இடுகைகள்

"பூமனச்சுணை" மனதைத்தொட்ட சிறுகதை...

படம்
நீண்டகாலத்திற்குப்பிறகு மீண்டும் வலையுலகத்திற்கு..... எப்படி இருக்கின்றீர்கள்? சகோக்களே?... சிறியகால இடைவெளியின் பின்னர் மீண்டும் எழுதுவதற்கு நேரம்கிடைத்திருக்கின்றது.... சிறிய கால இடைவெளியில் மீண்டும் எழுதுவதற்கே நீங்கள் ஏன் இப்பொழுது எந்தப்போஸ்ட்டையும் போடுவதில்லை என்ற கேள்விகள் உள்ளடங்கலாக ஏதாவது ஒரு ஊக்கி ஏதாவது ஒரு விதத்தில் தேவையாக இருக்கின்றது... நம்மைப்போன்ற பதிவர்கள் எதிர்ப்பார்ப்பவை இவைதானே... நிற்க என்னை மீண்டும் இழுத்துவந்தது ஒரு சிறுகதை,முடிவெட்ட சென்ற இடத்தில் பழைய ஆனந்தவிகடன் ஒன்று கைகளில் கிடைத்தது முடிவெட்டுவதற்கு எமது அழைப்பு வரும்வரை ஒரக்கதிரையில் அமர்ந்திருக்கவேண்டும்...அருகாமையில் செய்தித்தாள்கள் அடுக்கப்பட்டிருக்கும்...அன்றைய செய்தித்தாள் கிடைக்கவில்லையாயின் ஏன் சும்மா இருப்பானேன் என்றுவிட்டு பழையபேப்பராக இருந்தாலும் ஒன்றை கையில் தூக்கவேண்டியதுதான்.வழக்கமாக வாசிப்புப்பழக்கம் இல்லாதவர்களைக்கூட முடிவெட்டுமிடம் வாசிக்கவைத்துவிடக்கூடியது.அனைவரும் கைகளில் செய்தித்தாள்களையோ அல்லது எதையோ வைத்து வாசித்துக்கொண்டிருக்க நாம் மட்டும் பேசாமல் இருந்தால் நன்றாகவா இருக்குமென

அசாத்திய சமநிலைகள்

படம்
வழக்கமாக ஒரு பொருளை சம நிலையில் வைத்தல் இலகுவான ஒன்றுதான்.ஆனால் சில பொருட்களை சில இடங்களில் சம நிலையில் வைத்தல் என்பது இயலாத காரியம் ஒரு உருளையை ஒரு கூம்பிற்குமேல் சமனிலையில் வைக்கமுடியாது.ஆனால் கீழே உள்ள படங்களில் அவ்வாறான சில அசாத்திய சம நிலைகளைக்காணலாம். சாதாரணமாக ஒரு பொருள் சம நிலையில் இருக்கவேண்டும் என்றால் படத்தில் காட்டியவாறு தரையினால் பொருளின் மீது கொடுக்கப்படும் மேல் உதைப்பும் அப்பொருளின் மீது பூமியினால் கொடுக்கப்படும் ஈர்ப்புவிசையும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.

கலிலியோ vs ரோமன் கத்தோலிக்க திருச்சபை...

படம்
கலிலியோ தொடர்பில் 2 பதிவுகள் ஏலவே பார்த்தாயிற்று இது இறுதிப்பதிவு.கலிலியோ என்ற விஞ்ஞானி மரபு ரீதியாக நம்பிவந்த விடயங்களை எதிர்த்தான் ஆனால் அந்த மரபுரீதியான விடயங்கள் கிறீஸ்தவ சமயத்திற்குள்ளும் ஆழ ஊடுருவி இருந்ததால் கலிலியோ மீது மதத்தாக்குதல் நடத்தப்பட்டது.ஆயுள்தண்டனை வீட்டுச்சிறை எனப்பலவற்றை கலிலியோ அனுபவிக்க நேர்ந்தது கலிலியோவின் புத்தகங்களை விற்றல் வாங்குதல் மரணதண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்பட்டது.இறுதி நாளில் தொற்று நோயால் பாதிக்கபப்ட்டபோது கூட வைத்தியர் அனுமதிக்கப்படவில்லை மதம் கலிலியோவை முற்றாக அழிப்பதற்கு தன்னால் ஆனமுழுமுயற்சியையும் மேற்கொண்டு தோற்றது ஆனால் கலிலியோவும் மனமுடைந்துதான் போனார் ஒரு மனிதன் எத்தனை எதிர்ப்புக்களைத்தான் தாங்கமுடியும்? ஒருவேளை கலிலியோ கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து தான் உண்டு தன் வேலையுண்டு என்று குடும்பத்தை கவனிக்கசென்றிருந்தால் நாம்  சில நூறுவருடங்கள் பின்னே இருன்திருப்போம் நல்லவேளையாக மதம் ஜெயிக்கவில்லை... கலிலியோ vs மதவாதிகள் மரபு ரீதியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரே சக்திதான் ஒரு பொருள் மீது தாக்கும் என்பதை கலிலியோ உடைத்தெறிந்தார்.அதற்கு