கற்பழிக்கப்பட்டால் பெண்கள் தற்கொலைசெய்யவேண்டுமா

ஆணாதிக்கம் பேஸ்புக் அதிகமாக கேட்ட வார்த்தைகள்.
பெண்ணாதிக்கம் கட்டில்கள் அதிகமாக கேட்டவார்த்தைகள்.

இவ்விரண்டைப்பற்றியுமான  நேர்மறைவிவாதங்கள் சகலஇடங்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.பெண் என்பவள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் இந்த ஆணாதிக்கம் ஆரம்பிக்கின்றது. ஒரு வேளை எனக்குவரும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் இது ஆரம்பிக்கலாம்.அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு... இப்படி அடங்கினால் அல்லது அடக்கிவளர்த்தால்தான் அவள் பெண் என்பது சமூகம் காலாகாலமாக விதைக்கும் அடிமைத்தனங்களில் ஒன்றுதான். அப்படியானால் பெண்ணிற்கு அடிமையாக இருக்கவேண்டுமா என மீசையை முறுக்குகின்றார்கள். உங்கள்  பால்ய நண்பனுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை சுதந்திரத்தை உங்களைச்சார்ந்த ஒரு பெண்ணுக்கு நீங்கள் கொடுத்தாலே போதும் அது அவளுக்கு மிகப்பெரிய சுதந்திரமாக இருக்கும்.மீசை இதுவும் ஆணாதிக்கத்தின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது முக்கியமாக சினிமாக்களால்  பெட்டை உனக்கே இவளவு திமிரிருந்தால் ஆம்பிளை எனக்கு எவளவு இருக்கும்? நீ உண்மையிலேயே மீசைவைச்ச ஆம்பிளைன்னா என்று மீசையை முறுக்குவது விவேக் சொல்வதுபோல் 50 பைசா பெறாத அந்த முடிகளால் ஆன அடர்ந்த பகுதிக்கும் வீரத்திற்கும் எப்படித்தான் தொடர்பைக்கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை ஹோக்கிங்கிடம்தான் இதற்குவிளக்கம்கேட்கவேண்டும்.
 நம்மை  சுற்றியிருக்கும் பெண்களைச்சார்ந்த வசையாடல்கள் குறிப்பாக பெண்களைமட்டுமே குறிப்பிட்டு அமைக்கப்படுவதன் காரணம்கூட இதே ஆணாதிக்கம்தான்.பு###,வேசி போன்ற வார்த்தைகள்,ஒவ்வொரு பிரதேசத்திலும் பெண்களை குறிவைத்துபல உள் அர்த்தம் கொண்டவார்த்தைகள் வழக்கில் இருக்கின்றது. ஐட்டம்,சரக்கு, மாஞ்சான் இன்னபல...சரி இவ்வாறு பெண்களுக்கு ஏன்  பெயர்கள் வைக்கப்படுகின்றது என்று கேட்டால் நிச்சயம் அதற்கான காரணம் கூறுவார்கள் கேள்வி என்னவெனில் அவர்கள் கூறும் அதேசெயல்களை செய்யும் ஆண்களுக்கு இவர்களைப்போலவே ஸ்பெஸலான பெயர் என்ன என்று கேட்டால் பதில் "அவன் ஆம்பிளை".சோ இதுதான் நமது சமூகம் இப்பொழுதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு மாற்றமில்லாமல் இருந்துகொண்டிருக்கின்றது.

