மூளைக்குள் கடவுள் எங்கிருக்கின்றார்?--டெம்போரல் லோப்பில் கடவுள்

டெம்போரல் லோப்பில் கடவுள் வருகின்றார்.... இது திண்ணை இணையத்தளத்தில்  நீண்ட 11 பாகங்களாக வெளிவந்த கட்டுரை ஆர்.கோபால் என்பவரால் வெளியிடப்பட்டது.அந்த 11 ஐயும் ஒரே வியூவில் எனக்குவிளங்கிய வகையில் வெளிப்படுத்துவதுதான் இப்பதிவின் நோக்கம்.
முதலாவதாக இக்கட்டுரையை விளங்கிக்கொள்வதற்கு சில விடயங்கள் விளங்கியிருத்தல் அவசியம்.Temporal lobe epilepsy 

Temporal lobe epilepsy  என்ற ஒரு வகை வலிப்பு நோய் இருக்கின்றது.இது ஏற்படுபவர்களுக்கு கடவுளைக்கண்ட அனுபவங்கள்,தானே கடவுளான அனுபவங்கள்,தான் தேவதூதுவனான அனுபவங்கள்,பிரபஞ்சத்துடன் ஐக்கியமான உணர்வுகள் என்பவை ஏற்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றார்கள். விடயம் என்னவென்றால் உலகத்தில் பெரிய பெரிய மதங்களை உருவாக்கிய தேவதூதுவர்களின் அனுபவங்களும் Temporal lobe epilepsy  என்னும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அனுபவங்களும் ஒன்றாக இருந்தன.சோ கேம் ஸ்ரார்ட்.. 
இதன் அர்த்தம் கடவுள் நம்பிக்கைகொண்டவர்கள் எல்லாம் இந்த Temporal lobe epilepsy என்னும் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்று அர்த்தமல்ல.ஆனால் நீங்கள் கடவுளாக உணர்ந்தால் நீங்கள் தேவதூதுவனாக உணர்ந்தால் சம் திங்க் ரோங்க்...இந்த விதி நித்தியானந்தா சாய்பாபா போன்றோர் ஆதிசங்கரர் நாவுக்கரசர் சம்பந்தர் ஜீஸஸ் அல்லா முதற்கொண்டு அனைவருக்கும் இதனூடாக இணைப்பை கண்டுபிடித்துள்ளார்கள் விஞ்ஞானிகள்

எமக்கு வலி,துன்பம்,இன்பம்,காதல்போன்ற உணர்ச்சிகள் ஏற்படும்போதும் எமது மூளையில் மின்,இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதை நாம் செயற்கையாகவும் ஏற்படுத்தமுடியும்(இதில் 100 வீதம் இல்லாவிடினும் ஓரளவிற்கு விஞ்ஞானிகள் வெற்றிகண்டிருக்கின்றார்கள்).பார்வையற்ற ஒருவருக்கு குறைந்தபட்ச பார்வையை செயற்கையாக வழங்கியிருக்கின்றார்கள். சோ இதேபோல் Temporal lobe epilepsy என்ற வலிப்பில் இவர்கள் தாம் கடவுளைக்கண்டதுபோல் தேவதூதன் ஆனதுபோல் அவர்கள் பட்ட அனுபவத்தை மீண்டும் செயற்கையாக ஏற்படுத்தி உறிதிப்படுத்தியுள்ளார்கள் விஞ்ஞானிகள்.கடவுளையே நம்பாத நாத்திகபேர்வழிகளில் இதே பரிசோதனையை செய்ய அவர்கள் தாங்கள் கடவுளைக்கண்டதுபோன்ற உணர்வைப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்(ஆதாரங்கள் யார் யார் கூறினார்கள் என்பது கீழே தொடர்ந்துவரும்)




முதலில் டெம்போரல் லோப் என்றால் என்ன?

மூளையை பல பகுதிகளாகப்பிரித்திருக்கின்றார்கள். மூளையின் செயற்பாடுகளை இலகுவாக இனம் காண்பதற்கு உதவியாகவும் அச் செயற்பாட்டு மையங்களை இலகுவாக அடையாளப்படுத்துவதற்குமாக இவ்வாறு பகுதி பகுதிகளாகப்பிரித்து பெயரிட்டுள்ளார்கள்.
உதாரணத்திற்கு ஒரு ஐபோனை ஸ்கிரீன்,பற்றி,கவர்,ஸ்பீக்கர்,கமரா என்று பகுதி பகுதியாக பெயரிட முடியும் அதேபோல் மூளையையும் பிரித்திருக்கின்றார்கள்.



மேலே உள்ள படத்தில் புரொன்ரல்,பரீற்றல்,ஒகியுபற்றல் என்ற பகுதிகள் காட்டப்பட்டுள்ளன மஞ்சள்கலர் பகுதிதான் ரெம்போரல் லோப்,இது எமது காதுப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது

இவ்வாறு பிரிக்கப்பட்ட மூளையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பல தொழில்கள் இருக்கின்றன.அதில் ரெம்போரல் லோப்பில்தான் கேட்டல்,எமோஸனல் உணர்ச்சிகள்,பேச்சு போன்றவற்றிற்கான மையங்கள் அமைந்துள்ளன.

