கலிலியோ vs ரோமன் கத்தோலிக்க திருச்சபை...

கலிலியோ தொடர்பில் 2 பதிவுகள் ஏலவே பார்த்தாயிற்று இது இறுதிப்பதிவு.கலிலியோ என்ற விஞ்ஞானி மரபு ரீதியாக நம்பிவந்த விடயங்களை எதிர்த்தான் ஆனால் அந்த மரபுரீதியான விடயங்கள் கிறீஸ்தவ சமயத்திற்குள்ளும் ஆழ ஊடுருவி இருந்ததால் கலிலியோ மீது மதத்தாக்குதல் நடத்தப்பட்டது.ஆயுள்தண்டனை வீட்டுச்சிறை எனப்பலவற்றை கலிலியோ அனுபவிக்க நேர்ந்தது கலிலியோவின் புத்தகங்களை விற்றல் வாங்குதல் மரணதண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்பட்டது.இறுதி நாளில் தொற்று நோயால் பாதிக்கபப்ட்டபோது கூட வைத்தியர் அனுமதிக்கப்படவில்லை மதம் கலிலியோவை முற்றாக அழிப்பதற்கு தன்னால் ஆனமுழுமுயற்சியையும் மேற்கொண்டு தோற்றது ஆனால் கலிலியோவும் மனமுடைந்துதான் போனார் ஒரு மனிதன் எத்தனை எதிர்ப்புக்களைத்தான் தாங்கமுடியும்? ஒருவேளை கலிலியோ கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து தான் உண்டு தன் வேலையுண்டு என்று குடும்பத்தை கவனிக்கசென்றிருந்தால் நாம்  சில நூறுவருடங்கள் பின்னே இருன்திருப்போம் நல்லவேளையாக மதம் ஜெயிக்கவில்லை...


கலிலியோ vs மதவாதிகள்



மரபு ரீதியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரே சக்திதான் ஒரு பொருள் மீது தாக்கும் என்பதை கலிலியோ உடைத்தெறிந்தார்.அதற்கு பீரங்கியில் இருக்கும் குண்டுகளின் இயக்கத்தைப்பயன்படுத்தினார்.பீரங்கிக்குண்டுகள் பீரங்கியில் இருந்து புறப்படும்போது 2 விசைகள் தாக்கும் 1 புவி ஈர்ப்புவிசை மற்றையது  பீரங்கியினுள்ளே வெடிப்பு நிகழ்வதனால் ஏற்படும் விசை.(முன்பே கூறியதுபோல் கலிலியோ நியூற்றனின் காலத்திற்கு முற்பட்டவர் ஆயினும் ஈர்ப்புவிசை என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது.உண்மை என்னவெனில் நியூற்றன் பிறப்பதற்கு முன்னரே புவி ஈர்ர்பு விஞ்ஞானிகளுன் கவனத்தை ஈர்த்துள்ளது கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் புவி ஈர்ப்பின் காரணமாக பொருட்களின் மீது தாக்கப்படும் விசை தொடர்பான கணித்தல்கள்,விதிகள்,வரவிலக்கணங்கள் எதையுமே யாரும் வரையறுக்கவில்லை இவைகளை செய்தது  நியூற்றன். ஆனால் புவியீர்ப்பைக்கண்டறிந்தவர் யார் என்ற மேலெழுந்தவாரியான கேள்விக்கு உலகம் நியூட்டன் என்றே பதிலழித்துவருகின்றது.)

கலிலியோ 2 விசைகளைப்பற்றிக்கூறியிருந்தார் 1-புவி ஈர்ப்பு விசை 2)பீரங்கியினுள்ளே வெடிப்பதனால் ஏற்படுத்தப்படும் விசை.புவி ஈர்ப்பைக்கருதாது விட்டால் பீரங்கிக்குண்டு நேரே சென்றுவிடும்.ஆனால் குண்டு அவ்வாறு செல்வதில்லை தரையை நோக்கி இழுக்கப்படுகின்றது என்பதைக்கண்டுகொண்டார்.கிடையுடன் 45 டிகிரி கோணத்தில் பீரங்கியால் சுட்டால் எப்பீரங்கியினாலும் சுடக்கூடிய அதிகபட்ச தூரத்திற்கு குண்டு செல்லும் என்பதை பரிசோதனை  ரீதியாக செய்து காட்டினார்.(உண்மையில் இதை எறியம் என்ற சப்ரரின் கீழ் நியூட்டனின் விதிகளுக்கமைய கல்குலேட் செய்தே கண்டறியமுடியும் ஆனால் கலிலியோ செய்தபோது ஈர்ப்பு தொடர்பான கணிதவடிவங்கள் இல்லை)
அரிஸ்ரோட்டல்,மக்கள் நம்பிய  சுடப்பட்ட பீரங்கிக்குண்டின் பாதை
நியூற்றனுக்கு முன்னர் கலிலியோ வரைந்தது