சிலவருடங்கள் முன்னர்வரை  ஒரு பெண்கற்பழிக்கப்பட்டால் அவள் செய்யவேண்டிய கௌரவமான,சமூகம் ஏற்றுக்கொள்ள்க்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கை தற்கொலை என்று நமது தமிழ்சினிமா போதித்துவந்தது.இப்போது இன்னிலை சினிமாவிலாவது மாறியிருப்பதுவரவேற்கத்தக்கவிடயம் டெல்லியில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண் இறக்கும் தறுவாயில் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனைவாங்கிக்கொடுக்கவேண்டுமெனக்கூறினாரே தவர அவர்களின் தலையைவெட்டவேண்டும் எனக்கூறவில்லை.அந்தப்பெண்தொடக்கம்  பெயர் தெரியாத ஊர்களில் தினம் தினம் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் அனைவரிடமும்  இன் நாளில் மன்னிப்புக்கேட்டுக்கொள்வோம். ஒரு பிரபல செக்ஸ் நடிகை கூறினாராம் ரேப் என்பதை எதிர்பாராத பாலியல் அனுபவமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அவருக்கு என்னமாதிரியோ தெரியாது.ஆனால் வன்புணர்வு என்பது அதை அனுபவித்த பெண்ணுக்கு பாலியல் தொடர்பான வாழ் நாளில் அவளின் எதிர்பார்ப்புக்கள் ஏக்கங்கள்,இன்பங்கள் அனைத்தையுமே குழிதோண்டிப்புதைத்து வேண்டத்தகாத அருவருக்கத்தக்க ஒன்றாக பாலியல்மீது ஒரு மரணபயத்தை ஏற்படுத்திவிடக்கூடிய ஒன்றாக ஆக்கிவிடும் என்பதுதான் உண்மை அது அனுபவமல்ல ஒரு வகையில் கொலை.

கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைதான் செய்யவேண்டுமா?

இவரது பெயர் சுனிதா கிருஸ்ணன் பாங்களூரை சேர்ந்தவர் இவர் தனது 15 ஆவது வயதில் 8 ஆண்களினால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார் காங்க்ரேப்.இவர் தற்கொலை செய்துகொண்டாரா??? இல்லை
அவர் படித்து வாங்கிய பட்டங்கள் B.Sc. (Environmental Science, MSW (Psychiatric Social Work) Ph.D. (Social Work) அதோடு Mr. Rajesh Touchriver என்பவரை திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

இவர் பெற்ற வன்புணர்வு என்ற கசப்பான அனுபவம் இவரை சமூகசேவகியாக்கியிருக்கின்றது.பாலியல்வன்முறை,பாலியல் அடிமைத்தனத்திற்கும் உள்ளாகும் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்கும் பிராஜ்வாலா என்ற அமைப்பை உருவாக்கி செயற்பட்டுவருகின்றார்.இதுவரை 5000ற்கு மேற்பட்ட எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி உதவி செய்துவருகின்றார்.பாலியல் தொழிலுக்குவலுகட்டயாமாக ஈடுபடுத்தப்பட்ட 3200க்கு மேற்பட்ட சிறுமிகள் சிறுவர்களை காப்பாற்றியுள்ளார்.


சுனிதா கிருஸ்ணன் அவர்கள் ted conferenceஇல் பேசிய பேச்சு....

பிரணீத்தாவின் தாயார் ஒரு விபச்சாரி.அவர் எஹ்.ஹி.வி ஆல் பாதிக்கப்பட்டவர்.அந்தத்தாயார் எயிட்ஸினால் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தபோது அவரால் விபச்சாரம் செய்யமுடியவில்லை எனவே தனது மகளை 4 வயது மகளை தரகருக்கு விற்றுவிட்டார்.இந்த விடயத்தை அறிந்து நாம் பிரனீத்தாவைக்காப்பாற்ற அங்கு சென்றபோது ஏற்கனவே பிரணீதா 3 ஆண்களினால் கற்பழிக்கப்பட்டிருந்தார்.

