இடுகைகள்

உலக வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்க உள்நாட்டு யுத்தமும் அடிமைகள் பிரச்சனையும்

படம்
வெள்ளை மாளிகையின் கருப்பு அடிமைகள்-06 அடிமைமுறையை ஒழிப்போம் என அணிதிரண்ட வட மாநிலங்கள் ஒருபுறம், பண்ணைகளுக்கும் விளைநிலங்களுக்கும் தீயிட்டுவிட்டு தப்பி வந்த அடிமைகள் ஒருபுறம், அடிமை முறையை ஆதரித்த அடிமைகளால் பாதிப்படைந்த தென் மாநிலங்கள் ஒருபுறம் என பல சிக்கலான சூழ்நிலைகள் நிலவின அன்றைய அமெரிக்காவில் என்பது பற்றி போன பதிப்பில் பார்த்தோம். அப்பதிவை வாசித்துவிட்டு தொடர இங்கே கிளிக்.                                                        இவ்வாறு பல சிக்கல்களான சூழலின் மத்தியில் அமெரிக்க அதிபரின் பணி முக்கியமானதாக அமையப்போகும் கட்டத்தில்தான் “அடிமைமுறையை ஒழிப்பேன்” எனும் வாக்குறுதியை முன்வைத்து போட்டியிட்ட ஆபிரகாம் லிங்கன் 1860 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.                                                    அவ்வளவுதான் அடிமைமுறையை ஒழிக்கிறேன் பேர்வழி என அடிமைகளை ஆதரித்தவர் ஒருவர் தமக்கெல்லாம் அதிபராக இருந்தால் தங்கள் எல்லோருக்கும் மிகப்பெரும் அவமானம் என கிளர்ந்தெழுந்துவிட்டனர் தென்மாநிலத்தார். முதலில் தன் எதிர்ப்பை கச்சிதமாக தெற்கு கரோலினா வெளி

போராட்டமில்லாமல் விடுதலை இல்லை

படம்
வெள்ளை மாளிகையின் கருப்பு அடிமைகள்-05  போன பதிப்பில் அடிமைகளுக்காக போராடிய அபாலிஷனிஸ்ட் எனும் இயக்கத்தையும் அதற்கு உறுதுணையாய் நின்ற காரிசன் மற்றும் டக்ளசைப் பற்றி பார்த்தோம். அப்பதிவை வாசித்து விட்டு தொடர இங்கே கிளிக்.                 இவ்வாறு காரிசனும், டக்ளசும் இணைந்து மேற்கொண்ட பிரச்சாரங்களும் போராட்டங்களும் அமெரிக்க மக்களுக்கு அடிமைகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை தெளிவுபடுத்த தொடங்கின.                                             தங்களை போன்ற ஓர் அடிமை தப்பித்ததும் அல்லாமல் தமக்காக எல்லாம் போராட்டங்களிலும் கூட்டங்களிலும் ஈடுபடுவது கறுப்பினக் கூட்டத்தாரிடையே டக்ளசை தங்கள் மனச்சாட்சியின் உருவமாக பார்க்க வழிவகுத்தது. 1840 ஆம் ஆண்டுகளின் பின்னர் எல்லாம் கருப்பினத்தாருக்கும் அடிமைகளுக்கும் டக்ளஸ்தான் ஒரு நடமாடும் கடவுளாக தென்பட்டார். இவ்வாறு ஆங்காங்கே தலை தூக்கிய “அடிமை முறையை ஒழிப்போம்” எனும் இக்கோசம்தான் படிப்படியாக வளர்ந்து 1860  ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  அடுத்த அமெரிக்க அதிபர் யார்..?? எனும் கேள்விக்கு பதிலாக அமைந்தது. இக்காலகட்ட தேர்தலில் அடிமைகள்

அடிமை எதிர்ப்பும்....சுதந்திரத்திற்கான பாதையும்.....

படம்
வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-04 போனபதிப்பில் அடிமைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஏதோ என்னால் முடிந்தவரை சுருக்கமாக தந்திருந்தேன். அப்பதிவை வாசிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து வாசித்து விட்டு தொடரவும்.                                                                                                             இவ்வாறு கையில் கிடைத்த எலியை கொல்வதுபோல் அடிமைகளை கொன்று போட்டாலோ அல்லது உடல் பாகங்களை வெட்டிஎறிந்தாலோ யாருமே கேள்வி கேட்க மாட்டார்களா எனும் சந்தேகம் நிச்சயம் வாசகர்களுக்கு எழுந்திருக்கும். அந்தவகையில் நாம் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் அமெரிக்கா என்பது ஒரு முதலாளித்துவ நாடு மட்டுமல்ல ஆட்சிபீடத்திலிருந்த அதிகாரிகளும், சட்ட வல்லுனர்களும் , ஏன் அமெரிக்க அதிபர்களில் வாஷிங்டன் உற்பட பெரும்பாலானவர்களும் கூட பண்ணையார்களாகவே இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தெரிந்திருந்தும் கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள் அல்லது ஆதரித்தார்கள் ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் அடிமைகளை வைத்திருந்தார்கள்.           இவ்வளவு ஏன் அந்நாளைய அமெர

வெள்ளையர்களின் காலுக்குள் நசிந்துபோன செவ்விந்தியர்களின் கல்லறைகள்

படம்
  -முந்தைய பதிவு- 35000 வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் உலகத்தின் நீரில் பெருமளவு பனிக்கட்டிகளாக உறைந்திருந்தது. ( 40,000 வருடங்களுக்கு முன்பிலிருந்து முதல் 20,000 வருடங்களுக்கு முன்புவரை பனி யுகமாக இருந்தது. (Ice Age) ) தற்போது பெரிங் நீரிணையாக உள்ள வட அமெரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் பகுதி அப்போது நிலப்பகுதியாக இருந்தது. இற்றைக்கு 12,000 வருடங்களுக்கு முன்னர் அவ்வழியாகவே அமெரிக்காவின் பூர்வகுடிகள் சைபீரியாவிலிருந்து வட மற்றும் தென் அமெரிக்காவுக்குள் குடியேறினர் என நம்பப்படுகிறது. அலாஸ்காவில் முதலில் குடியேறி, பின்னர் படிப்படியாக தெற்கு நோக்கி நகர்ந்தனர். ஹோஹோகம், எடினன்கள், ஹோப்வேல்லியங்கள், அனசாசிகள் முதலிய இனக்குடிகள் அப்பகுதிகளில் தோன்றின. நெடுங்காலப்போக்கில்  மக்கள் நாகரிக ரீதியாக பெருவிருத்தியடைந்தனர். மயன் முதலிய நாகரீகங்கள் தோன்றின. பிரமிட்கள், மாளிகைகள், பெரும் கட்டிடங்கள் என்பன எழுந்தன. வரலாறோ, விஞ்ஞானமோ விடைசொல்ல முடியாத நாஸ்கா கோடுகள், தங்க நகரம் முதலிய அதிசயங்கள் உருவாயின. ஐரோப்பிய அந்நியர்கள் ஊடுருவியபோது ஹோபி, ஸோனி முதலிய இனக்குழுக்களில் மொத்தமாக இரண