பீரங்கிக்குண்டுகள் பீரங்கியில் இருந்து புறப்பட்டு நேர்கோடாகசென்று இலக்கின் மீது விழும் என்று அரிஸ்ரோட்டல் கருதினார்.இதில் உள்ள பிழைகள்,இதைப்பற்றிய படத்துடனானவிளக்கத்தை கலிலியோ 1638இல் 2 புதிய விஞ்ஞானக்கோட்பாடுகள் பற்றிய சொற்பொழிவுகள் என்னும் நூலில் வெளியிட்டார். இவ்வாறு அரிஸ்டோட்டலின் கருத்துக்கு தொடர்ந்து அடி விழுந்துகொண்டே இருந்தது.

இன் நிலையில் 1597 இல் கெப்லர் என்பவர் கோர்ப்பனிக்கல்ஸின் சூரியமையக்கொள்கையை அடிப்படையாகவைத்து mysterium cosmograpphicum என்ற நூலை வெளியிட்டார்.கெப்லர் கலிலியோபற்றி அறிந்திருந்தமையால் இதன்பிரதியை கலிலியோவிற்கு அனுப்பிவைத்தார் கலிலியோ இவரை புகழ்ந்துபாராட்டி கடிதம் ஒன்றை பதிலாக எழுதி அனுப்பினார்.உடனே கெப்லர் தனது சூரியமையக்கொள்கையை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவுக்குமாறு கலிலியோவை வேண்டிக்கொள்ள கலிலியோ நைசாக நழுவிவிட்டார்.காரணம் கெப்லர் ஜேர்மனியில் இருந்தார் ஆனால் கலிலியோ கொடுமையான மதச்சட்டங்கள் பலவற்றை நடைமுறையில் கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருந்தார். அப்போது அவர் மதத்திற்கெதிரான தீவிரவாதியாக மாறவிரும்பவில்லை.

கலிலியோ,ஒரு சில பிறவிஞ்ஞானிகள் மறமுகமாகவும் வெளிப்படையாகவும் அரிஸ்ரோட்டலின் கதைகளை மறுத்துவந்தார்கள்.ஆனால் அரிஸ்ரோட்டலின் கருத்துமீது இயற்கையாகவே ஒரு அடிவிழுந்தது.1604 இல் ஒரு வால்வெள்ளி வானில் தோன்றி மறைந்தது.பிரபஞ்சம் மாறுதலற்ற நிலையானது என அரிஸ்ரோட்டல் கூறியிருந்தார் அப்படியானால் வானில் தோன்றியது என்ன?சோ இவற்றினால் அரிஸ்ரோட்டலின் கருத்துக்கள் பல கண்டனங்களுக்குள்ளானது.

1609 இல் தனது நண்பர்கள் மூலமாகஹான்ஸ் லிப்பர் கீ என்ற மூக்குக்கண்ணாடி தயாளிப்பாளரின் அறிமுகம் கலிலியோவிற்குக்கிடைத்தது.அவர் ஒரு குழாயின் இரு புறமும் வில்லைகள் இடப்பட்ட பொருளை கலிலியோவிற்கு அறிமுகப்படுத்தி தொலை நோக்கி என்றபெயரையும் அறிமுகப்படுத்தினார்.அக்காலத்தில் தொலை நோக்கி ஒரு வித்தியாசமான ஆச்சரியமான பொருளாகப்பார்க்கப்பட்டது.இதானால் தொலை நோக்கியின் தரத்தைப்பற்றிய கவலை இல்லாமல் அதை வாங்கினால்போதும் என்று மக்கள் மோதிக்கொண்டுவாங்கினார்கள்.