சாஹீனின் குடும்பப்பின்னணி எமக்குத்தெரியாது. நான்கள் அவரை ரெயில்வே தண்டவாளத்தில் கண்டெடுத்தோம்.நாம் சாஹீனின் இடத்தை அடைந்தபோது அவர் பல ஆண்களால் கற்பழிக்கப்பட்டிருந்தார் எத்தனை பேரால் என்றுதெரியவில்லை.அந்த சிறுமியின் குடல் உடலுக்கு வெளியே வந்திருந்தது உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டுசென்று காப்பாற்றினோம்.
ஆக இச்சிறுமியைப்பற்றி எம்க்குத்தெரிந்த ஒரே ஒரு விடயம் 100க்கணக்கான ஆண்களால் கற்பழிக்கப்பட்டவர் என்பது மட்டும்தான்.

அடுத்த சிறுமி அஞ்சலியின் தந்தை ஒரு குடிகாரர். அந்த சிறுமியை பாலியல் படங்களை எடுப்பதற்காக விற்றுவிட்டார்.
இப்படியான பாலியல்வன்முறைக்குள்ளாகும் துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள  பொருளாதாரவசதி இல்லாத பெண்கள் மாத்திரமல்ல...செல்வந்தர்கள் ஹை ஒப்பீஸேர்ஸ் களின் மகள்களும் இவற்றில் அடங்கும் இணையத்தில் ஒரு தெரியாத நபருடன் சட்டிங்க் செய்ய அவர் உன்னை நடிக்கவைக்கின்றேன் என ஏமாற்றினால் வீட்டைவிட்டு ஓடினார்...இவ்வாறு நாம் காப்பாற்றிய ஒவ்வொரு சிறுவர் சிறுமிக்கும்  சோகமான பின்னணிகள் உள்ளன.

இவ்வாறு விற்கப்படும்  சிறுமிகளைவாங்க வருபவர்கள் அன்பாக நடந்துகொள்வார்கள் என்று நிச்சயம் எதிர்பார்கவேண்டாம்.அவர்களில் பலர் துன்புறுத்தப்படுகின்றார்கள்,அனுமதி இன்றி கற்பழிக்கப்படுகின்றார்கள்,கொல்லப்படுகின்றார்கள்  இவ்வாறான பலரது குரலகள் வெளியே கேட்பதில்லை.



அவர்கள் உங்களை அவர்களது கேர்ல் பிரண்டாக பாவிக்கமாட்டார்கள்,உங்களுடன் பமிலியை ஏற்படுத்தமாட்டார்கள் 1 மணித்தியாலத்திற்கு 1 நாளுக்கு என நேரக்கணக்கிற்கு வாங்கி  உங்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள் இவ்வாறான 3200க்கு மேற்பட்ட சிறுமிகளை நான் காப்பாற்றியிருக்கின்றேன் ஒவ்வொருவருக்கும் இவ்வாறு ஒவ்வொருகதைகள் உள்ளன.


நாங்கள் நினைக்கின்றோம் பாலியல் தொழில் என்பது இலகுவான ஒன்று பணத்தை உழைப்பதற்கு அது ஒரு குறுக்குவழி இதை செய்பவர் இதை மிகவும் விரும்பி செய்கின்றார் என்று ...இல்லை அவர் பணத்தைவிடவும் மேலதிகமாக பலவற்றைப்பெற்றுகொள்கின்றார்.


பாலியல் நோய்கள்,காயங்கள் போன்றவற்றையும் பெற்றுக்கொள்கின்றார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு இயல்பு நிலைக்கு மீட்பது என்பதுதான் என்முன்னால் வைக்கப்பட்ட பெரிய சவால். நாம் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பயிற்சிகள் கொடுத்தோம், கார்பென்ரராக,கார் ரைவராக,செக்கியூரிட்டி கார்ட்டாக,ஐடி பீல்ட்களில் புரொபஸனல்களாக மாறுவதற்கு பயிற்சிகள் கொடுத்தோம் அவர்கள் பயின்றார்கள் சுயமாக தொழில் செய்கின்றார்கள். ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்துப்போராடுகின்றார்கள்.

பாலியல்  நோயால் பாதிக்கப்பட்டவர்.

