாலும் கழுவில் ஏற்றுவதுதான் இவனது முதல் வேலை.கூரான முனையைக்கொண்ட உலோக தூணில் குற்றவாளியை குதவழியாக ஏற்றிவிடுவார்கள்.அது தலைவழியாக வெளியேவரும் ஆனால் உடனடியாக இது நிகழாது.குற்றவாளியின் நிறைதான் இங்கு கொலைக்கருவி.குற்றவாளியின் நிறைகாரணமாக கொஞ்சம் கொஞ்சமாக கூர்முனை உடலினூடு தலையை நோக்கி நகரும்.குற்றவாளி இவ்வாறு இறப்பதற்கு குறைந்தது 3 நாட்கள் எடுக்கும்.இவ்வாறு ரெகுல்லா அரசனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம்.
எலிகளைப்பயன்படுத்தல்
இத்தண்டனை முறை சீனாவில் பயன்படுத்தப்பட்டது.குற்றவாளையின் வயிறு, நெஞ்சுப்பகுதி மீது கூடு ஒன்றைவைப்பார்கள்.அதற்குள் பெரிய எலிகளைப்போட்டுவிடுவார்கள்.பின்னர் கூடையின்மேல் ஒரு ஜாடியை வைத்து அதில் தீயைமூட்டிவிடுவார்கள்.எலிகள் உடலைத்துளைத்துக்கொண்டு மறுபகுதியால்வெளியேறும்.இதுவும் கொடூரமானது.
Judas Cradle
கழுவிலேற்றி ஒருவரைக்கொல்வதைவிட இது வன்மம் குறைந்ததுதான் அதற்காக இதை சாதாரணமாக மதிப்பிடக்கூடாது.இங்கும் குற்றவாளியின் நிறைதான் குற்றவாளியை கொல்வதற்கு பெரிதும் பயன்படுகின்றது.
குற்றவாளையை படத்தில் காட்டியுள்ளதுபோல் கட்டி மேலிருந்து சடுதியாக இறக்குவார்கள்.இந்த கருவியின் உச்சியில் காணப்படும் பிரமிட் போன்ற கூரான பகுதி.ஆணகளாயின் குதவழியினலும் பெண் குற்றவாளியாயின் பெண்குறியையும் குறிவைத்தே இறக்கப்படும்.நீண்ட நேரம் குற்றவாளி வலியால் கத்திக்கொண்டிருப்பார்.இந்த தண்டனைமுறையில் குற்றவாளி நிர்வாணமாகவே நடத்தப்படுவார்.சிலவேளைகளில் குற்ற்வாளியின் கால்களில் அதிக எடைகளை கட்டிய பின் மேலே உயர்த்தி பிரமிட் உருவான முனைமீது சடுதியாக இறக்குவார்கள்.இந்த கருவியை அரிதாகவே சுத்தமாக்குவார்கள்.இதனால் அடுத்து தண்டனையைப்பெறுபவருக்கு தொற்றுமேற்படும்.
The Spanish Donkey
தண்டனைமுறை படத்தில் காட்டியதுபோல்தான். குற்றவாளியை நிர்வாணமாக்கி கழுதையின்மேல் சவாரி செய்வதை போன்று கூர்மையான கருவி மீது அமர்த்திவிடுவார்கள்.பின்னர் குற்றவாளியின் கால்களில் நிறைகளை தொங்கவிடுவார்கள்.நிறையை அதிகரித்துக்கொண்டே செல்வார்கள்.இது உண்மையை வரவழைக்க சித்ரவதைக்கருவியாக பயன்படுத்தப்படுகின்றது.
உயிருடன் தோலை உரித்தல்
இது மிகவும் கொடூரமானது.குற்றவாளியின் கை,கால்கள் வலைமையாக கட்டப்பட்டிருக்கும்.குற்றவாளியின் தோலை சிறியகத்தியின் உதவியுடன் கால்களில் இருந்து தலையை நோக்கி உரிப்பார்கள்.சில வேளைகளில் குற்றவாளியின் முகத்தோலை முதலில் உரித்துவிடுவார்கள்.வழக்கமாக குற்றவாளிகள் தமது இடுப்புப்பகுதியின் தோல் உரிபடும்போதே இறந்துவிடுவார்கள்.
The Crocodile Tube
குற்றவாளி உள்ளே நுழையக்கூடியவிதத்தில் ஒரு டியூப்போன்ற அமைப்பை செய்திருப்பார்கள் அதற்குள் படத்தில் காட்டப்பட்ட அமைப்பு செய்யப்பட்டிருக்கும்.குற்றவாளியின் தலை அல்லது கால்கள் இதற்குள் பொருத்தப்படும்.அதன் பின்னர் டியூப்பின் அடியில் தீயைவைத்துவிடுவார்கள்.

The Knee Splitter
இது ஸ்பானிஸ் கருவி.இது மூட்டுக்களை பயனற்றதாக்கப்பயன்படுகின்றது.குற்றவாளியின் முட்டியில் இதைப்பொருத்தி சிறிது சிறிதாக இடைத்தூரத்தைக்குறைப்பார்கள்.கூர்மையான பற்கள் போன்றபகுதி முட்டியினுள் சிறிது சிறிதாக உள்ளே ஏறும்.இதை கால் முட்டி தவிர்ந்த ஏனைய மூட்டுக்களை செயலற்றதாக்குவதற்குப்பயன்படுகின்றது.இக் கருவியின் உதவியுடன் மூட்டு தாக்கப்பட்டால் நிச்சயம் செயலற்றதாகிவிடும்.மூட்டிருந்து பயனில்லை.இக்கருவி கொலைக்கருவி அல்ல.ஆனால் கொடூரமான வலியைக்கொடுக்கக்கூடியது.
Cat’s Paw
இதுவும் ஸ்பானிய கொலைக்கருவிதான்.குற்றவாளியை அவனது கைகளை கொண்டு சித்ரவதை செய்வதற்கு இக்கருவி பயன்படுத்தப்பட்டது.அதாவது அவனது கைகளில் இருந்து எலும்புகளை தனியே பிய்த்து எடுப்பதற்கு இதை பயன்படுத்தினார்கள்.
சில மேலதிக தகவல்கள்...
கருத்துகள்
கருத்துரையிடுக