விஸ்வரூபம் - சூரியன் பார்த்து குரைக்கும் நாய்கள்...





எந்த நேரத்தில் படத்துக்கு விஸ்வரூபம் என்று கமல் பெயர் வைத்தாரோ தெரியவில்லை, படம் தொடர்பான பிரச்சனைகள் இத்தனை விஸ்வரூபம் எடுத்து அவரையும், அவர் அல்லது அவர் சார்ந்தது சார்பானவர்களையும் குடைந்து வருகிறது.

முதலில் அது தொடர்பான பிரச்சனைகள் எழுந்து, தான் தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து முதலிட்டு எடுத்த படம் கையை சுட்டுவிட்டால் என்ன பண்ணுவது என்று பயந்ததால் டி டி ஹெச் முறையில் தொலைக்கட்சிகளில் படத்தை ரிலீஸ் திகதிக்கு முன் இரவில் ஒளிபரப்ப திட்டமிட்டு, அதனால் வந்த பிரச்சனைகளை தாண்டி வந்தபிறகும், இந்த முஸ்லிம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

தங்களை புண்படுத்துவதாக கமல் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் ஏதாவது ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்குவது சாதாரணமாகி விட்டது. என்னய்யா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? கலை, கலைஞன் என்பதெல்லாம் காட்டாறு மாதிரி. அப்படித்தான் இருக்கும். எங்களால் தாங்க முடியாவிட்டால் ஒதுங்கிப் போய்விட வேண்டியதுதான். என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது? உங்கள் விருப்பத்துக்குத்தான் படம் எடுக்க வேண்டுமா ஒரு மகா கலைஞன்? பணத்துக்காக பெண்களது அங்கங்களை காட்டி, இரத்தத்தை காட்டி, நம்முள் இருக்கும் கோப, காம மிருகங்களை உசுப்பிவிட்டு குளிர் காயும் விபசாரிகள் படம் எடுக்கலாம், சிறுமிகளை தடவி, அதில் கிடைக்கும் காசில் ஆன்மிகம் தேடி இமயமலை செல்பவர் படத்தில் நடிக்கலாம், கமல் பொத்திக்கொண்டு இருக்கவேண்டுமா? அவர் ஒரு நடிகர் அல்ல, இயக்குனர் அல்ல, தயாரிப்பாளர் அல்ல,.. படைப்பாளி.

சும்மா சுய விளம்பரத்துக்காக புண்படுத்திவிட்டார் என்று சொல்லி படத்தை தடை செய்யச் சொல்கிறார்களே,ம் அவர்களில் ஒருவன், கமலையும் அவரது மகளையும் வைத்து கேவலமான முறையில் பேசியுள்ளான். அது கமல் மனதை புன்படுத்தாதா? அதுவும் எப்படி? ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு பெண்களை வைத்திருப்பவர் கமலாம். ஒரே நேரத்தில் நான்கு பெண்களை வைத்திருக்கவில்லை தானே, பிறகென்ன?

எங்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், பார்க்காமல் பொத்திக்கொண்டு இருக்கலாம், அல்லது பார்த்துவிட்டு, அதை எதிர்த்து எழுதலாம், அல்லது அது சொன்ன கருத்துக்களை முறித்து இன்னொரு படம் எடுக்கலாம். படமே வரமுதல், ஒரு காட்சியைக்கூட பார்க்காமல், எப்படி அந்தப் படத்தை தடை செய்ய சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யலாம்? என்ன மனிதத் தன்மையற்ற வேலை இது? இந்த கேவலம் கேட்ட வேலைகளை மதத்தின் பெயரில் செய்வது உங்கள் மதத்தையே இழிவு படுத்தும் செயல் என்பது உங்களுக்கு தெரியாதா?

எனக்குத் தெரியும், ஒரு குறிப்பிட்ட மதத்தில், இன்னொரு குறிப்பிட்ட மதத்தை பற்றி எத்தனை இழிவாக சொல்லப்பட்டுள்ளது என்று. அதற்காக, அந்த மதத்தின் புனித நூலை தடை செய்யச் சொல்லி யாராவது ஆர்ப்பாட்டம் செய்தார்களா? இல்லையே?  உங்களுக்கு மட்டும் எங்கேயாவது ஏதாவது விஷேசமாக முளைத்திருக்கிறதா? ***** *** ******  தானே இருக்கிறது?