எனது மிகப்பெரிய சவாலாக இருப்பது என்னைத்தாக்குபவர்களை எதிர்ப்பதல்ல நான் 14 தடவைகள் பலமாக தாக்கப்பட்டிருக்கின்றேன் எனது வலதுகாது முழுமையாக கேட்கும்தன்மையை இழந்துவிட்டது.எனது பெரிய சவால் சமூகத்திற்கு முகம் கொடுப்பது என்னை நானாக சமூகம் ஏற்றுக்கொளவதுதான் எனது பெரிய சவால்.எனது நண்பர் எனது நெருக்கமான வெல்விஸ்ஸர் அவரது அம்மாவிற்கு உடல் நிலைசரியில்லாதபோது தொடர்புகொண்டுகூறினார் அம்மாவைப்பார்த்துக்கொள்ள பெண்கள் இருக்கிறார்களா நான் செல்லமுயற்சிக்கும்போது "உங்கள் தரப்பில் இருக்கும் பெண்கள் வேண்டாம்" இதுதான் பிரச்சனை.

நாம் ஒரு ஏசி ஹோலுக்குள் இருந்து கொண்டு பெண்கள் பாதிப்புக்கள் தொடர்பாக பேசமுடியும் விவாதிக்கமுடியும்  சினிமாப்படங்களை எடுக்கமுடியும் ஆனால் இவ்வாறு பாதிக்கபப்ட்ட பெண்களை  வீட்டிற்குள் நாம் அனுமதிப்பதில்லை அலுவலகங்களில் வேலைக்கு அமர்த்துவதற்கு நாம் விரும்புவதில்லை.எமது பிள்ளைகள் அவ்வாறு பாதிக்கப்பட்ட  பிள்ளைகளுடன் சேர்ந்து படிப்பதை நாம் விரும்புவதில்லை. இதுதான் எனக்கு முன்னால் வைக்கப்பட்ட மிகப்பெரிய சவால்.
அவர்களுக்கு உங்கள் அன்பு தேவை இங்கள் பரிவு தேவை சகலவற்றையும் விட உங்கள் அக்செப்டிங்க் தேவை... நான் அடிக்கடி கூறுவேன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான 100 வழிகளைக்கூறாதீர்கள் ஒன்றையாவது செய்யுங்கள்.

உங்களுக்கு முன்னால் நின்றுகொண்டு நான் கேட்பது  இவர்களுக்காக உங்கள் ஆதரவை... எதற்கும் அமைதியாக இருக்கும் உங்கள் கலாச்சாரத்தை உடைக்கமுடியுமா? குறைந்தது இருவரிடமாவது இந்தக்கதைகளைக்கூறுவீர்களா? கூறுங்கள் அவர்கள் மனதைமாற்றுங்கள் நீங்கள் கூறியவற்றை மேலும் இருவரிடம் கூறுமாறுகேட்டுக்கொள்ளுங்கள்

உங்களை மகாத்மா காந்தியாகவோ மார்டின் லூதர்கிங்காகவோ மாறுமாறு நான் கேட்கவில்லை...சிறியவட்டத்தின் உள்ளே இருக்கும் உங்கள் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் ..இவர்களும் உங்களுள் ஒருவர்தான். உங்களிடம் கேட்பது அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.


இவர் சி.என்.என் னின் ரியல் லைப் ஹீரோக்களில் ஒருவராக பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றார்.

இவரது பேஸ்புக்  இங்கே கிளிக்
இவரது வலைப்பூ இங்கே கிளிக்

என்னைப்பொறுத்தவரை இவ்வாறான உதவியாளர்கள்தான் கடவுள்கள் எதார்த்தங்களைக்கடந்தமையால்.இவர்கள்தான் ஹீரோக்கள் இவர்களுக்கும் நீங்கள் பால் ஊற்றி அவமானப்படுத்த தேவையில்லை தேவையெல்லாம் மனித நேயத்துடன் உங்கள் உதவி  இவர்களையும் சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளல் அவளவுதான்.


