இடுகைகள்

வெங்காயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகள் : பசியுடன் ஒரு ஆய்வு.

படம்
கொழும்பின் தெருவோர சாப்பாட்டுக்கடைகளில் சாப்பிட்டு வயிறு பழுதாகி, ‘மடைதிறந்து பாயும் நதி அலைதான்... ’ என்கிற நிலைமையில் இருக்கும்போது இந்தப் பதிவை எழுதவேண்டிய நிலைமையில் இருக்கிறேன். காலத்தின் கோலம். ஒருவேளை இந்த மொக்கை சாப்பாடுகளால் மனமுடைந்து, அடிக்கடி சொம்போடு காணாமல்போகவேண்டிய நிலைமைதான் பழசை அசைபோடும் வகையில் யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக்கடைகளைப்ப்றி எண்ண வைத்ததோ, தெரியவில்லை. கொழும்பின் எந்த உணவுக் கடைக்கும், அது ஐந்து நட்சத்திர ஹோட்டலானாலும் சரி, பத்துக்கு பத்து கடையில் அப்பம் சுட்டு விற்கும் கடையாகட்டும், ஒரு ஒற்றுமை உண்டு. அவரின் மலசலகூடமும், சாப்பாட்டு மேசையும் ஒரே சுத்தத்தில் இருக்கும். இதிலே முன்னையது நமது ஒருவருட பாதீட்டை ஒரே நாளிலே முடிக்குமாதலால், மிளகாய், எண்ணை, பழைய மாவில் செய்த பட்டப்பழைய பண்டங்கள், முகத்துராஞ்சிப் பெண்களின் நடமாட்டம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்த மொக்கை கடைகளிலே சாப்பிட வேண்டி வருகிறது. இது ஆப்பை தேடிப்போய் உட்காரும் வேலைதான் என்றாலும் வேறு வழி இல்லை அமைச்சரே. சாப்பாட்டுக்கு என்று யாழ்ப்பாணத்துக்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது. அது உ

விஸ்வரூபம் - சூரியன் பார்த்து குரைக்கும் நாய்கள்...

படம்
எந்த நேரத்தில் படத்துக்கு விஸ்வரூபம் என்று கமல் பெயர் வைத்தாரோ தெரியவில்லை, படம் தொடர்பான பிரச்சனைகள் இத்தனை விஸ்வரூபம் எடுத்து அவரையும், அவர் அல்லது அவர் சார்ந்தது சார்பானவர்களையும் குடைந்து வருகிறது. முதலில் அது தொடர்பான பிரச்சனைகள் எழுந்து, தான் தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து முதலிட்டு எடுத்த படம் கையை சுட்டுவிட்டால் என்ன பண்ணுவது என்று பயந்ததால் டி டி ஹெச் முறையில் தொலைக்கட்சிகளில் படத்தை ரிலீஸ் திகதிக்கு முன் இரவில் ஒளிபரப்ப திட்டமிட்டு, அதனால் வந்த பிரச்சனைகளை தாண்டி வந்தபிறகும், இந்த முஸ்லிம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தங்களை புண்படுத்துவதாக கமல் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் ஏதாவது ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்குவது சாதாரணமாகி விட்டது. என்னய்யா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? கலை, கலைஞன் என்பதெல்லாம் காட்டாறு மாதிரி. அப்படித்தான் இருக்கும். எங்களால் தாங்க முடியாவிட்டால் ஒதுங்கிப் போய்விட வேண்டியதுதான். என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது? உங்கள் விருப்பத்துக்குத்தான் படம் எடுக்க வேண்டுமா ஒரு மகா கலைஞன்? பணத்துக்காக பெண்களது அங்கங்களை கா

தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும். (1)