மூளை என்பதே சிக்கலான விடயம்தான் மனித மூளைமட்டுமல்ல புழுவின் மூளைமுதற்கொண்டு இந்த சிக்கல்தன்மை ஆரம்பிக்கின்றது சாதாரண ஒரு புழு கொண்டிருக்கும் மூளையில் 300 நியூரோன்கள் இருக்கின்றன.புழுவின் செயற்பாடுகள் இந்த 300 நரம்புக்கலங்களுக்கும் இடையில் ஏற்படும் எழுந்தமானமான கணத்தாக்கக்கடத்தல்களினால் ஆற்றப்படுகின்றது.இதுவே மனிதனுக்கு 1 பில்லியன் நியூரோன்கள் உள்ளன எனவே சிக்கல்தன்மை எவளவு தீவிரமானது என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.மனிதனின் மூளை புழுவின் மூளையை விட பெரியது அதிக நிறையுடையது என்பதுமட்டுமே மனிதமூளையின் சிக்கல்தன்மைக்குக்காரணம் அல்ல.யானையின் மூளை மனிதனைவிட பெரியது.நியூரோங்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆனால் மனித மூளை எல்லாவற்றையும் விட சிக்கல்தன்மையைக்கொண்டிருக்கிறது சற்று தனித்துவமாகவும் இருக்கின்றது கூர்ப்புதான் இதற்குக்காரணமாகக்கூறப்படுகின்றது.

சரி சுவாரஸ்யத்திற்காக ஒருவிடயம் சாதாரணமாக மனித உடலில் இருக்கும் ஏனைய பகுதிகளை உதாரணத்திற்கு கை,கால் போன்றவற்றின் தொழிற்பாடுகளை எம்மால் இலகுவாக அடையாளம்கண்டுகொள்ளமுடியும்(மூளையுடன் ஒப்பிடுகையில்) ஆனால் மூளையை அவ்வாறு பரிசோதனை செய்யமுடியாது.காரணம் ஒருவர் உயிரோடு இருக்கும்போதோ அல்லது இறந்த உடலைக்கொண்டோ உள்ளே என்ன இருக்கின்றது என்பதையும் தொழிற்பாடுகளையும் அறியலாம்.உயிரோடு இருக்கும்போதும் கை,கால் களின் இயக்கங்களை பரிசோதனை செய்யலாம்.ஆனால் ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரது மூளையில் நாம் கைவைக்கமுடியாது.தவறினால் அவரை பக்கவாதமோ,மரணமோ ஏற்பட்டுவிடும்.அதற்காக அவர் இறந்தபின்னர் மூளையை ஆராயமுடியாது காரணம் மூளை தொழிற்படப்போவதில்லை.
சோ எப்படி மூளையின்பகுதிகளை ஆராய்கின்றார்கள்?
Brain Mapping Technology யைகொண்டு இவற்றை அறிகின்றார்கள் ஸ்கான் செய்வது

Computer axial tomography (CAT) scan -X-rays the brain from many angles and show structural abnormalities.
Diffusion tensor-MRI (DTI) images "tracts" of neurons that connect brain regions by following water movement in the brain.
These techniques examine brain activity:
Electroencephalography (EEG)- indicates electrically active locations in the brain using detectors implanted in the brain or worn on a cap.
Positron emission tomography (PET)- takes images of radioactive markers in the brain.
Functional MRI (fMRI) -shows images of brain activity while subjects work on various tasks.
Pharmacological functional MRI (phMRI) -shows brain activity as drugs are administered.
Transcranial magnetic stimulation (TMS)- noninvasively stimulates parts of the brain to trigger certain behaviors.

 Temporal lobe epilepsy ஆரம்பத்திலேயே கூறியது போல் இது ஒரு வலிப்பு நோய் டிஸோர்டர் இதில் 40 வகை இருக்கின்றது இது ஏற்படும்போது ரெம்போரல் பகுதிகளில் தாறுமாறான கணத்தாக்கங்கள் ஏற்படும் நரம்புக்கலங்களுக்கிடையில் தாறுமாறான தொடர்புகள் ஏற்படும்.இது  5 வயதுகுக்குறைவான சிறியவர்கள் முதல்(2-5%)அனைவருக்கும் எந்த வயதிலும் ஏற்படக்கூடியது.பக்க விளைவுகளாக காய்ச்சல் வலிப்பு நரம்புக்கலங்கள் இறப்பு என்பன ஏற்படலாம் ஆனால் இந்த வலிப்பு மற்றைய வலிப்புக்களைப்போல் நீண்ட நேரம் ஏற்படாது சில நிமிடங்களில் நின்றுவிடும்

இவற்றைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர் வி எஸ் ராமச்சந்திரன் என்ற தமிழர்  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனவியல் துறை பேராசிரியராகவும், நியூரோசயன்ஸ் க்ராசுவேட் புராகிராமின் இயக்குனராகவும் இருக்கிறார். நியூஸ்வீக் பத்திரிக்கை இவரை 1997இல் உலகத்தில் மிக முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருந்தது. 2011இல் டைம் பத்திரிக்கை இவரை உலகத்தின் மிக முக்கியமான நூறு பேர்களில் இவரை சேர்த்திருந்தது.(temporal lobe epilepsy bbc என்று யூ டியூப்பில் தேடி ராமசந்திரன் பிபிசிக்கு கொடுத்த பேட்டிகளைப்பார்க்கமுடியும்)

கீழே காணும் இந்த இரண்டு வீடியோக்களும் “கடவுளும் டெம்போரல் லோபும்” என்பது பற்றிய ஆவணப்படத்தின் பகுதிகள்




ஜான் என்ற ஒரு டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவரது அனுபவங்கள் இங்கே பகிரப்படுகின்றன.

