ரஜனியின் நரித்தனம்

பேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவே இன்னொன்றையும் பகிர்ந்திருந்தார்கள் அவரை ரஜனி தன் தத்து தந்தையாக ஏற்றுள்ளார் என்று.இணையத்தில் தேடியதில்  பாலம் கல்யாண சுந்தரம் பற்றிக் கிடைத்த தகவல்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் மனம்போல தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவுவதில், தான் சம்பாதித்த பணத்தை மற்றவருக்கு கொடுத்து உதவும் "தர்மவான்" திரு. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இவரைப் பற்றி......


இவரின் சொந்த ஊர் ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கருவேலங்குளம். இவரது தந்தை பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. இவர்



* "பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.



* கற்பனை செய்துகூட பார்க்கவியலாத கனவு மனிதராக காணப்படுகிறார்.



* தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்காக தந்தவர்.



அமெரிக்கா வழங்கிய 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தவர்.



* ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து அதன் வருமானத்தை மற்ற நற்பணிகளுக்காக கொடுத்தவர்.



* சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். தன்னை சந்திக்க வரும் அறிஞர் பெருமக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய அறையில் தங்கி உள்ளார்.



இவருடைய பொது சேவைகள்



1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்



2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்



3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.



4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.



பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்)



தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.



மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தாலல் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.



இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.



கல்வியில் ஒரு நாடு தன்னிறைவு பெற்றால் எல்லா வளங்களும்தானே வந்து சேரும். இது அரசு ஊழியர்களின் காதில் ஏறுமா?



இவரை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தை தெரிந்து கொள்ளலாமா?



மாண்புமிகு டாக்டர் சா. ஜெகத்ரட்சன் எம்.ஏ., டி. லிட்.,



பாலம் ஐயா அவர்களை போல் ஒரு மனிதரை காண்பது அரிது. அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன். சாதனையாளர்களின் சாதனையாளர் அவர்.



பாரத ரத்னா ஏ.பி. ஜே. அப்துல்கலாம், முன்னாள் குடியரசு தலைவர்



தன்னலம் இல்லாமல் வாழ்வது சிறப்பான பெருவாழ்வாகும். இறைவன் பா. கல்யாண சுந்தரத்திற்கு அந்த அரும்பெறும் வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். அவர் நிழலில் பலர் சிறப்படைந்துள்ளனர்.



பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள் - (1-5-1963)



இந்தியாவிலே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளித்த முதல் மாணவன் என்ற வகையில் நமது நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு தங்கம் வழங்கிய மாணவர் கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.



ஆளுநர் பாத்திமா பீவி (முன்னாள் தமிழக ஆளுநர்) (15.8.99)



நீதி மிகுந்த உங்கள் வாழ்க்கை மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.



 கலைஞர்:(முன்னாள் தமிழக முதல்வர்)



அறிவு பரப்பும் ஆக்க பணியில் அயராது உழைக்கும் திரு கல்யாண சுந்தரனாரின் கடமை உணர்வு பாராட்டுதற்குரியது.



நீதிபதி நடராஜன் (உச்சநீதிமன்ற நீதிபதி) (ஓய்வு)



நல்ல தலைமை பண்புகளுடன் ஏராளமான இளைஞர்களையும் மாணவ மாணவிகளையும் ஒருங்கினைத்து பா. க., செய்து வரும் சேவைகள் நிச்சயம் ஒரு சமுதாய மாறுதலை எற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.



நீதிபதி மோகன் (உச்ச நீதிமன்ற நீதிபதி) - (ஓய்வு)



பிறப்பாலே தமிழன், தொழிலால் கொடை வள்ளல், இமயம் போன்ற உயர்ந்த உள்ளம் கொண்ட கல்யாண சுந்தரம் 21ம் நூற்றாண்டின் சாதனை சக்கரவர்த்தி என்றால் மிகையல்ல.



இப்படி பல அறிஞர் நீதியரசர்கள், அரும்பெரும் தலைவர்களால் பாராட்டு பெற்ற போதும், மிகவும் எளிமையாக, அடக்கமாக, ஊருக்கு உழைக்கும் உத்தமனாக, உயர்ந்து மற்றவருக்கு பாடமாக வாழும் பா. கல்யாண சுந்தரம் அவர்களை வாழ்த்துவோம்.

http://unmaichudum.blogspot.com


ரஜினியின் தத்து தந்தை"


இவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவிர்கள்.



இவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் 

செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே சம்பாதித்த அணைத்து பணத்தையும் சமூக சேவைக்கு வழங்கிய முதல் நபர் இவர் தான். 


மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர். 



நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்



அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர்.