இக்காலத்தில் கலிலியோ ஒரு தொலை நோக்கியை உருவாக்கினார்.அக்காலத்தில் தொலை நோக்கியின் உருப்பெருக்கம் 3 மடங்காக இருந்தது கலிலியோ இதை 9 மடங்காக்கினார்.இதன் மூலம் 4 கிரகங்களையும் கண்டுபிடித்தார்.1611இல் சூரியப்புள்ளிகளை அவதானித்தார் தாம் அவதானித்தவற்றை குறிப்புப்புத்தகத்தில் வரைந்துவைத்தார்.கலிலியோவின் தொலை நோக்கி கலிலியோவை மீண்டும் அரிஸ்ரோட்டலுடன் மோதவைத்தது.
அரிஸ்ரோட்டில் சந்திரன் களங்கமற்றகோள் எனக்கூறியிருந்தார்.ஆனால் கலிலியோ தொலைனோக்கியால் சந்திரனை அவதானித்தபோது சந்திரனில் எரிமலைவாய்கள் போன்ற பள்ளங்கள்.மலைகள்,மேடுகள் எல்லாம் தென்பட்டன.சந்திரனில் விழும் நிழலைவைத்துமலைகளின் உயரங்களைகணித்தபோது அவை பூமியில் உள்ள மலைகளின் உயரங்களைவிட உயரமாக இருந்தன.

பின்னர் தொடர்ந்து கோள்களைப்பற்றி ஆராய்ச்சி செய்தார்.வியாழனின் மேற்பரப்பில் கறுப்புப்பிள்ளிகள் விழுவதை அவதானித்தார்.பின்னர் தொடர்ந்து அவதானித்தபோதுதான் தெரிந்தது அக்கறுப்புப்புள்ளிகள் ஒரு சீரான கதியில் நகர்ந்தன.பூமிக்கு துணைக்கோளாக சந்திரன் இருப்பதுபோல் வியாழனுக்கும் பல துணைக்கோள்கள் இருக்கின்றன எனக்கூறினார்.பின்னர் வெள்ளிக்கிரகத்தை அவதானித்தார் வெள்ளிக்கிரகமும் சந்திரனைப்போல் வளருதல் தேய்தல் நிலைகளைக்கொண்டிருந்தது.அரிஸ்ரோட்டலின் ஆதரவாளர்கள் இதுவே பூமியை வெள்ளிக்கிரகம் சுற்றுவதற்கு  போதுமான ஆதாரம் எனக்கூறினார்கள்.ஆனால் கலிலியோவிடவில்லை தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து வெள்ளி சூரியனை சுற்றுங்காலம் அரிஸ்ரோட்டில்கூறியதை விட அதிகம்.அதோடு சூரியனிற்கும் பூமிக்கும் இடையில் வெள்ளிவரும்போது வெள்ளி மறைக்கப்படுகின்றது என நிரூபித்தார்(மீன்ஸ் இரண்டுக்குமிடையில்(வெள்ளி,சூரியன்) பூமியிருப்பதால் பூமியின் நிழல் வெள்ளிமீது விழுகின்றது).

1612 இல் யேசுசபையைச்சேர்ந்த  christoph scheiner என்பவர் சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் தொடர்பாக கருத்துக்களைவெளியிட்டார்.அக்கரும்புள்ளிகள் சூரியனைச்சுற்றிவரும் கோள்களினால்தான் ஏற்படுகின்றன என பிரகடனம் செய்தார்.இவர் ஒரு அரிஸ்ரோட்டல் ஆதரவாளர்.சூரியன் களங்கமற்றது என்ற அரிஸ்ரோட்டலின் கருத்தை மெய்ப்பிக்கவே இவ்வாறான முயற்சிகளைச்செய்தார்.உடனடியாக கலிலியோ தனது ஆய்வுகள் ஆராய்ச்சிக்கட்டுரைகள்,அவதானிப்புக்களை வெளியிட்டு இதற்கு மறுப்புத்தெரிவித்தார்.இதனால் அரிஸ்ரோட்டல் ஆதரவாளரின் கருத்துக்கள் தூள் தூளானது.