நான் கடவுளாக உணர்ந்தேன். நான் சொர்க்கத்தையும் நரகத்தையும் உருவாக்கியது நானே என்று உணர்ந்தேன்என்கிறார் ஜான்.
ஒருமுறை தனது பெண் நண்பரோடு மலைகளுக்கு நடுவே நடந்துகொண்டிருந்தபோது தனக்கு இந்த தாக்குதல் நடந்ததை உணர்ந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு மிகவும் தத்துவரீதியில் அவரது மனது ஆன்மீகம், கடவுள், இந்த மாபெரும் நடனத்தில் தனது இடம் என்பதை மிகவும் ஆழமாக தீவிரவாக சிந்தித்துகொண்டிருந்ததை உணர்ந்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு மிகவும் பலவீனமாக உணர்ந்தார். ஆனால் அதே நேரத்தில் எதையுமே சாதிக்கக்கூடிய வலிமை பெற்றவராகவும் தன்னை உணர்ந்தார்.
ஒருமுறை திடீரென்று தெருவில் நடந்துகொண்டிருந்தபோது இந்த உணர்வு வந்ததும், “நானே கடவுள்என்று நடுத்தெருவில் கத்திகொண்டே ஓடினார். அவரது தந்தை அவரை திட்டி உள்ளே வா என்று கூட்டிக்கொண்டு சென்றதை கூறுகிறார்.
ஒரு சில நேரங்களில் அந்த நிகழ்வு நடக்கும்போது அவர் வேறொரு தளத்தில் வேறொரு உண்மையில் அவர் சில நிகழ்வுகளை அனுபவித்துகொண்டிருக்கும் உணர்வை பெறுகிறார்.
அந்த நிகழ்வு வரும்போது மிக அற்புதமான இன்ப உணர்வு பெறுவதும், மிகவும் அதிகமான துன்ப உணர்வை பெறுவதும், சில நேரங்களில் மற்றவர்களுக்கு அந்த உணர்வை விளக்கவே முடியாத துன்பத்தை அடைவதையும் விளக்குகிறார்.
அப்பாவும் மகனும் எந்த காலத்திலும் மத உணர்வாளர்களாகவே இருந்ததில்லை. இருப்பினும்,  ஏன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் மத உணர்வை பெறுகிறார்கள் என்ற முக்கியமான கேள்விக்கு விடையறிய ராமசந்திரன் முயல்கிறார்.


இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இந்த அனுபவங்களை பெறுகின்றார்கள் என்பதற்கு ராமசந்திரன் விடை அறியமுயல்கின்றார்...
3 கருத்துக்களை முன்வைக்கின்றார்..
இவர்களுக்கு உண்மையாகவே கடவுள்கள் வந்து தரிசனம் கொடுத்திருக்கலாம்...ஆனால் அப்படி நடைபெற்றால் அறிவியளாளனாக என்னால் அதை நிரூபிக்கமுடியாது.
நியூரோன்களின் வெடிப்புக்களால் இவ்வாறான தோற்றப்பாடுகள் ஏற்படலாம்.

ஒரு வேளை இவற்றை வாசிக்கும்போது மிகவும் அசாத்தியமானவையாக தோன்றலாம்.ஆனால் நாம் கனவு கண்டிருக்கின்றோம் இல்லையா அதற்காக இதை கனவு என்று கூறுவதற்கில்லை ஆனால் கனவு போன்றதோற்றப்பாடு கனவு கண்டோமேயானால் விழித்தபின்னர் அதை நாம் உணர்ந்துவிடுவோம் சப்போஸ் எமதுமூளை அதை கனவு என்று நம்பமறுத்துவிட்டால் எம்மைப்பொறுத்தவரை அது கனவல்ல நிஜம் லைக்தற்.

3
ஆவது காரணம்கூறுகிறர் இந்த ரெம்போரல்லோப்தான் எமக்கு எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை உணரும் பகுதி.அம்மா எமது குடும்பம்...போன்றவை...எம்மை தாக்க காத்திருக்கும்புலி போன்றவற்றை உணர்த்தும்பகுதி இதன் அருகில்amygdala என்ற பகுதி காணப்படுகின்றது.
 .


இதன் தொழில் எமோஸனல் ரியாக்ஸன்ஸ் உணர்ச்சிகளை உருவாக்குதல் இப்பகுதியும் டெம்போரல் லோப்பும் இணைந்துகாணப்படும் இவை இரண்டையும் இணைக்கும்பகுதியில் கன்னாபின்னாவென்று கணத்தாக்கங்கள் குழப்பங்களாக கடத்தப்படும்.இதனால் அம்மா அப்பா என்பவர்கள் முக்கியம் என்பவை முக்கியம் என்பதைவிட்டுவிட்டு 
மரம் மட்டை வெங்காயம் என்று சகலதுமே மிகவும் முக்கியம் என்ற லிஸ்டுக்குள்வந்துவிடுகின்றது.அதாவது மரம் மட்டை என்பவற்றுடன் உணர்வு பூர்வமாக இணைந்த உணர்வு இவை ஆழமான பொருள்கொண்டவையாக தோன்றும் உணர்வு ஏற்படுகின்றது இதைத்தான் ஆன்மீக உணர்வு என்று அழைக்கின்றோம் என்கிறார் ராமசந்திரன்.


இவ்வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஜான் தனக்கு நடந்தவற்றைக்கூறுகின்றான்...

இந்த மனித குலத்துக்கு நடந்ததெல்லாம் நூற்றுக்கு நூறு நடந்தது சரியாகவே நடந்தது என்ற உணர்வு தோன்றுகிறது. நான் நூற்றுக்கு நூறு சரியாகவே சொல்கிறேன். நான் வெளியே சென்று எல்லோரையும் என்னை பின்பற்ற வைக்க முடியும் என்று கருதுகிறேன். தலையில் தொப்பிகளை வைத்திருக்கும் பாதிரிமார் முட்டாள்களைப்  போலல்லாமல் நான் உண்மையான விஷயத்தை சொல்கிறேன். உலக மக்கள் மிக மிக சரியானவற்றையே சொல்லும் என்னைத்தான் பின்பற்ற வேண்டும்என்று சொல்கிறார்
நான் தான் புதிய தீர்க்கதரிசி என்ற உணர்வை பெறுகிறேன். உலகத்தை காப்பாற்ற வந்தவன் நான். நான் இதுவரை மத நம்பிக்கையே இல்லாதவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ உலகத்தை நானே காப்பாற்ற வந்தவன் என்ற உணர்வை பெறுகிறேன்
இவைஎல்லாம் கணத்தாக்கக்குழப்பங்களினால் ஏற்பட்டவை .டெம்போரல் லோப்பில் உள்ள நியூரோன்கள் இவ்வாறான ஆன்மீக உணர்வுகளை ஏற்படுத்துவனவாக இருக்கலாம்.இதைத்தான் ஆன்மீக உணர்வு என மக்களால் உணரப்பட்டிருக்கலாம்.உலகின் பல மதங்களில் இவ்வாறான அனுபவ உணர்வுகள் இருக்கின்றன இவை ஒரு சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவுகின்றன என்கிறார் ராமசந்திரன்