இவரை பாராட்டி ஐ நா சபை "one of the Outstanding People of the 20th Century " என்ற பட்டமளித்து கவரவித்துள்ளது. அமெரிக்கா இவருக்கு "Man of the Millennium " என்று பட்டமும் 30 கோடி பரிசு பணமும் வழங்கியது அந்த 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து விட்டார். 



இவருடைய பொது சேவைகள்



1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்



2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்



3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.



4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.



இவரை பற்றி கேள்வி பட்ட நம் தலைவர் என்ன செய்தார் தெரியுமா? 



சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி சிறிய அறையில் தங்கியிருக்கிறார்.



தான் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் வெளிய சொல்லாத நம் தலைவர், இதையும் வெளிய சொல்ல வில்லை, பின்னர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களே ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்.



நிருபர் : “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?”



ஐயா : ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!”



நிருபர் : “உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்”



ஐயா : “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?”



நிருபர் : “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்”



ஐயா : “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது”



நிருபர் : “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!” 



ஐயா : “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே. நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!"



நிருபர் : வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்



ஐயா : "தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்."



நிருபர் : “என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?”



ஐயா : “உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!”



இவர்தான் திரு. பாலம் கல்யாண சுந்தரம்.



பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்) :



தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.



மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தால் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.



இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.



இவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். நம் தலைவரின் மனதும் அவரது நற்பண்புகளும் நமக்கு தெரிந்ததே அனால் இவரை போன்ற சூப்பர் ஸ்டார்கள் தெரியாமலே சென்று விடுகிறார்கள், அவரை நாம் இங்கு நம் தலைவர் சார்பாக, அவரின் தத்து தந்தையை கவுரவிப்போம்

http://eluthu.com
Mr.Kalayanasundaram worked as a Librarian for 30 years. Every month in his 30 year experience(service), he donated his entire salary to help the needy. He worked as a server in a hotel to meet his needs. He donated even his pension amount o
f about TEN(10) Lakh rupees to the needy.

He is the first person in the world to spend the entire earnings for a social cause. In recognition to his service, (UNO)United Nations Organisation adjudged him as one of the Outstanding People of the 20th Century.. An American organisation honored him with the ‘Man of the Millennium’ award. He received a sum of Rs 30 cores as part of this award which he distributed entirely for the needy as usual.

இதில எனக்கு கோபம் வந்தது ரஜனியில்தான் ஏன் ரஜனிக்கிந்த வேண்டாத வேலை

ரஜனியை வன்மையாகக்கண்டிக்கிறேன் சிவகாசி வெடிவிபத்து,தானே புயல் என்று பல விடயங்கள் நடக்க அற்பத்தொகையைக்கொடுத்து விட்டு வாழ் நாள் முழுவதும் ஏழைகளுக்கு உழைத்த ஒருவரை தன் வீட்டுக்கு அழைத்து விளம்பரத்தை தேடிக்கொள்கிறாரா?கல்யாணசுந்தரத்தை தந்தையாக்க பல ஏழைக்குடில்கள் காத்துக்கிடக்கின்றன..ரஜனி தந்தையாக்க தேவையில்லை கல்யாணசுந்தரம் 30 கோடியை கொடுத்தார் ரஜனி என்ன கொடுத்தார் சாதாரண மனிதனுக்கு 30 கோடி என்பதும் ரஜனிக்கு 30 கோடி என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு..தயவு செய்து கல்யாணசுந்தரம் என்ற மனிதனை அவமானப்படுத்தாதீர்கள்.எந்த ஒரு மனிதனும் வாழ் நாளில் எடுக்காத முடிவை எடுத்திருக்கிறார் கல்யாண சுந்தரம் அதற்குப்பாராட்டு தெரிவித்துக்கொள்ளலுடன் நிறுத்திக்கொள்ளலாம் இதென்ன ராவன் படமா வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்துவிட கல்யாண சுந்தரம் செய்தவேலைக்கு ரஜனி அவரது வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்திருந்தாலாவது ரஜனியில் மரியாதை வந்திருக்கும்.
இனி தலைவரின் விசிறிகள் தலைவரின் நல்ல மனதைப்பார் என்று பொரிந்து தள்ளுமே தவிர கல்யாண சுந்தரம் அவர்கள் கண்ணுக்கு தெரியப்போவதில்லை இதைத்தானே ரஜனியும் ஆசைப்பட்டார்.அரசியலுக்கு வரவேண்டும் என்று இப்பொழுதே ரெயினிங்கை ஆரம்பித்துவிட்டாரா?


கல்யாண சுந்தரம் என்ற ஒப்பற்ற மனிதரை ரஜனி போன்றவர்களுடன் தொடர்பு படுத்தி தயவு செய்து அவமானப்படுத்தாதீர்கள்..ரஜனிக்கு பூப்போடுவதற்குப்பதில் கல்யாணசுந்தரத்திற்குப் பூப்போட்டால் குடும்பம் விளங்கும்யா



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்