அனைத்துலக பெண்கள் நாள் தொடர்பில் விக்கியில் உள்ள கட்டுரை...

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விக்கியின் கட்டுரையைப்படிக்க இங்கே கிளிக்

கீழே இருப்பது மீள்பதிவு...

20 ஆம் நூற்றாண்டின்   முடிவில் 10 % ஆன பெண் கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமே  பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக் பெண்களின் பெயர்கள் இருக்கும் பொதுவாக ஒருபெண் தனது கண்டுபிடிப்புக்களை வெளி கொண்டுவருவதற்கு அதிக அளவு தடைகளை தண்டவேண்டி இருக்கிறது 
1700 களில் அமெரிக்காவிலும் பெண்கள் விஞ்ஞான கற்கைகளை கற்பது விரும்பத்தகாததாக இருந்தது 1700 களில் அமெரிக்காவில் ஒரு சட்டம் இருந்தது 

பெண்களுக்கு எந்த ஒரு சொத்தும் உரிமையாக இருத்தல் கூடாது என்பதுதான் அது  இவர்கள் இக்காலத்தில் தமது கண்டுபிடிப்புக்களையோ அல்லது ஒரு உள்ளநாட்டு தயாரிப்பையோ வெளியிட நேர்ந்தால் தமது தந்தையின் பெயரிலோ அல்லது கணவரின் பெயரிலோதான் உரிமம் பெற்று வெளியிடப்படவேண்டியிருந்தது.


இவற்றை தாண்டி தனது தயாரிப்பிற்கு தனது பெயரிலேயே உரிமம் பெற்ற  முதல் அமெரிக்க பெண்  Mary  kies  1809 இல் பெற்றார் .1 ஆம் உலகப் போரினால் பெண்களுக்கு ஒரு எதிர்பாராத நன்மை ஏற்பட்டது.உலகப் போருக்கு முன்பாக பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்பும்,வோட்டுரிமையும் கேட்டு வன்முறையை பரிசாகவாங்கிக்கொண்டார்கள்.உலகப் போரின் போது ஆண்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவப்பையிற்சி என்றசட்டம் இருந்தது.இதனால் ஆண்கள் பணிபுரிந்த தொழிற்சாலைகள்,சுரங்கங்கள்,ஆயுதக்கிடங்குகள்,இரசாயன நிலையங்கள் என அனைத்து இடங்களுக்கும் ஆடகள் தேவை..வேறுவழி இல்லை பெண்களைத்தான் இவற்றிற்கு அமர்த்தினார்கள். 
நடைமுறையில் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பலவிடயங்களை பெண்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் 

இங்கு சில பெண் கண்டுபிடிப்பாளர்களையும்   அவர்களது கண்டுபிடிப்புக்களையும் நோக்குவோம் 

Circular saw
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த "Tabiththa babbitt " என்றபெண்தான் இதை கண்டுபிடித்தார்இவர் நெசவாளர் இது ஒரு வட்ட தட்டு உருவான வாள்
இவர் ஒரு நெசவாளர் 1810 இல் இவர் 2  மனிதர்கள் வாள் ஒன்றை பயன்படுத்தி மரம் அரிவதை அவதானித்தார் இருவரும் இருதிசையிலும் வாளை   இழுத்து அரிந்தார்கள் வாளின் முனை ஒருபக்கமாக சரிவாக இருந்ததால் ஒரு பக்கமாக  அரியும்போது மாத்திரமே  வாள்  வெட்டியது மற்றைய பக்கம் இழுக்கும் போது சக்திச்ச்செலவு மாத்திரமே மிஞ்சியது இதை அவதானித்து 