டெம்போரல் லோப் எபிலெஸ்பி பற்றிய சிறிய விளக்கம்



இந்த வலிப்பால் பாதிக்கபப்ட்ட ஒருவரின் பேட்டி....

ரூடி: நான் இறந்துவிட்டதாகவும் நான் நரகத்துக்கு சென்றதாகவும் நினைத்தேன்.
க்வென்: என்னுடைய மகனை கடவுள் என்று நினைத்திருந்தேன்
பெர்னி: (க்வெனின் கணவர்) அப்புறம் பார்த்தால், அவள் என்னை ஜோஸப்பாகவும், அவள் மேரி என்றும், சின்ன சார்லி (மகன்) கிறிஸ்து என்றும் நினைத்திருந்தாள்.
குரல் (பார்பரா ஃப்ளைன்): மூளை நோய்களிலேயே மிகவும் வினோதமான மூளை நோயால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தாங்கள் கடவுளால் தொடப்பட்டதாக இவர்கள் நினைக்கும்படி இது ஆக்குகிறது. ஆனால், இவர்களது அசாதாரணமான நிலை, மனித மனத்துக்குள்ளும், மத நம்பிக்கைக்குள்ளும் விஞ்ஞானிகள் நுழைந்து பார்க்க ஒரு தனித்த பார்வையை தருகிறது. இதன் விளைவாக, நமது மூளையின் பௌதீக அமைப்புதான் நம்மை கடவுளை நம்பும்படி தூண்டுகிறதா என்ற மிகவும் அதிரடியான கேள்வியை ஆய்வாளர்கள் கேட்டுகொண்டிருக்கிறார்கள்.
இதை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக்

பேராசிரியர் விலயனூர் ராமச்சந்திரன்: (University of California, San Diego):-

மாபெரும் மத தலைவர்களுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கும் என்பது சாத்தியமான ஒன்று. இது அவர்களுக்கு பிரமைகள், காட்சிகள், விளக்கமுடியாத ஆன்மீக உணர்வு ஆகியவற்றுக்கு தயாராக ஆக்குகிறது.
குரல்: செயிண்ட் பவுல் அவர்களை இங்கே குறிப்பிடலாம். டமாஸ்கஸுக்கு போகும் சாலையில் கண் குருடாக்கும் ஒளியில் இறைவன் இவருக்கு காட்சி அளிக்கிறார்.

ராமச்சந்திரன்: பல மதஞானிகள், செயிண்ட் பவுல் உட்பட, அவர்கள் விவரிக்கும் அனுபவங்கள் இந்த நோயாளிகள் விவரிக்கும் அனுபங்களை ஒத்து இருக்கின்றன. ஆகவே செயிண்ட் பவுலுக்கு இதே மாதிரி வலிப்பு இருந்திருக்கும்

 என்பது சாத்தியமானதுதான்.

குரல்: மோஸஸ்? பத்து கட்டளைகளை கொண்டுவந்த மோசஸ், கடவுளின் குரலை எரியும் செடியில் கேட்டதாக நம்பினார்.

ராமச்சந்திரன்: மோஸசும், அதே போல இந்தியாவின் நிறைய ஞானிகளும் மூளையில் இப்படிப்பட்ட வலிப்புகளால் அப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இருந்தார்கள் என்பது சாத்தியமானதுதான். இந்த அனுபவங்கள் அவர்களது மன வாழ்க்கையை மிக அதிகமாக செழுமைப்படுத்தியிருக்கலாம்.

குரல்: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு இந்த மத ஞானிகளுக்கு

 டெம்போரல் லோப் வலிப்பு இருந்தது என்பதை அறுதியிட்டு

 கூறமுடியாது என்று பிஷப் ஸ்டீபன் சைக்ஸ் நம்புகிறார்.

இது தொடர்பான பரிசோதனைகள் 

 இதன் பின்னர் வலிப்பு உள்ளவர்களையும் வலிப்பு இல்லாதவர்களையும் ஒப்பிட்டு பரிசோதனையை மேற்கொள்கின்றார் ராமசந்திரன்

ராமச்சந்திரன்: நாங்கள் என்னசெய்தோமென்றால், 
இந்த வலிப்பு இல்லாத சாதாரண நபர்களை எடுத்துகொண்டோம்.
 அவர்களது விரல் நுனிகளில் எலட்ரோடுகளை பொருத்தி அவர்களது தோல் மின்சார தடுப்பு அளவை அளந்தோம். இது அவர்கள் ஒரு சில வார்த்தைகளை பார்க்கும்போது எந்த அளவுக்கு வேர்க்கிறார்கள் என்பதை அளக்கிறது. 
ஒரு சாதாரண மனிதர், மேஜை என்ற வார்த்தையை காட்டினால், வேர்க்கமாட்டார். ஆனால், செக்ஸ் என்ற வார்த்தையை காட்டினால் வேர்க்க ஆரம்பிப்பார். அது பதிவாகிறது. இதன் பெயர் கால்வனிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் அல்லது கால்வனிக் தோல் அளவீடு என்று சொல்லலாம். இப்போது கேள்வி என்னவென்றால், இதே பரிசோதனையை டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்களிடம் நடத்தினால் என்ன நடக்கும்?