படம்
சே குவேரா... புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும்   வாழ்கிறார்... *             *             * அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கும் அளவுக்கு வீச்சு அற்றவர்கள்.. அதே வேளை இப்படியாக ஒரு பதிவை வாசிக்குமளவுக்கு உள்ள நீங்களோ, போலி அறிஞராக பேஸ்புக்கில் நடிப்பவர் இல்லை, அப்படி இருக்க முடியாது. *             *             * இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்த நல்லவனும், மொழிப் பற்றாளனும், பெண்ணியவாதியும், புரட்சிக்காரனும் வெளிய

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே- 05

படம்
இதுவரை தமிழ் சினிமாவின் மாயைத்தனங்களையும், அதற்கு அடிமையான வெறியர்கள் வெறித்தனமாக நடந்து கொள்வதையும் பார்த்தோம். ஆனால் போனபதிப்பை வாசித்து விட்டு சிலர் என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியெல்லாமா எழுதுவீர்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் என்ன செய்வது சில விடயங்களை சமூகத்தின் பார்வையிலிருந்து எழுதினால்தான் இப்படி வெறித்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு தங்களின் நிலை சமூகத்தில் என்ன என்று சிறிதாவது விளங்கும். எடுத்துக்காட்டாக எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்த இரு நண்பர்கள் முகப்புத்தகத்தில் தங்களின் பெயருக்கு பின்னால் கதாநாயகனின் பெயரை நீக்கிவிட்டு தங்களின் தந்தையின் பெயரை சேர்த்திருந்ததுடன் இப்பதிவை பகிர்ந்துவேறு இருந்தார்கள். இன்னொரு நண்பர் தன்  முகப்புத்தகத்தின் பெயர்மாற்றம் செய்யும் சந்தர்பங்கள் முடிந்துவிட்டன என்று வெளிப்படையாக கவலை தெரிவித்திருந்தார். இவ்வாறு இப்பதிவுகளை வாசித்து விட்டு ஓரிருவர் திருந்தினாலுமே அது எமக்கு வெற்றிதான்.  சர்ச்சைக்குள்ளான இதன் முன்னைய பதிவை படிக்காதவர்கள் இங்கே கிளிக்கி படித்துவிட்டு தொடரவும்.                          இப்படி இவர்கள் பாலை குடம்

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-04

படம்
இதுவரை தமிழ் சினிமாவில் நம் நாயகர்கள் செய்யும் அக்கப்போருகளையும் அதற்கு நம் வெறித்தனமான ரசிகர்கள் எவ்வாறு ஏமார்ந்து போகிறார்கள் என்பது பற்றியும் பார்த்துகொண்டிருந்தோம். இனி இவ்வாறு ஏமார்ந்து போன அவர்கள் தங்கள் முத்திப்போன முட்டாள் தனத்தால் செய்யும் வெறிக்கூத்துக்களை பார்கலாம். இதன் முன்னைய பதிப்புக்கு இங்கே கிளிக்கவும்.                   இந்த பைத்தியம் பிடித்தவர்கள் எல்லாம் சும்மா நாட்களில் தங்கள் மன நிலையை ஆங்காங்கே தவறாமல் வெளிப்படுத்தினாலும் பருவம், அமாவாசை என்று வரும் போது சற்று  மெய்மறந்த நிலையில் பைத்தியம் உச்சமாகி ஊரையே ஒரு ஆட்டு ஆட்டி விடுவார்கள் என்று பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம் அல்லவா இதுபோலத்தான் நம் வெறியர் பட்டாளமும் சாதாரண தினங்களில் தங்கள் வெறித்தனத்தை அவ்வப்போது வெளிகாட்டினாலும் தாங்கள் முன்னோடியாகக்கருதும் தங்கள் காதலிகளின் படம் வெளிவந்தவுடன் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே ஐயோ சொல்லில் அடங்காது. எல்லாவற்றையும் விலாவாரியாக பிரித்து மேயலாம் வாருங்கள். படம் வெளியாகும் நாளில் நடக்கும் மாபெரும் சாதனைகள் இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக இழுபட்டு ஒருவழியாக கதாந