கண்டு பிடிக்கப்பட்டதுதன் circular  saw  


Liquid  paper 

டிபேஸ் என நாம் பயன்படுத்தும் உபகரணத்தை போன்றதுதான்   இந்த liquid paper இதைக்கண்டு பிடித்தவர்  "Bette Nesmith Graham  "  என்ற பெண் இவர் ஒரு டைபிஸ்ட்  தனது வேலையில் பல தவறுகளை செய்துவிடுவார் 1950 இல் மின்சாரத்தில் இயங்கும்  typewritter அறிமுகப்படுத்தப் பட்டது இதன்  கார்பன் ரிபனால் பதியப்பட்ட எழுத்துக்கள் திருத்துவதற்கு கடினமாக இருந்தது ஒரு நாள் grahm ஒரு பேங்க் யன்னலில் சிலர் ஓவியம் வரைவதை அவதானித்தார் அவர்கள் வரையும்போது 

தாம் செய்த தவறை சரி செய்ய அதன்மேல் வேரொரு வர்ணத்தை  தீட்டி தவறை சரி செய்தார்கள் இதுதான் grahm  ஐ இக்கண்டு பிடிப்பிற்கு தூண்டியது 
தனது சமையல் அறையில் கிரைண்டேரில் tempera பெயிண்ட் ,டை ,நீர் என்பவற்றை சேர்த்து அரைத்துத்தான்   இதை கண்டுபிடித்தார் 
தனது அலுவலகத்தில் இதை விநியோகித்தார் அலுவலகப்பணிகளை விட அதிகநேரம் தனது கண்டுபிடிப்பை விநியோகிக்க செலவிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார் 1958 இல் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை பெற்றார் 
   

Chocolate chip cookies


இது ஒரு சாப்பாட்டு ஐட்டம் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமானது இதைக்கண்டுபிடித்தவர் Ruth wake field 1930 இல் கண்டுபிடித்தார்.இவர் ஒரு டயரிசன் அத்துடன் பூட் lecturer ஒருநாள் இவர் விருந்தினருக்கு கூகீஸ் தயாரித்துக்கொண்டிருந்தார் இதற்கு வழக்கமாக உருக்கிய சாக்லேட் தான் சேர்ப்பார்கள்   விரைவாக கூகிஸ் செய்ய வேண்டியதன்  காரணமாக சாக்லேட் துண்டை  உருக வைப்பதற்கு பதிலாக சிறு துருவல்களாக்கி கூகியில் தூவி bake பண்ணினார் இதனால் சாக்லேட் உருகிவிடும் என நம்பினார் ஆனால் சாக்லேட் உருகவில்லை அதற்கு மாறாக பெறப்பட்டதுதான் இந்த சாக்லேட் சிப் கூகீஸ்





The Compiler and COBOL computer language 

இதைக்கண்டுபிடித்தவர் கடற்படை அதிகாரியான ஹொப்பர்.இவர் 1943 இல் இராணுவத்தில் இணைந்துகொண்டார்.ஹவேர்ட் பல்கலைக்கழகத்தில் IBM இன் முதலாவது லார்ஜ் ஸ்கேல் கணணியான  Harvard Mark I ஐ இயக்குவதில் ஈடுபட்டிருந்தார்.இக்கணணியை ப்றோக்கிராம் செய்த மூன்றாவது நபர் இவர்தான்.1950 இல் இவர் ஒரு கணணையைக்கண்டுபிடித்தார்.இதில் ஆங்கில மொழியில் கட்டளைகளை கோட்டாக வழங்கமுடியும்.
 அமெரிக்காவின் முதல் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட கணணியான Universal Automatic Computer 1,2 களில் இவரது கொம்பைலர்கள்தான் பயன்படுத்தப்பட்டன.ஆரம்பகாலங்களில் இருந்த கணணி மொழிகளில் முக்கீயமானவற்ருள் ஒன்றாக இருந்த Common Business-Oriented Language (COBOL)  ஐ டெவலப் செய்தவர்களுள் முக்கியமானவர் இவர்தான்.இவரது இக்கண்டுபிடிப்புகளால் தான் ப்ரோகிராமெர்ஸ் பிழையின்றி தமது ப்ரோக்கிராம்களை எழுதமுடிந்தது.இவற்றிற்காக ஹொப்பர் பல விருதுகளைப்பெற்றுள்ளார்.அத்துடன் இவரைக்கௌரவிக்கும் முகமாக அமெரிக்க யுத்தக்கப்பலுக்கு இவரது பெயரைவைத்துள்ளார்கள்.