குரல்: வலிப்பு உள்ள நோயாளிகளிடம் மூன்று வகையான வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. பாலுறவு ரீதியான வார்த்தைகள், சாதாரண வார்த்தைகள், மத ரீதியான வார்த்தைகள். சாதாரண வார்த்தைகள், எதிர்பார்த்தது போலவே ஒரு உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பாலுறவு மற்றும் மத ரீதியான வார்த்தைகளை காட்டும்போது கிடைத்த அளவீடுகளை பார்த்து அதிசயித்தார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

ராமச்சந்திரன்: “கடவுள்போன்ற் மத ரீதியான வார்த்தைகளை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கு மிகப்பெரிய கால்வனிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் இருந்தது என்பதை பார்த்து அதிசயித்தோம். மாறாக, பாலுறவு ரீதியான வார்த்தைகளை காட்டும்போது, குறைவாகவே கால்வனிக் ரெஸ்பான்ஸ் இருந்தது. வேறொரு வகையில் சொல்ல வந்தால், கடவுள் மதம் ஆகிய வார்த்தைகளுக்கு அவர்களது ரெஸ்பான்ஸ் அதிகமாகவும் பாலுறவு வார்த்தைகளுக்கு குறைவாகவும் இருந்தது. சாதாரண மனிதர்களுக்கு தலைகீழாக இருக்கும்.

குரல்: மத ரீதியான பிம்பங்களுக்கு மனித உடலின் பௌதீக வெளிப்பாடு, மூளையில் இருக்கும் டெம்போரல் லோபில் இருக்கும் செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டது என்பதை மருத்துவ ரீதியாக நிரூபித்த முதல் ஆதாரம், தடயம் இதுவே.

ராமச்சந்திரன்: ஆக, நாங்கள் என்ன சொன்னோமென்றால், டெம்போரல் லோபில் சில இணைப்புகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தேர்ந்தெடுத்து செயலாக்கினோம். அந்த இணைப்புகளின் செயற்பாடுகள் இந்த நோயாளிகளிடம் உச்சத்துக்கு கொண்டுசெல்கின்றன. இந்த குறிப்பிட்ட நியூரான்களின் இணைப்புகள் மத நம்பிக்கைக்கும், ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் உகந்தவையாக இருக்கின்றன. இவை இவர்களை நம்பிக்கையாளர்களாக ஆக்குகின்றன.

டெம்போரல் லோப்களை தூண்டுவதன் மூலம் செயற்கையாக ஆன்மீக உணர்வை எல்லா மனிதர்களுக்கும் அடைய வைக்க முடியும் என்று டாக்டர் மைக்கேல் பெர்ஷிங்கர்(michael persinger ) கூறுகிறார். டெம்போரல் லோப்களுக்கு நடுவே ஒரு மின்காந்த புலத்தை உருவாக்கும் ஒரு கருவியை டாக்டர் பெர்ஷிங்கர் வடிவமைத்தார். உண்மையான ஒரு மத வெளிப்பாடு அனுபவத்தை இந்த கருவி மூலம் உருவாக்க முடியும் என்று கூறுகிறார்.


இவர் ஒரு ஹெல்மெட்டை உருவாக்கிவைத்திருக்கின்றார்..இதன் பெயர் 

THE GOD HELMET.




டாக்டர் மைக்கல் பெர்ஷிங்கர்(Laurentian University): இந்த ஹெல்மெட் பலவீனமான காந்த புலத்தை, முக்கியமாக டெம்போரல் லோபில் உருவாக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குள் இருக்கும் சோலனாய்ட்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு நேரத்தில் ஹெல்மட்டுக்குள் காந்த புலம் பாய்கிறது. அதே நேரத்தில் மூளைக்குள்ளும் பாய்கிறது.
குரல்: பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். டான் ஹில் அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது.
டான் ஹில்: ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களை பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். அதிவேகத்தில் சக்தி மேலேயும் கீழேயும் என் முதுகுத்தண்டில் பாய்வதை உணர்ந்தேன். ஏப்பம் (சிரிக்கிறார்) வந்தது. அது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. பொதுவாக நோய்வாய்ப்பட்ட உணர்வு.
குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் காந்த புலத்தை மாற்ற மாற்ற, டானுக்கு வினோதமான உணர்வுகள் தோன்றின. தான் தனியாக இல்லை என்ற உணர்வு.
டான் ஹில்: என் காதுகள் அளவுக்கு என்னுடைய தோள்கள் இறுக்கமடைந்தன.
நான் இருக்கும் அறையில் யாரும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், இங்கே ஏதோ ஒன்று இருக்கிறது என்ற உணர்வை விட முடியவில்ல. அது ஒளிந்திருக்கிறது. என்னை கவனிக்கிறது. அதன் கவனிப்பில் நான் இருக்கிறேன் என்ற உணர்வு. என் பின்னால் வந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு. அது அங்கே இருக்கிறது. அதுமாதிரி உணர்ந்தேன். ஆமாம். அது எப்படி இருக்கமுடியும். அங்கே ஒன்றுமில்லை. பாதுகாப்பான இடத்தில்தான் நான் இருக்கிறேன்.
குரல்: அந்த அறைக்குள் டான் இந்த பரிசோதனை நடத்தும்போதெல்லாம் வரும் பொதுவான, ஆனால்,வினோதமான விளைவை அனுபவித்தார். அவர் கூட இன்னொருவர் இருப்பது போன்ற உணர்வு. டாக்டர் பெர்ஷிங்கர் இதனைஇருப்பறியும் உணர்வுஎன்று கூறுகிறார்
பெர்ஷிங்கர்: இந்த பரிசோதனையின்போது அனைவரும் அடையும் அடிப்படையான அனுபவம், இந்தஇருப்பறியும் உணர்வு”. இன்னொரு வியக்தி அங்கே இருக்கிறது.உங்களை விட பெரியது, காலத்திலும் வெளியிலும் பெரிய வியக்தி இருக்கிறது என்ற உணர்வை வலது மூளையில் இருக்கும் டெம்போரல் லோபை தூண்டினால், மிக எளிதில் அடைந்துவிடலாம் என்று எங்களது பரிசோதனை முடிவுகள் சொல்லுகின்றன.
குரல்: இன்னொரு வியக்தியை உணர்வது இந்த காந்த புலத்தால் மட்டுமே வருகிறதா என்பதை அறிய, காந்தபுலத்தை உருவாக்கியும் உருவாக்காமலும் தன் சோதனைகளை நடத்தினார். முக்கியமாக, இந்த பரிசோதனையின் உண்மை நோக்கம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவில்லை. இது சும்மா மன ஓய்வுக்காக என்று மட்டுமே சொன்னார்கள். பரிசோதனைமுடிவுகள் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஹெல் மட்டில் காந்தப்புலம் இருந்தபோது, 80 சதவீதத்தினர் அருகே யாரோ இருப்பதாக உணர்ந்தனர். டாக்டர் பெர்ஷிங்கர் இந்த ஆய்வை இன்னும் மேலே எடுத்துச் சென்றார். இயற்கையாகவே காணப்படும் காந்தப்புலமும் இதே போல உணர்வை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறார். கடவுளை பற்றிய உணர்வை மட்டுமல்ல, இன்னும் சில அமானுஷ்ய அனுபவங்களையும் விளக்கலாம் என்று கருதுகிறார்.. உதாரணமாக ஆவிகள்


