இடுகைகள்

நமது வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோப்பாயில் கோட்டையா......??? வியப்பும் முழிப்பும்.......!!!!!

படம்
ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும் சிதைந்து போகும் சின்னங்களும்-01   இலங்கையில் எங்கெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் அதிக பாதுகாப்பும் அவ்விடத்தை முக்கியத்துவப்படுத்தி சிறப்பு கவனிப்புக்களும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களை பொருத்தவரை இது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் அறிந்ததே. யாழ்பாணத்தில் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்ற போதும் அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலவற்றை தவிர ஏனைய வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்கள் கவனிக்கப்படாது விட்டு விடப்பட்டன என்பது கவலைகுரியதே. அந்த வகையில் யாழ்பாண வாழ் தமிழனாக எனது மன வேதனையை வெளிப்படுத்துவதே இப்பதிவின் நோக்கமாகும்.                                                                       அண்மையில் நமது வெங்காயம் நண்பர்களுடன் யாழ்ப்பாணத்தின் சில முக்கியமான இடங்களுக்கெல்லாம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன்போது நாங்கள் தெரிவு செய்த ஒவ்வொரு ஊரினதும் முக்கியமான இடங்களைபற்றியதேடலில் அவ்வூர்களில் சில ஊர்களின் வரலாற்று சின்னங்களையும் குற

சங்கத்தமிழ்- செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்

படம்
தொல்காப்பியர் உலகில் தற்போது வழங்கிவரும் மொழிகளில் பல முதன்முதலில் உச்சரிக்கபடத் தொடங்கமுன்னரே இலக்கிய ரீதியாகவும் இலக்கண ரீதியாகவும் உச்சம் தோட்ட மொழி தமிழ்மொழி. பிறத்தலை , வளர்தலை , காதலை , பொருதலை , வாழ்தலை , தலை தாழாது வாழ்தலை , இறத்தலை , சிறத்தலை... என  தம் அனை த் தையும் இலக்கியமாக்கியவர்கள் நம் முன்னவர்கள். இன்று நாமனைவரும் பேஸ்புக்கில் சிலபல தமிழ் பெருமை புகைப்படங்களையும் அபத்தங்களையும் ( அணுவை பிளந்து எழ்கடலை புரட்டி... என்ற பாடலின்மூலம் ஔவையார் அணு சக்தி கோட்பாட்டை வலியுறுத்தியுள்ளார். share if you are proud to be a tamilian… என்றவாறான பல ஸ்டேட்டஸ்களை நீங்கள் “ முகப்புத்தகத்தில் ” சந்தித்திருப்பீர்கள். நாங்க யாரு ? முகப்புத்தகம் , சாளரம் என்று வணிகப்பெயர்களுக்கே தமிழ்ப்பெயர் வைத்து தமிழை வளர்ப்பவர்களாயிற்றே ? ) பகிர்ந்து வளர்க்கும் தமிழை சங்கம் வைத்து வளர்த்தவர்கள். இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு மொழியில் இத்தனை செழுமை இருப்பது உலக ஆச்சரியம். எனது மொழி என்று அல்லாது நடுநிலையாக பார்த்தாலுமே இது வியப்பான தக வல் தான்.  அதிலும் , இன்றைவரை வாழ்