உடனே ஸ்கெய்னர் ஒரு ஆயுதத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டார்"மதம்" கலிலியோ மதத்திற்கு எதிரானவர் என முழங்கினார் ஸ்கெய்னர்,மதத்திற்கு எதிராக திருச்சபைக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார் என்று முழங்கினார் ஸ்கெய்னர்(அரிஸ்ரோட்டலின் கருத்துக்கள் பலவற்றை பைபிள் கொண்டிருந்தது.அப்போது அரிஸ்ரோட்டலின் கருத்துக்கள் விஞ்ஞான முடிவுகளாகக்கொள்ளப்பட்டதால் இவை பைபிளுடன் இணைக்கப்பட்டன ஆனால் அரிஸ்ரோட்டல் கூறியவை பலவற்றை கலிலியோ பொய்யாக்கிவிட்டார் எனவே அது பைபிளை தவறு எனக்கூறுவதாகின்றது என ஸ்கெய்னர் குழப்பிவிட்டார்)இதைத்தான் இப்போதும் மதவாதிகள் சில பலவலைபப்திவர்களும் செய்கின்றார்கள்.பைபிளில் குர்ரானில் விஞ்ஞானக்கருத்துக்கள் இருக்கின்றது என கண்டவற்றைக்கூற அவற்றை மறுத்தால் உடனே மதத்திற்கு விரோதமானவன் ஆக்கிவிடுவது.சில மூடப்பழக்கவழக்கங்கள் பாம்பு கன்னியாக மாறியது சாமி பால் குடிப்பது தீமிதிப்பது,பலி கொடுப்பது போன்றவற்றை எதிர்த்தால் உடனே மத நம்பிக்கையாளர்களை புண்படுத்துகின்றீர்கள் என்று அழுது கூப்பாடுபோடுவது.முக்கியமாக பேஸ்புக்கில் இதை செயார் செய்தால் 3 நாட்களில் நல்லது நடக்கும் என்று சக்கர்பேர்க்கிற்கே ராக் பண்ணிவிடுவது.

அரிஸ்ரோட்டலின் கூற்றுக்கள் பைபிளிலும் இருந்தமையினால் கலிலியோ மறுத்த அரிஸ்ரோட்டலின் கருத்துக்கள் பைபிளின் கூற்றுக்களை மறுத்ததாக மக்களால் விளங்கிக்கொள்ளச்செய்யப்பட்டது. இன்னிலையில் தோமஸ் காசினி என்ற சமய குரு மேடைகளில் அறிவியலுக்கு எதிரான சமயப்பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.(இதுதான் சாரே உச்சக்கட்ட காமெடி),கலிலியோ ஒரு உண்மை சமயத்தின் எதிரி என முழங்கினார்.


ஆனால் கலிலியோ மத்தையும் அறிவியலையும் குழப்பிக்கொள்ளவில்லை.அவர் ஒரு முழுமையான கத்தோலிக்கராகத்தான் நடந்துகொண்டார்.கலிலியோவின் சூரியமையக்கொள்கைகள் தொடர்பான விடயங்கள் ரோமபுரி அதிகாரிகளின் கவனத்திற்குச்சென்றது.கொப்பனிக்கல்ஸுக்கு அளித்துவந்த ஆதரவை மறுப்பதற்காக கலிலியோ ரோமிற்கு அழைக்கப்பட்டார்.போப்பின் முன்னால் கொப்பனிக்கல்ஸிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டார்.ஒரு விஞ்ஞானியாகவும் அதே நேரத்தில் நப்பிக்கையுள்ள கத்தோலிக்கராகவும் ஒருவர் இருக்கமுடியாது என திருச்சபையினர் வாதிட்டனர்(ஏதோ அத ஒத்துண்டா சரி). 