காந்தப்புலத்திற்கும் அமானுஸ்ய உணர்வுகளுக்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன.காந்தப்புலம் மின்னைக்கடத்தும் கடத்தியை மட்டுமல்ல எமது மூளையையும் பாதிக்கின்றது.இந்தப்பாதிப்பு காந்தப்புலத்தின் அளவிலும் மூளையின் உணர்திறனிலும் தங்கியிருக்கின்றது. அதாவது ஒவ்வொருவரது மூளையின் காந்தப்புலத்தாலான பாதிப்பின் அளவு வித்தியாசப்படும்.
ஏற்றுக்கொள்வதற்கு சற்றுக்கடினமாக இருக்கலாம்.

சரி ஒரு கேள்வி
 நீண்டதூரம் பிரயாணம் செய்யும்பறவைகள் எப்படி தமது இலக்குகளை அடையாளம் காண்கின்றன எந்தவொரு மப்பும்,திசையறிகருவிகளும் இல்லாமல்?
பொதுமையாக அவற்றின் உள்ளுணர்வால் அறிகின்றன என்பது ஒரு பொருத்தமான பதிலாக அமையாது.சூரியனையும் புவிக்காந்தப்புலத்தினதும் உதவியுடனேயே இவை திசையை அறிந்துகொள்கின்றன.சோ அவைகளிடம் ஒரு பயோலொஜிக்கல் திசைகாட்டி இருக்கின்றது.புவிக்காந்தப்புலத்தால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதற்கான சிறந்த உதாரணமாக இதைக்கொள்ளமுடியும்


இன்னொரு கேள்வி
எப்.எம் ரேடியோ வேர்க்செய்யும்போது நீங்கள் அருகில்போனால் ஆரம்பத்தில் இரையும் பின்னர் முன்னர் இருந்ததைவிட அதிக தெளிவாக பாடல்கள் கேட்கும் நிச்சயம் இந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள் இது எதனால் ஏற்படுகின்றது?
எமது உடல் கடத்தியாக செயற்படுகின்றது.அத்துடன் ரேடியோ அலைகளை எமது உடல் உறுஞ்சுகின்றது.எஃப்.எம் ரேடியோவின் அன்ரனா உருவாக்கும் காந்தப்புலம் ரேடியோவை சுற்றி சாதாரணமாக ஒன்ரரை தொடக்கம் 3 மீட்டர் வரையில் இருக்கலாம் இந்தக்காந்தப்புலத்தினுள் கடத்திகளாகிய நாம் அசையும்போது அக்காந்தப்புலத்தை நாம் பாதிக்கின்றோம்.நாம் மட்டுமல்ல எங்கள் வீட்டு நாய் குறுக்கால் சென்றாலும் இதே நிலைதான் ஏற்படும்.
காந்தப்புலத்தால் நாம் பாதிக்கப்படுகின்றோம் என்பதற்கான ஆதாரங்கள் இவை

அமானுஸ்யங்களுக்கும் காந்தப்புலங்களுக்கும் இடையிலான தொடர்பைவிளக்கும் இன்னொருவிடயமும் உள்ளது.வட தென் துருவங்களில் தோன்றும் aurora என்ற ஒளியைப்பற்றி அறிந்திருப்பீர்கள்.இது சூரியமின்காந்தக்கதிர்வீசல்கள் பூமியின் காந்தப்புலத்தை தாக்கி அங்கு முனைவழிதல் நடைபெறும்போது ஏற்படுகின்றது.இது நடைபெறும்வேளைகளில் ஆவிகளைப்பார்த்தேன் என்று கூறும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்திருக்கின்றார்கள்.


persingerக்கு ஒரு கேஸ்கிடைக்கின்றது ஒருவர் தனது மகளிற்கு பிரச்சனை என்று persinger ஐ அழைக்கின்றார்,அவரின் மகள் சரியாகத்தூங்குவதில்லை மகளின் சில செயற்பாடுகளால் மகளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என அச்சமுறுகிறார் அவர்.