Colored Flare System

பல ஆங்கிலபடங்களில் குகைகள் இருளான பிரதேசங்களில் அல்லது கடலுக்கடியில் கையில் ஒன்றை வைத்து அழுத்தும் போது பீறிட்டு எரியும் பாருங்கள் அதன் பெயர்தான் Colored Flare System  இதைக்கண்டுபிடித்தவர் Martha Coston 1847 இல் தனது 21 ஆவது வயதில் விதவையாக்கப்பட்டார்.இவரது கணவனின் குறிப்புப்புத்தகத்தில் இதை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி இடப்பட்டிருந்தது ஆனால் அக்குறிப்புப்புத்தகத்தில் இருப்பது நடைமுறையில் சாத்தியப்படவில்லை தன் கணவனின் கனவை நன்வாக்க எண்ணி அடுத்த 10 வருடங்கள் தொடர்ந்து இதற்காக கடுமையாக முயற்சி செய்தார்..இறுதியில் இதைக்கண்டுபிடித்து விஞ்ஞானிகள் இராணுவ அதிகாரிகளுக்கு முன்பாக பரிசோதனை செய்து காட்டினார்.ஆனால் அது நீண்ட நீரம் எரியாததால் பரிசோதனை தோல்வியில் முடிந்தது.பின்பொருநாள் தனது மகங்களுடன் வானவேடிக்கையை பார்க்க சென்றபொழுது இவருக்கு இதற்கான திட்டம் பளிச்சிட்டது.பின்னர் அமெரிக்க நேவி இவருக்கு உரிமத்தை வழங்கியது..பின்னர் நடைபெற்ற சிவில் யுத்தங்கள் முதல் அனைத்து யுத்தங்களிலும் இவரது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


The Square-bottomed Paper Bag

கண்டுபிடித்தவர் Margaret Knight.இவர் பேப்பர் பாக்கை கண்டு பிடிக்கவில்லை சாதாரணமாக பயன்படுத்தப்படும் பேப்பர்பாக்கில் பொருட்களைக்கொண்டு செல்லல் கடினமாக இருந்தது. இதற்குத்தீர்வாக சதுர முகத்தைக்கொண்ட பேப்பர்பாக்கை உருவாக்கினால் இலகுவாக இருக்கும் என எண்ணி சதுரமுகம் கொண்ட பேப்பர் பாக்கை உருவாக்கினார்.இதை உருவக்குவதற்காக சிக்கலான இயந்திரமொன்றையும் உருவாக்கினார்.Charles Annan என்பவர் இவரது இயந்திரத்தை திருடி அது தன்னுடைய தயாரிப்பு என்றும் இதே போல ஒரு சிக்கலான இயந்திரத்தை ஒரு பெண்ணால் எப்படி உருவாக்கமுடியும் எனவும் அறிவித்தார்.ஆனால் Margaret Knight  இயந்திரத்தின் சரியான அளவீடுகள்,விபரங்களை தன்வசம் வைத்திருந்ததால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.