விதிவிடவில்லை மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியது.1618 இல் பிரபஞ்சம் பற்றிய மற்றுமொரு நிகழ்ச்சி சர்ச்சையைக்கிளப்பியது.வானத்தில் 3 வால் நட்சத்திரங்கள் தோன்றின.
யேசு சபையைச்சேர்ந்தவிஞ்ஞானி கிராஸ்ஸி வால் நட்சத்திரங்களின் பாதைகள் நேர்கோட்டில் அமைந்தவை ஆகவே இது பூமி பிரபஞ்சத்தின் மையத்தில் இருப்பதற்கான கொள்கையை வலியுறுத்துகின்றது என்று கருத்துவெளியிட்டார்.இவர் கருத்து வெளியிடுவதற்கு முன்பே  ரோமின் யேசுசபை கலிலியோவிற்கு எச்சரிக்கைவிடுத்திருந்தது மதத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடக்கூடாது பிரச்சாரங்களை செய்யக்கூடாது என்று.ஆனால் கலிலியோ கிராஸையும் யேசு சபையையும் கண்டித்து The Assayer  என்ற புத்தகத்தை வெளியிட்டார் அதில் வால் நட்சத்திரங்கள் செல்லும் பாதை விபரிக்கப்பட்டிருந்தது.வால் நட்சத்திரங்களின் பாதை வளைவானது அரிஸ்ரோட்டில் மீண்டும் தவறு செய்துவிட்டார் எனவும் காட்டியது.1624 இல் கலிலியோவிற்கு 60 வயதாகும்போது மீண்டும் ரோமிற்கு அழைக்கப்பட்டார்.கலிலியோவின் செயற்பாடுகளால் போப் மிகவும் எரிச்சலடைந்திருந்தார்.இதனால் கலிலியோபற்றியமேலதிக தகவல்களை கேட்க அவர் உடன்படவில்லை.கலிலியோவிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கலாம்.ஆனால் ஒரு விடயம் கலிலியோவிற்கு உதவிசெய்தது.கலிலியோ புகழின் உச்சியில் இருக்கும்போது அறிவியல் வேட்கைகொண்ட பல செல்வந்தர்கள் தேடிவந்து கலிலியோவுடன் நண்பர்களாயினர்.இதனால் செல்வாக்குமிக்க செல்வந்த நண்பர்களை கலிலியோசம்பாதித்துவைத்திருந்தார்.இதனால் கலிலியோ உயிர் தப்பியது.


கலிலியோவின் செல்வந்த நண்பர்கள் நான் ஒருபோதும் கொப்பனிக்கல்ஸின்(சூரியமையக்கொள்கை) கொள்கைகளை ஆதரிக்கமாட்டேன் என்று கலிலியோவைக்கையெழுத்திடவைத்தனர்.போப்பிடம் மரணதண்டனை வேண்டாம் எனப்பரிந்துரைத்தனர்.ஆனால் போப் ஒரு முடிவுக்குவந்தார் இரு தரப்புவாதங்களையும் குறிப்பிட்டு கலிலியோ ஒரு நூல் எழுதவேண்டும் அதில் கருத்துக்கள் நடுனிலையாக இருக்கவேண்டும்.அடுத்த முக்கியமான விடயம் முடிவில் கொப்பர்னிக்கல்ஸ் தவறு செய்துவிட்டார் என்றுமுடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார் பொப்.

இதைஏற்றுக்கொள்வதைத்தவிர கலிலியோவிற்கு வேருவழி இருக்கவில்லை எனவே ஏற்றுக்கொண்டார்.9 ஆண்டுகளின் பின்னர் 69 ஆவது வயதில்dialogue concerning the two chief world systems என்ற புத்தகத்தை எழுதிமுடித்தார்.ஆனால் போப் கட்டளையிட்டதுபோல் கொப்ப்னிக்கல்ஸ் கூறியது பிழை என்று முடிக்கவில்லை சரி என்று முடித்துவிட்டார்.மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தது பிரச்சனை..

இம்முறை நீதிமன்றத்தில் ஆய்வுமன்றத்தில் இருந்த கலிலியோ நண்பர்கள் கெஞ்சி மன்றாடி மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக்குறைத்தார்கள்.இவளவு தூரம் அவரது நண்பர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தது கலிலியோவின் அதிஸ்ரம் அந்த நண்பர்கள் போப்புடன் ஒரேமேசையில் ஒன்றாக உண்ணுபவர்கள் இதனால் போப்புடன் உண்ணும்போதுகூட கலிலியோவுக்காக பரிந்துரைகள் அள்ளிவிசுக்கப்பட்டன.