கமல் ஒன்றும் அத்தனை நல்லவர் இல்லைதான், அத்துடன் உள்குத்து இல்லாதவரும் இல்லைதான். அதற்காக அவர் செய்யும் வேலைகளை தடுக்க நாம் யார்? கேவலம், கூட்டம் கூடிக்கொண்டு கத்துகிறோமே, அந்த மனிதன், தனக்கு உண்மையான மனிதர் கூட்டத்தை ‘ஒன்று சேருங்கள்! என்று அழைத்தால் எத்தனை பெரிய கூட்டம் சேரும், தெரியுமா? இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா?

மண்டைக்குள் எதுவுமே இல்லாதவர்கள்தான் இப்படி எல்லாம் கத்துவார்கள். கேவலம், ஒரு படத்தின் மூலம் இழிவு பட்டுவிடக் கூடிய அத்தனை பலவீனமான மதமா உங்களுடையது? மன்மதன் அம்பு படத்திலே யாழ்ப்பாணத் தமிழர்களை கேவலப்படுத்தினார், எந்த யாழ்ப்பானத்தானாவது கொந்தளித்தானா? அப்படி நாகரிகமாக நடந்துகொள்ளுங்களேன்?

ஆர்ப்பாட்டம் செய்வார்கள், தகப்பனையும், மகளையும் பற்றி தவறாக பேசுவார்கள், இவர்களை நல்லவர்களாக காட்டிப் படம் எடுத்தாலும், அதற்கும் கத்துவார்கள், ஏனென்றால் இவர்கள் படம் பார்க்க முதலே கத்தத் தொடங்கிவிடுவார்கள், கலையை மதிக்க மாட்டார்கள்.. இப்படியெல்லாம் உங்களைப் பற்றி பேசினால் மனதை புண்படுத்துகிறாய் என்பீர்கள், ஆனால் உண்மையாக இதைத்தானே செய்கிறீர்கள் நீங்கள்? எத்தனை கேவலமான மனிதக் கூட்டமாக மதிக்கப்படுகிறீர்கள் என்பது புரியவில்லையா? உண்மையாக இஸ்லாத்தை உணர்ந்துகொண்ட அனைத்து மனிதர்களும் இந்தப் படத்தை எதிர்க்கவில்லையே.. இஸ்லாமியர்கள் படத்தில் வேலை செய்திருக்கிறார்களே...யோசிக்க மாட்டீர்களா?

ஒரு கலைஞனை இப்படியா புண்படுத்துவீர்கள்? இதனால் நொந்துபோய் அவர்க் பேசிய பேச்சுக்களை கேட்கவில்லையா? பிழைப்புக்காக படம் எடுப்பவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்க, மனிதர்களின் உயர்வுக்காக , சினிமாவி உயர்வுக்காக படம் எடுத்தவருக்கு இதா நிலை? என்ன கேவலமான மனிதர்கள் மத்தியிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

சமூக வலைதளங்களில் கமலை ஆதரித்து பிரபலங்கள் இட்ட பதிவுகள் :


Shekhar Kapur: “I stand up for #kamalhassan right 2 show d world #vishwaroopam n let d people decide, especially after Censor Board has passed the film.You?”

Ronnie Screwvala: “I think we are all going to another extreme – being moral police for “everythin” – not good at all.”

Anubhav Sinha: “Is the Tamil Nadu government saying that they do not recognise CBFC? Or they can’t handle law and order? Or they subscribe to the objection? When a government needs to ride on a movie star, you should know how intellectually and politically bankrupt they are.”

Siddharth: “Ban on ‘Vishwaroopam’ is a regressive, back to the dark ages blow to Tamil cinema by the Tamil Nadu government… how do we make a change?”

R Madhavan: “My Anbu Tamil Makkale.We have been one of the most secular states ever.Let not that ever be snatched from us.Vishwaroopam deserves a release.”

Madhur Bhandarkar: “I am appalled by the Tamil Nadu government’s decision to ban Kamal Haasan’s ‘Vishwaroopam’. After the film has been passed by the censor board. Not done.”

Manoj Bajpayee: “It is disappointing to hear that state government of Tamil Nadu banned ‘Vishwaroopam’ after the film is censored. That brings the importace of censor in question.”

Amit Khanna: “The ban on Kamalhaasan’s Vishwaroopam is totally uncalled for!Condemnable.”

Lakshmi Manchu: “It is appalling what’s happening with #vishwaroopam.. Pls don’t mix films w cheap politics. This insane cultural mafia shd end!!!”