Dishwasher

இதைகண்டுபிடித்தவர் Josephine Cochrane 1883 இல் இவர் கணவனை இழந்தார்.தனது வேலையாட்கள் மீது அதிருப்தியடைந்ததால் இவர் இதைக்கண்டுபிடிக்க நேர்ந்தது.இவரது டிஸ்வோஸர் உயர் அமுக்கத்தில் இயங்குமாறு வடிவமைத்திருந்தார்.இதை விளம்பரப்படுத்தல் மிக கடினமாக இருந்தது இதை பயன்படுத்துவதற்கு ஹீட்டர் தேவையாக இருந்தது ஹீட்டர் பலரது வீட்டில் அக்காலத்தில் இருக்கவில்லை இதனால் இவர் ஹீட்டர்ளை பயன்படுத்துவதற்கு இலவசமாக வழங்கினார்.ஆரம்பத்தில் இல்லத்தரசிகளிடம் இது பிரபலமடைந்தது.பின்னர் பெரிய கம்பனிகள்வரை இது சென்றது.


Windshield Wiper

இதைக்கண்டுபிடித்தவர் Mary Anderson .இவர் பனி பெய்துகொண்டிருக்கும் சமயம் பேருந்தில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார்.அப்பொழுது ஓட்டுனர் ஒவ்வொரு தடவையும் பேருந்தை நிறுத்தி நிறுத்தி கண்ணாடியை துடைத்தார்.இதனை அவதானித்த மேரி இதற்காக ஒரு உபகரணத்தை வடிவமைத்து ஓட்டுனரிடம் வழங்கினார்.அவ்வுபகரணத்தை பேருந்தின் உள்ளே இருந்தே இயக்க முடியும்.கண்ணாடியை சுத்தம் செய்ய வேண்டியிருப்பின் ஒரு கைபிடி செய்யப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி உள்ளே இருந்தே சுத்தம் செய்ய முடியும்.
இதை மேரி முதலில் கண்ணாடி சுத்தம் செய்யும் தொழிலார்களுக்கு பரிந்துரைசெய்தார்.பின்னர் மக்கள் இதை வாகனங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் அடுத்த 10 வருடத்தில் அனைத்து வாகனங்களிலும் இவரது தயாரிப்புத்தான் இருந்தது.


Nystatin

இது ஒரு பங்கஸ் கொல்லியாகும்.கண்டுபிடித்தவர்கள் Rachel Fuller Brown, Elizabeth Lee Hazen இவர்களது கூட்டுத்தயாரிப்புத்தான் இது.1940 இல் New York State Department of Health இல் 1940 ஆம் ஆண்டு இது தொடர்பான பரிசோதனையில் ஈடுபட்டார்கள் 1950 இல் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்கள்.இது பின்னர் பல பிராண்ட் பெயர்களில் இப்பொழுது பயன்படுத்தப்பட்டுவருகின்றது.



Kevlar

Stephanie Kwolek என்ற பெண் அமெரிக்காவில் 1964 இல் du Pont என்ற இரசாயன நிறுவனத்தில் மொலிக்கியூல்களை உறுதியான நார்களாக மாற்றுதல் தொடர்பான ஆராச்சியில் ஈடுபட்டிருந்தார்.இதன்விழைவாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் kevlar இது வலுவான நாரால் ஆக்கப்பட்ட மெற்றீரியலாகும்.உலக அளவில் 1970 களில் இருந்து அதிக கேள்வி உடையதாக இருந்து வருகின்றது.இதை பயன்படுத்தித்தான்.கூடாரங்கள்,புள்ளட் புரூஃப் உடைகள் தயாரிக்கப்படுகின்றன.


இப்படி நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல விடயங்களைக்கண்டுபிடித்தவர்கள் நம்ம தாய்க்குலங்கள் தான்...


எனது கவிதையுடன் முடித்துக்கொள்கின்றேன்.

அடுப்படியில் வேகாத அரிசியை 
வேகவைக்கப்போராடி
அவள் மட்டும் வெந்துபோய்
படுக்கையறை சென்றாள்-அம்மா

மகளிர் தினம்










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முஸ்லிமை கொல்லும் முஸ்லிம்? ~ விஸ்வரூபம் விமர்சனம்.

கமல்ஹாசன் கவிதைகள்

தமிழன் பெருமை - பல்புகள் :)