ஆனால் தப்பியது மரணதண்டனையில் இருந்து மட்டும்தான்.கலிலியோ பிரான்சுக்கு வெளியில்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.வீட்டைவிட்டு வெளியேசெல்லத்தடை.கலிலியோவின் நூல்கள் முழுமையாகத்தடைசெய்யப்பட்டன.அவற்றைவிற்பதோ வினியோகிப்பதோ மரணதண்டனைக்குரியகுற்றமாக அறிவிக்கப்பட்டது.
குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கலிலியோ வீட்டுச்சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் தணிக்கைசெய்யப்பட்டன.

கலிலியோவை யாராவது சந்திக்கவேண்டுமென்றால் ரோமின் சிறப்பு அனுமதி பெறவேண்டும்.பாதுகாப்பு அவளவு கடுமையாக்கப்பட்டிருந்தது.இதிலிருந்து  எவளவு தூரம் கலிலியோவால் மதவாதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறான நடைமுறைகளால் கலிலியோமனதளவில் மிகவும்பாதிக்கப்பட்டார்.1633இல் ஒரு தொற்று நோயால் அவதிக்குள்ளானார்.ஆனால் மருத்துவ உதவிக்காகவெளியே அவரைத்தூக்கிச்செல்வதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.கலிலியோவின் நண்பர்கள் விடாப்பிடியாக போப்பிடம் வற்புறுத்தி அனுமதிகேட்டமையால் ஒரே ஒருமருத்துவர் மட்டும் கலிலியோவின் வீட்டுக்கு சென்று மருத்துவ உதவி வழங்குவதற்கு அனுமதிக்கபப்ட்டார்.சிறிதுகாலத்தில் கலிலியோவின் மகள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே கலிலியோ  மன ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டார்.இவற்றினால் சிறுதுகாலம் விஞ்ஞான ஆராய்ச்கிகளை தூக்கிப்போட்டுவிட்டு ஓவியம் வரைதல்,யாழ் மீட்டுதல் போன்றவற்றில் தனது கவனத்தைசெலுத்தினார்.பின்னர் மீண்டும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

தன் இறுதி நாட்களில் இயந்திரவியல் பற்றியகண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார் கலிலியோ.1634,37 இற்கிடையில் வீட்டுச்சிறையில் தன் வாழ் நாளின் இறுதி நாட்களில்தான் கலிலியோ தான் வெளியிட்டவற்றுள் மிகச்சிறந்தபுத்தகமொன்றைவெளியிட்டார்.
இரு புதிய விஞ்ஞானங்கள் என்பதுதான் அன் நூல்.பொருள்களில் தாக்கும்விசை,பொருள்களில் அதிகம் செலுத்தும் சக்திகள் பொருள்களில் அடங்கி உள்ளவை வெவ்வேறாகமாற்றப்படலாம் என்பவை பற்றியவிடயங்கள் எல்லாவற்றையும் தனது நூலில்குறிப்பிட்டிருந்தார்.கலிலியோவின் இன் நூல் மிகவும் புரட்சிகரமானது அவரின் பின்னே வந்த சந்ததியில் மிகவும் முக்கியமான ஒருவரின் சிந்தனைக்கு இன்னூல் மிகவும் உதவியது.அவர்தான்  நியூட்டன்.நியூற்றனின் கண்டுபிடிப்புக்கள் பல கலிலியோவிட்டு சென்றவற்றின் தொடர்ச்சிதான், நியூற்றன் என்ற பெரும் விஞ்ஞானியின் பிரமாண்டத்தோற்றத்திற்கு முன்னோடியாக இருந்தவர் கலிலியோ.