இது தொடர்பாக விகடனுக்கு பாரதிராஜா அளித்த பேட்டி:
டந்த வாரம்தான் மதுரையில் வைத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பூரிப்பின் சுவடுகளே இல்லாமல் படீரென வெடிக்கத் துடிக்கும் கொதிகலன்போலக் காத்திருந்தார் பாரதிராஜா. கேள்விகளுக்குச் சுடுசுடு... கடுகடுவென அவர் கூறிய நேரடி பதில்கள் தணிக்கைக்குப் பிறகு இங்கே...
 '' 'விஸ்வரூபம்பட வெளியீடு தொடர்பாக கமலுக்கு...''
''வேண்டாம்யா... வேண்டாம்! ஆத்தாத்துப் போயிருக்கேன். நெஞ்சு கொதிக்குது. கமல் ஒரு மகா கலைஞன்யா. எங்கே அவனுக்காகக் குரல் கொடுத்தா, நம்மளுக்கு எதுவும் சிக்கல் வந்துருமோனு பயந்து நடுங்கி ஒதுங்கிக் கிடக்குது சினிமா உலகம். எங்கேயோ வடக்குல இருக்குற அமீர் கான் குரல் கொடுக்குறான். ஏன்... அந்த உணர்வு இங்கே இருக்குற 'படைப்பாளிகளுக்கு வரலை? ஏன்யா... உங்க அத்தனை பேரோட உரிமைக்கும் சேர்த்துத்தானே ஒத்தை மனுஷனா கமல் கெடந்து போராடிக்கிட்டு இருக்கான். அறுபது வருஷத்துக்கு முன்னாடியே கடவுள் சிலையைப் பார்த்து 'இது கல்... பேசாது..!னு கலைஞர் வசனத்தை 'பராசக்தியில் அனுமதிச்சு ரசிச்ச மண்ணுய்யா இது.
நான் எந்த அடையாளத்துக்குள்ளும் போக விரும்பலை. ஆனா,  கமல்ங்கிற கலைஞனுக்காக பாரதிராஜா என்கிற கலைஞன் குரல் கொடுக்கிறான். அவ்வளவுதான்!''
''ஆனால், 'கலைக்கு எல்லை இல்லைஎன்று சொல்லி சிறுபான்மையினர் உணர்வுகள் புண்பட அனுமதிக்க முடியுமா?''
''உண்மை என்னன்னு ஊர் உலகம் முழுசா புரிஞ்சுக்காமலே, 'புண்படுத்திட்டாங்கனு சொல்றது நியாயமா? 'அலைகள் ஓய்வதில்லைபடத்தின் க்ளைமாக்ஸில் பூணூலையும் சிலுவையையும் கார்த்திக், ராதா அறுத்து எறிவாங்க. அந்தக் காட்சி இந்து, கிறிஸ்துவர்களை எந்த வகையிலாவது புண்படுத்தியதா? 'வேதம் புதிதுபடத்தில் சத்யராஜ் கிட்ட ஒரு சின்னப் பையன், 'நான் கரையேறிட்டேன். நீங்க இன்னும் ஏறலையா?’னு கேட்பான். அந்தக் காட்சியைப் பார்த்துச் சம்பந்தப்பட்ட சாதியினர் புண்பட்டாங்களா?  ஒரே வார்த்தை - வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு களங்களில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும். அது எந்த இடத்தில், எந்தச் சூழலில் ஒலிக்குதுனு பார்க்கணும் இல்லையா?
சினிமா ஒரு அபூர்வ ஊடகம். அதில் படைப்பின் நேர்த்தியைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு, 'இது நொள்ளை... அது நொட்டைனு வம்படியா குத்தம் சொல்லாதீங்க.''  
''இது தொடர்பா கமல்ஹாசன்கிட்ட நீங்க எதுவும் பேசுனீங்களா? இந்த விவகாரத்தில் எதுவும் அரசியல் பின்னணி இருக்கா?''
''அவன்கிட்ட பேசலை. அவன் மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, இந்த விஷயத்தை உன்னிப்பா கவனிக்கிறப்போ எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது. பாக்யராஜ் கட்சி ஆரம்பிச்சப்போ, டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பிச்சப்போ, விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்போ எல்லாம் நான்தான் முதல் ஆளா அவங்களைத் திட்டித் தீர்த்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பார்த்தா, அவங்க மூணு பேரும் ஏதோ ஒரு விஷயத்தில் பலமா காயம்பட்டு, மனசு நொந்த பிறகே, அரசியலுக்கு வந்திருக்காங்க. இப்போ அந்த அரசியல் பாதையில் கமலையும் இறக்கிவிட்றாதீங்க.
கமல் மத்தவங்க மாதிரி இல்லை. எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதுக்கான முழுத் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கிட்டுதான் இறங்குவான். அப்புறம் அவன் அரசியலை உங்க யாராலும் தாங்க முடியாது.''