மகள் தன்னை சுற்றி ஆவி நடமாட்டம் இருப்பதாக நம்புகின்றார்,இதனால் அந்த சிறுமி படுக்கைக்கு செல்வதற்கே அஞ்சினார்.persinger இதற்கு மாறுபடும் காந்தப்புலம்தான் காரணம் என கருதுகின்றார் எனவே அதைக்கண்டுபிடிக்கமுயல்கின்றார்.வீட்டுக்குமேலோ அல்லது நிலத்திற்கு கீழோ செல்லும் வயர்களில் உள்ள மின்னோட்டங்களால் இவை ஏற்படக்கூடும்.
இறுதியில் அவளது படுக்கைக்கு அருக்காக இருந்த கடிகாரத்தில் இருந்து மின் காந்தப்புலம் வருவதைக்கண்டுபிடித்து அதை நீக்குகின்றார்கள் அதன் பின்னர் ஆவி நடமாட்டம் தொடர்பான உணர்வுகள் நிரந்தரமாக நின்றுவிடுகின்றன.


பெர்ஷிங்கர் தனது கடவுள் உணர்வை அடையும்/இருத்தலை அடையும் பரிசோதனையை மேலும் பரிசோதிக்க தீர்மானிக்கின்றார் ஏனென்றால் அவரது  நெருங்கிய நண்பர்களே அவரிடம் கேள்விகேட்கின்றார்கள்.ஏன் இதை செய்கின்றார்?இதனால் பயனில்லை,பணமும் கிடைக்காது என்கிறார்கள்.மத அனுபவங்கள் அமானுஷ்யங்கள் எல்லாம் சயன்ஸிற்கு அப்பாற்பட்டது எனவே ஆராயக்கூடாது என்கின்றார்கள்...என்னுடைய கேள்வி என்னவெனில் ஏன் ஆராயக்கூடாது?
இதனால் தனது இருப்பை அறியும் பரிசோதனையை உலகப்புகழ்பெற்ற கடும் நாத்திகரான richard dawkins FRS, FRSL is an ethologist, evolutionary biologist, and author,University of Oxford's Professor for Public Understanding of Science)இல் செய்துபார்ப்பது என்று முடிவெடுக்கின்றார் பெர்ஷிங்கர்.



தான் ஆத்திகனாக மாறினால் என்னைவிட்டுப்போய்விடுவேன் என்று என் மனைவிகூறியிருக்கிறாள்.மத நம்பிக்கையாளர்கள் அடையும் அந்த அனுபூதி நிலையை அடைய நான் ஆவலாக இருக்கின்றேன் என்கிறார் பேராசிரியர் ரிச்சர்ட் டாகின்.

கோட் ஹெல்மட்டின் உதவியுடன் பேராசிரியர் டாகின்ஸிற்கு பேஷிங்கர் வலது இடது புறமாக மாறி மாறி காந்தப்புலங்களை கொடுத்துப்பார்த்தார்.ஆரம்பத்தில் டாகின்ஸிற்கு தலை சுற்றியது 40 நிமிடங்களின் பின்னர் பரிசோதனை நிறுத்தப்பட்டது.துரதிஸ்ரவசமாக அவர் இருப்பை அறியும் உணர்வை,கடவுள் உணர்வை பெறவில்லை.சாதாரண இருட்டில் என்னென்ன அனுபவங்கள் கிடைக்குமோ அவற்றைமட்டுமே உணர்ந்தேன் நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன். மதவாதிகள் அனுபவிக்கும் அனுபூதி நிலையை, பிரபஞ்சத்துடன் ஐக்கியமான நிலையை, நான் அனுபவித்திருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். நிச்சயமாக அதனை அனுபவிக்க விரும்புகிறேன் என்கிறார் டாகின்ஸ்.

டாகின்ஸ் பாதிக்கப்படாமல் இருந்தமைக்கு காரணம் இருக்கின்றது என்கிறார் பேர்ஷிங்கர்.ரெம்போரல் லோப்பால் பாதிக்கப்படுபவர்களின் பாதிக்கப்படும் அளவை அறிவதற்கு உணர்ச்சி மானியைத்தயாரித்தோம்.பாதிக்கப்படும் அளவு ஆளுக்கு ஆள் வேறுபடும்.சராசரியாக ஒரு நபர் ரெம்போரல் லோப்பால் பாதிக்கப்படும் அளவை விட டாகின்ஸ் மிகக்குறைவான அளவிலே பாதிக்கப்படும் தகமையை தன் வசம் கொண்டிருக்கின்றார் இதுவே இவர் அனுபவத்தைப்பெறாமைக்கான காரணம் என்கிறார் பேர்ஷிங்கர்.அதோடு டாகின்ஸை விட ஏனைய 1000 நபர்களுக்கு இதே பரிசோதனையை மேற்கொண்டு ரெம்போரல் லோப்களுக்கும் ஆன்மீக அனுப்வங்களிற்குமான தொடர்பை உறுதிப்படுத்தியிருக்கின்றார் பேர்ஷிங்கர்

மற்ற எவரையும் விட, மனிதமூளையில் இருக்கும் டெம் போரல் லோப்களுக்கும் ஆன்மீக அனுபவத்துக்கும் இடையேயான துல்லியமான தொடர்பை உறுதிப்படுத்தியிருக்கிறார். நியூரோ தியாலஜியின் மிக முன்னேறிய ஆய்வுகளாக இவரது ஆராய்ச்சிகள் உள்ளன. மோட்டார்சைக்கிள் ஹெல்மட்டுக்கும் உண்மையான ஆன்மீக உணர்வுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் உள்ளது என்று மத ஆதரவாளர்கள் கூறுகின்றனர்