இரு புதிய விஞ்ஞானங்கள் என்ற நூலின் 2 ஆம் பகுதி முற்றிலும் வித்தியாசமாக இருந்ததுகலிலியோ காலத்து விஞ்ஞானிகள் எவரும் பொருட்களின் தன்மைகள் இயல்புகளை கணக்கிட்டுக்கூறவில்லை ஆனால் கலிலியோஅதைச்செய்திருந்தார்.வெப்பத்தைக்கடத்தல்,கடத்தாமை நெகிழ்வுத்தன்மைகள்போன்றவைகள் இடம்பெற்றிருந்தன.ஆனால் இவரது இன் நூல்களை வெளியிடத்தடைவிதிக்கப்பட்டிருந்தன மீறி யாராவது வெளியிட்டு அகப்பட்டுக்கொண்டால் மரண தண்டனை நிச்சயம்.
ஆனால் கலிலியோவுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் கலிலியோவிற்கு உதவினார்கள்.ஹோலண்ட் நாட்டின் ஒரு தனியார் அச்சகத்திற்கு கலிலியோவின் புத்தகங்கள் காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி இரகசியமாக எடுத்துச்செல்லப்பட்டு அங்கு 1638 இல் வெளியிடப்பட்டது.ஹோலண்ட் அப்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரத்திற்குள் இருக்கவில்லை. இன் நூலை வெளியிட்டபின்னர் கலிலியோவிற்கு படிப்படியாக பார்வை பறிபோக ஆரம்பித்தது இறுதியில் முற்றாக பார்வையிழந்தார்.இறுதியில் 1642 ஜனவரி 8 இல் உறக்கத்தில் மரணமடைந்தார் கலிலியோ.
The instruments used by Galileo Galilei

20ஆம்  நூற்றாண்டின் தலைசிறந்த 5 முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படுபவர் நியூற்றன்.ஆனால் நியூற்றனின் சிந்தனைகள்,கண்டுபிடிப்புக்களுக்கு முன்னோடியாக இருந்தவர் கலிலியோதான்.புவி ஈர்ப்பு என்பதை  நியூற்றன் வரையறை செய்து அதற்கு பரிமானம் கொடுத்தாலும் அந்த சிந்தனை கலிலியோவிற்கு முன்பே விளங்கியிருந்தது.
ஆர்முடுகல் தொடர்பான பரிசோதனைகள் நியூட்டனுக்குமுன்பே சாய்தளங்களின் உதவியுடன் பரிசோதித்திருக்கின்றார் கலிலியோ.2000 வருடங்களுக்கு மேலாக மாறாமல் மாற்றத்திற்கு இடமளிக்காமல் மக்களால் தொடர்ந்து நம்பப்பட்டு வந்த கொள்கைகள் சிந்தனைகளை 180 டிகிரியில் மாற்றியவர் கலிலியோ.(இந்து சமயத்தில் எத்தனை விஞ்ஞானிகள் கல்லோடு கட்டி கடலில் வீசப்பட்டார்களோ தெரியாது) நவீன விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கள் பலவற்றின் அடித்தளம் கலிலியோதான்.கலிலியோவிற்கு முன் ஐரோப்பா விஞ்ஞானத்தின் அடிமட்ட நிலையிலேயே இருந்தது காரணம் சமயம்.இதனால் ஒட்டுமொத்த உலகையும் மாற்ற கலிலியோ கடுமையான சவாலை எதிர்னோக்கவேண்டியிருந்தது.

பைசாக்கோபுரத்தில் பீரங்கிக்குண்டுகளுடன் வழுக்கும் படிக்கட்டுக்களையும் கவனியாது   கலிலியோவை மூச்சிரைக்க  கோபுரத்தில் ஏறவைத்தது அன்றைய மக்களின் முட்டாள்தனங்களின் மீதிருந்த அளவுகடந்தகோபம்.
அவரது கண்டுபிடிப்புக்களைவிட முக்கியமாக கூறவேண்டியவிடயம் அறிவியலுக்காக அவர் அசராமல் போராடியதைத்தான்.ஒட்டுமொத்தமாக பலரின் எதிர்ப்புக்கள் கண்டனங்களுக்கு ஆளானவர் கலிலியோ.

விஞ்ஞானபூர்வமாக கலிலியோவின் கருத்துக்களை எதிர்க்கமுடியாதவர்கள் மதத்தை கலிலியோவிற்கு எதிரான ஆயுதமாகப்பயன்படுத்துக்கொண்டார்கள்.இதுவே அவரைக்குற்றவாளியாக்கியது வீட்டில் சிறை புத்தகங்களுக்குத்தடை வெளியிட்டால் மரணதண்டனை என்ற நிலைக்கு கலிலியோவை கொண்டுசேர்த்தது மதம்.
இவற்றில் இருந்து கலிலியோ எவளவு தூரம் அன்றைய சமூகத்தை ஆட்டிவைத்தார் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.விஞ்ஞானத்தின் அடிப்படை விடய்ங்களுள் ஒன்றான நேரத்தைக்கணிப்பதற்காக ஊசல் இயக்க முறையை ஆரம்பித்துவைத்தவர் கலிலியோதான்.