நொந்துபோய் நிருபர் சந்திப்பில் கமல் பேச்சு : (விகடனிலிருந்து...)

சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று படமெடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகர் கமலஹாசன்,படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டிருந்தால், கடன் கொடுத்தவர் வசம் தமது சொத்துக்கள் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார். 

இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்று சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய கமல்,  " இந்த படத்திற்காக நான் மிகுந்த பொருட் செலவு செய்துள்ளேன். நான் நின்று கொண்டிருக்கும் இந்த வீடு உட்பட என்னுடைய அனைத்து சொத்துக்களையும் இந்த படத்திற்காக அடமானம் வைத்திருக்கிறேன்.
படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகப் போக நான் நிற்கும் இந்த கட்டடம் கூட எனக்கு சொந்தமில்லாமல் போகும். அநேகமாக இதுவே கூட நான் இங்கிருந்து அளிக்கும் கடைசி பேட்டியாக அமையலாம்.

நாட்டின் ஒற்றுமையா இல்லை என்னுடைய சொத்தா என்ற கேள்வி வரும் போது, நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நான் கருதுகிறேன். நாட்டின் ஒற்றுமைக்காக சொத்துக்களை இழக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு பணம் முக்கியமல்ல. நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.
எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டதாக கருதுகிறேன்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.  இருப்பினும் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். 

எனது திரைப்படத்திற்கு தடை, தடைக்குதடை என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நான் தமிழகத்தை விட்டு வெளியேறவும் தயாராக இருக்கிறேன். மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனாமல் வேற மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன். தமிழகம் முதல் காஷ்மீர் வரை வேறு மதச்சார்பற்ற மாநிலம் இல்லை என்றால் மதச்சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன்.
விழுந்தாலும் விதையாக விழுவேன், எழுந்தால் மரமாக எழுவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைக்கலாம். இந்த மரத்தில் பல பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். சோலைகள் உருவாகும். மீண்டும் விதைகள் பல உருவாகும். ஆனால் அந்த முதல் விதை நான். எனக்கு மதம், அரசியல் சார்பு இல்லை. ஆனால் என் திறமை என்னுடன் இருக்கும்.
விஸ்வரூபம் படம் நடக்கும் களம் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான். இது இஸ்லாமியர்களை கேலி செய்யும் படமல்ல. எனக்கு மதம் இல்லை. மனிதம்தான் உண்டு" என்றார்.

* * *

18 000 000 $ செலவழித்திருக்கிறார் கமல். பத்து ரூபாய் கடதாசியில் தடை செய்யக் கோரி முறையீடா? என்ன பாசிச உலகமப்பா இது? திரை உலகமும், தமிழக அரசும் அந்த மகா கலைஞன் கஷ்டப்படும்போது, பார்த்துக்கொண்டிருப்பது ஏன்? நாளைக்கு தமிழ் சினிமா என்று ஏதாவது இருக்க வேண்டுமா, இல்லையா? வெறும் தங்கைகளுக்கு கூட்டிக் கொடுப்பதாக வரும் அலெக்ஸ் பாண்டியன் போன்ற ‘யார் மனதையும் புண்படுத்தாத படங்கள் மட்டும் தான் நாளைய தலைமுறைக்கு தமிழ் சினிமா அடையாளமா? வெட்கம்!!


“தடைகளைத் தாண்டியே சரித்திரம் படைப்பவன், ஞாபகம் வருகிறதா?
படத்தின் பாடலில் வரும் வரிகள்... தமிழ் சினிமாவின் தலைவன் தடைகளைத் தாண்டுவான், சரித்திரம் படைப்பான்... அவருக்கு இருப்பவர்கள் கமல் ரசிகர்கள் அல்ல, சினிமா ரசிகர்கள். பார்க்கலாம், பாசிசமா, கலையா...


கொந்தளிப்பதற்கு கமலுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. வித்தியாசம் என்ன என்றால், கமல் அவர்களை பயன்படுத்துவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்