உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?
2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியாவிட்டால் என்ன ஆகும்? 2013 செப்டெம்பர் 11 இல் உலகத்தில் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறக்கும். * * * 2012 இல் உலகம் அழியப்போகிறது, உலக்கை நெளியப்போகிறது என ஒரு கூட்டம் கதறு கதறு என்று கதறுகிறது. மாயன்கள் சொல்லிவிட்டார்களாம், மாமா பையன்கள் அள்ளிவிட்டார்களாம் என்று போட்டு தாளிக்கிரார்கள். உபகதைகளாக, உலகமே அழிந்து ஒரு மாதம் கழித்துத்தான் அவுஸ்திரேலியா அழியும், உலக அழிவுக்கு மூன்று நாட்கள் முன்னரே சூரியன் தெரியாமல் போய்விடும் (முன்னர் சொன்ன ஜோக்கை சாத்தியமாக்க.) என்று ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கடுப்பெத்துகிறார் யுவர் ஆனார் ஆகத்தான் இருந்தாலும், எந்தப் பதிவையும் (இனியாவது) மென்மையாக டீல் பண்ணவேண்டும் என வெங்காயம் மேலிட வெங்காயங்கள் முடிவெடுத்துள்ளதால், சற்று காமெடியாகவே ஆராய்வோம். ஆனால், அதற்கு முன்னர், நாசா விட்டுள்ள ஒரு அறிக்கையை பார்ப்போம். அமெரிக்கர்களைத்தவிர வேறு எந்த சக்தியாலும் உலகத்தை அழிக்க முடியாது, அதற்கு விடவும் மாட்டோம் என்பதாக, எதோ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்கிற மாதிரி நாசா ஒரு