இன்றைய விஞ்ஞானம் ஒரு தனி விஞ்ஞானியாலோ அல்லது ஒரு சில விஞ்ஞானிகளின் கூட்டத்தாலோ உருவாக்கப்படவில்லை.விஞ்ஞானத்தை ஒரு கட்டிடமாக எடுத்துக்கொண்டால் சரித்திரத்தை மாற்றிய விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் தம்மாலான பகுதிக்கட்டங்களை உருவாக்கினார்கள் அடுத்த தலைமுறையினர் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கட்டிடத்தின் மீதப்பகிதியில் இருந்து மிகுதியை தொடர்வார்கள்.இவ்வாறான செயின் ரியாக்ஸனினால் உருவாக்கப்பட்ட மிகப்பிரமாண்வமான கட்டிடம்தான் இன்றைய விஞ்ஞானம் இப்பிரமாண்டமான கட்டிடத்தைத்தாங்கி நிற்கும் பலமான தூண்களில் ஒருவராக கலிலியோவும் இருக்கின்றார் என்பதில் சந்தேகம் பூச்சியம்.அரிஸ்டோட்டலும் விஞ்ஞானியேதான் அவர்கூறிய பல கருத்துக்கள் தவறானவை ஆனால் அரிஸ்ரோட்டல் இருந்த காலத்தில்  சிந்திக்கத்தெரிந்தவராக இருந்தவர் அரிஸ்ரோட்டல்தான் அதோடு அவர் தன் சிந்தனைக்கு எட்டியதை கூறியவைதான் கலிலியோவின் சிந்தனையையும் தூண்டின சோ  ஒரு கலிலியோவிற்கு ஒரு அரிஸ்ரோட்டல்தேவை  லைக் நியூட்டனுக்கு கலிலியோதேவைப்பட்டதுபோல்.


இயல்பியல் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல்களை நாம் வேத நூலகளில் இருந்து தொடங்கக்கூடாது அனுபவங்களில் இருந்துகொண்டும் அவசியமான செயல்முறைவிளக்கங்களையும் கொண்டுதான் தொடங்கவேண்டும் என்று நான் நம்புகின்றேன் பைபிளின் புனித வாக்கியங்களில் கடவுள் சிறப்பாக்கப்படுவதைவிட இயற்கையின் இயக்கங்களில் கடவுள்  ஒன்றும் குறைவாக உணரப்படுவதில்லை
-கலிலியோ

As Albert Einstein writes on Galileo Galilei and Empirical Science

But before mankind could be ripe for a science which takes in the whole of reality, a second fundamental truth was needed, which only became common property among philosophers with the advent of Kepler and Galileo. Pure logical thinking cannot yield us any knowledge of the empirical world; all knowledge of reality starts form experience and ends in it. Propositions arrived at by purely logical means are completely empty as regards reality. Because Galileo saw this, and particularly because he drummed it into the scientific world, he is the father of modern physics -- indeed, of modern science altogether. (Albert Einstein, Ideas and Opinions)

a conflict arises when a religious community insists on the absolute truthfulness of all statements recorded in the Bible. This means an intervention on the part of religion into the sphere of science; this is where the struggle of the Church against doctrines of Galileo and Darwin belongs. (Albert Einstein, Ideas and Opinions)
Gradually the conviction gained recognition that all knowledge about things is exclusively a working-over of the raw material furnished by the senses. ... Galileo and Hume first upheld this principle with full clarity and decisiveness. (Albert Einstein, Ideas and Opinions)
Galileo had already made a significant beginning toward a knowledge of the law of motion. He discovered the law of inertia and the law of bodies falling freely in the gravitational field of the earth. (Albert Einstein, Ideas and Opinions)


Galileo probably bears more of the responsibility for the birth of modern science than anybody else

-stephen hawking

கலிலியோபற்றிய தொகுப்பு...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்