பிஷப் சைக்ஸ்: என்னுடைய மனத்தை ஒரு சில அனுபவங்கள் மூலம் மாற்றினாலோ, வேறொருவர் நின்று எனக்காக செய்து தந்தாலோ, அந்த அனுபவம் சந்தோஷமானதாக இருந்தாலும், அதற்கு நல்ல விளைவுகள் இருந்தாலும், அதற்கும் மதத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றே கருதுவேன். என்னுடைய மத நம்பிக்கை காரணமாக

குரல்: மூளையின் ஒரு பகுதியை தூண்டி அடைவது போன்ற அனுபவத்தை விட மிகவும் சிக்கலானது மத ஆன்மீக அனுபவம் என்பது உண்மையே. டாக்டர் பெர்ஷிங்கரின் ஆய்வு ஒரு ஆரம்பமே. இப்போது பல விஞ்ஞானிகள் மூளைக்கும் மத நம்பிக்கைக்கும் இடையே மிகவும்நெருங்கிய தொடர்பு உண்டு என்று நம்புகிறார்கள். ஒரு ஆய்வு குழு இந்த உறவை ஆராய ஒரு வித்தியாசமான வழியை முயற்சித்தார்கள். உண்மையான ஆன்மீக உணர்வு அடையும்போது மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தார்கள். மைக்கேல் பெய்ம் அவர்களது மூளை அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அளித்தது.

பைம்: மனம் லகுவாக லகுவாக, நமக்கு இருக்கும் தனித்தன்மைக்கும் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கும் இடையேயான எல்லைக்கோடு மறைகிறது. எல்லாமே கரைந்துவிடுகிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுடனுமான ஒரு ஐக்கியம் தோன்றுகிறது. அப்போது தனித்தன்மை மறைகிறது.

மைக்கல் பாம்  பொள்த்த மத நம்பிக்கையாளர்.இவரை தியானம் செய்ய அனுபதித்து தியானத்தின் உச்சத்தை பாம் அடையும்போது அவரிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கயிற்றை இழுக்க சொல்கின்றார்கள்.அப்போது பாமின் மூளையில் நடைபெறும் இரசாயன மாற்றங்களை ஸ்கான் செய்கின்றார்கள்.
அவ்வாறு செய்யப்பட்ட பரிசோதனை வழக்கம்போலவே டெம்போரல் லோப்களுக்கு இவற்றுடன் தொடர்பு இருக்கின்றது என்பதைக்காட்டின ஆனால் வேறு ஒன்றையும் தெரிவித்தன பாம் தியானம் செய்யும்போது ஏனைய பகுதிகளைவிட parietal lobe பகுதிக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்துகொண்டு சென்றது

நியூபெர்க்: மூளையின் இந்த பகுதி நமது உடலிலிருந்து வரும் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு அந்த உணர்ச்சிகள் மூலம் நமக்கான சுய அடையாளத்தை உருவாக்குகிறது. மனிதர்கள் தியானம் செய்யும்போது சுய அடையாள இழப்பதை குறிப்பிட்டு சொல்கிறார்கள். அதைத்தான் இந்த தியானம் செய்பவர்களின் மூளையை ஆராயும்போது நமக்கு தெரிகிறது. இந்த பெரிய்ட்ல் லோபில் ரத்த ஓட்டம் செயல்பாடு குறைவதை காண்கிறோம்.

குரல்: சுய அடையாளம் இழக்கும் ஒரு வினோத உணர்வே எல்லா உலகத்து மதங்களிலும் மைய கருத்தாக ஆன்மீக உணர்வாக சொல்லப்படுகிறது. பௌத்தர்கள் பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகும் உணர்வை தேடுகிறார்கள். இந்துக்கள் ஆன்மாவும் கடவுளும் ஐக்கியமாவதை தேடுகிறார்கள். யுனியோ மிஸ்டிகா Unio Mystica என்பதை கத்தோலிக்கர்கள் தேடுகிறார்கள். டாக்டர் நியூபர்க் இவ்வாறு பலமதங்கள் கூறுவது அனைத்தும் ஒரே விஷயத்தைத்தானா என்று சிந்திக்கிறார். இதனை பரிசோதிக்க ஃப்ரான்ஸிஸ்கன் கன்யாஸ்திரிகள் பிரார்த்தனை செய்யும்போது அவர்களது மூளைக்கும் பௌத்தர்களது மூளைக்கும் ஒற்றுமை இருக்குமா என்று பரிசோதித்தார்.
நியூபர்க்: சுவாரஸ்யமாக, பிரான்ஸிஸ்கன் கன்யாஸ்திரிகளது மூளையை பார்க்கும்போதும், பெரிய்ட்ல் லோப் பகுதி செயலற்று இருந்ததை பார்த்தோம். திபேத்திய பௌத்தர்களது மூளை போலவெ.
குரல்: பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும் இரு வெவ்வேறான மத பாரம்பரியங்களிலிருந்து வந்திருந்தாலும், அவர்களது மூளை எவ்வாறு தியானத்திலோ பிரார்த்தனையிலோ செயல்படுகிறது என்பது, மூளை வேதியியலை பொறுத்தமட்டில், ஒரே மாதிரிதான். டாக்டர் நியூபெர்கின் ஆராய்ச்சி, முதன்முறையாக நமது மூளையில் பல்வேறு விதமான பகுதிகள் எவ்வாறு மத நம்பிக்கையில் செயலாற்றுகின்றன என்பதை அறிவியற்பூர்வமாக காட்டியது.

இது தொடர்பான ஆய்வுகள் மதங்களை உருவாக்கியோரது அனுபவங்களாக அவர்கள் புனித நூல்களில் கூறியவிடயங்களுக்கும் டெம்போரல்லோப் எபிலெப்ஸியால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களுக்கிமிடையிலான ஒற்றுமைகள் எதிர்வரும் பதிவில்

தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்