இடுகைகள்

latest லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானம்-சிறுகதை

படம்
“உங்கட காணில ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்கோவன்?மனிசன் வேலையில்லாமல் ரண்டு நாளா வீட்டிலதான் இருக்கிறார்”.படிக்கட்டில் இருந்தபடி கதிரையில் இருந்த பாலரை கெஞ்சிக்கொண்டிருந்தது கனகு. "சரி கனகு இருந்தா சொல்லமாட்டனா? சரி சரி போய்ட்டு நாளைக்குவாவெணை" கனகு கந்தல்துணிகளை சுருட்டிக்கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானது.கனகிற்கு நான்கு பிள்ளைகள் கடைசி மகன் ஸ்கொலர்சிப் படித்துக்கொண்டிருக்கின்றான்.மூத்தவளுக்கு கல்யாணமாகிவிட்டது.கனகின் கணவர் கூலிவேலை செய்பவர். நிவாரண அரிசியின் துணையுடனும் கனகு வேலைக்கு செல்லுமிடங்களில் கொடுக்கும் பரிசுகளுடனும்தான் கனகின் குடும்பம் வாழ்கின்றது. பாலர் எழும்பி சென்றதும் பாலரின் மூத்தமகன் கூப்பிட்டான் "அக்கா.....இண்டைக்கு வைரவருக்கு பொங்கினது புக்கை வடையெல்லாம் இருக்கு பொறுன்கோவன் கொண்டுவாறன்". "எடுத்துவையெணை நான் பின்னால வாறன்" என்று கூறிவிட்டு கனகு விறுவிறுவென்று பாலரின் வீட்டைச்சுற்றி குசினிக்கு வந்துசேர்ந்தாள். சாதிப்பிரச்சனை கனகிற்கு வீட்டுக்குள் செல்லவோ வீட்டினுள்ளே இருக்கும் தளபாடங்களை பயன்படுத்தவோ அனுமதியில்லை. வீட்டின் உள்ளே கு

மூளைக்குள் கடவுள் எங்கிருக்கின்றார்?--டெம்போரல் லோப்பில் கடவுள்

படம்
டெம்போரல் லோப்பில் கடவுள் வருகின்றார் .... இது திண்ணை இணையத்தளத்தில்   நீண்ட 11 பாகங்களாக வெளிவந்த கட்டுரை ஆர் . கோபால் என்பவரால் வெளியிடப்பட்டது . அந்த 11 ஐயும் ஒரே வியூவில் எனக்குவிளங்கிய வகையில் வெளிப்படுத்துவதுதான் இப்பதிவின் நோக்கம் . முதலாவதாக இக்கட்டுரையை விளங்கிக்கொள்வதற்கு சில விடயங்கள் விளங்கியிருத்தல் அவசியம் . Temporal lobe epilepsy  Temporal lobe epilepsy   என்ற ஒரு வகை வலிப்பு நோய் இருக்கின்றது . இது ஏற்படுபவர்களுக்கு கடவுளைக்கண்ட அனுபவங்கள் , தானே கடவுளான அனுபவங்கள் , தான் தேவதூதுவனான அனுபவங்கள் , பிரபஞ்சத்துடன் ஐக்கியமான உணர்வுகள் என்பவை ஏற்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றார்கள் . விடயம் என்னவென்றால் உலகத்தில் பெரிய பெரிய மதங்களை உருவாக்கிய தேவதூதுவர்களின் அனுபவங்களும் Temporal lobe epilepsy   என்னும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அனுபவங்களும் ஒன்றாக இருந்தன . சோ கேம் ஸ்ரார்ட் ..  இதன் அர்த்தம் கடவுள் நம்பிக்கைகொண்டவர்கள் எல்லாம் இந்த Temporal lobe epilepsy என்னும் வல