பாண்டியர்களும் அவர்களின் வரலாறும்-01

முப்பெரும் அரசகுடியினரால் ஆழப்பட்ட பழந்தமிழ் நாட்டில் தமிழர்களை ஆண்ட  அரசர்களில் முதன் முதலில் தோன்றிய மூத்த அரசகுடியாக கருதப்படுவது பாண்டியர் எனப்படும் அரசவம்சமே. தமிழிற்க்கு  சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் என்றென்றுமே தமிழுள்ளவரை தமிழர்களால் போற்றப்படவேண்டியவர்கள். அத்தகைய பாண்டியர்கள் பற்றி நான் கற்றுப் படித்து அறிந்து சேகரித்த விடயங்களை கொண்டு என்னால்   முடிந்தவரை ஒரு தொடர்கட்டுரையை வரைய விளைகின்றேன்.
பாண்டியர்களின் தோற்றம்
பாண்டியர்களைப் பற்றி அகநானூறு, புறநானூறு,பத்துப்பாட்டு,மகாபாரதம் ,இராமாயணம்,முதற்கொண்டு பல நூல்களிலும் கல்வெட்டு, செப்பேடு நிமித்தம் எத்தனையோ ஆதாரங்களும் தகவல்களும் கிடைக்கப்பெற்ற போதிலும் பாண்டியவம்சத்தின் தோற்றத்தை இற்றைவரை தெளிவாக காலத்தால் அறியமுடியவில்லை என்பதே உசிதம். குமரிக்கண்டத்தில் தோற்றம் பெற்ற தமிழ் மூதாதைகளின் பழங்குடியின் தலைமை பீடத்தில் இருந்த சகாயத்தினரே மன்னர் ஆட்சியின் தோற்றத்தின் போது பாண்டியராகத் தோற்றம் கொண்டனர் என்பது தொன் தமிழாய்வினரின் ஏற்புடைய கருத்து.  எது எங்கனம் இருப்பினும் பாண்டியர் தோற்றம் குமரிக்கண்டத்தில் நிகழ்ந்தது என இருக்க ஆதியிட் பாண்டியர் தோற்றம் காலத்துடன் அறியமுடியவில்லை என்பதே மெய்.
பெயர் விளக்கமும் குலப்பெயர்களும்
"பாண்டவர்" எனும் பதத்திலிருந்தே "பாண்டியர்" எனும் பெயர் தோற்றம் கொண்டது என வாதிடுவர் ஒருசாரார் என்ற போதிலும் அவ்வாதம்   ஏற்கத்தகுந்தது அன்று காரணம் யாதெனில் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாண்டியர் எனும் அரசகுடி பற்றியும் அவர்களின் ஆட்சி பற்றியும் செய்திகள் தெரியவருவதிலிருந்து மேற்கூறப்பட்ட வாதத்தை புறக்கணிக்கலாம். மேலும் ஒரு பகுதியினர் "பண்டு" எனும் சொல் பழமையை குறிப்பதால் பாண்டியர்கள் பழையவர்கள் என்னும் பொருட்டு   "பண்டு" எனும் சொல் மாறி பாண்டியர் என்று திரிபு   கண்டது என்பர். ஆனால் இவ்வாதத்தை பாண்டியர்கள் பழமையானவர்கள் என்பது இக்காலத்திலிருந்து பார்க்கும் போதே தவிர அக்காலத்தை பொருத்தமட்டில் அவர்கள் அக்காலத்தவர்களே. என்று மறுதலிப்பார் தேவநேயப்பாவாணர்  மேலும் பாண்டியர் என்பது ஆண்ட  மரபு வம்சத்தினரின் குலப்பெயரே  அன்றி இப்பெயருக்கு  விளக்கம் தேடுவது இயலாது என்கிறார் அவர். [பார்க்க தேவநேயப்பாவானரின் தமிழர் வரலாறு ]  பாண்டியர் சந்திர வம்சத்தினரை சார்ந்தவர்கள் என்றபோதும் செழியன்,வழுதி,மாறன் என்னும் குலப்பெயரை கொண்டவர்கள் ஆதலால் தான் பாண்டிய மன்னர்களின்  பெயர்களின் பின்னால் இப்பெயர்களும் இணைவது இயல்பாயிற்று.
பாண்டிய இலட்சினைகளும் ஆட்சி பற்றிய கருத்துக்களும்    
சந்திர வம்சத்தை சார்ந்த பாண்டிய அரசாதியர் வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் என்றும் கயல்மீன் உருவத்தை கொடியாயும் இலட்சினையாயும் கொண்டவர்கள் என்றும் அறிந்துகொள்ளலாம்.
                    கிமு 3 ஆம் நூற்றாண்டில் கிரிஸ் தேசத்திலிருந்து சந்திரகுப்தன் அரசபைக்கு வந்த மெகஸ்தானிஸ் என்பான்  "கேர்கிளிஷுக்கு  பண்டேயா என்ற பெண்ணிருந்தாள் என்றும் அவளிற்கு தென்கடலை சார்ந்த நாட்டை அளித்தான் என்றும் 365  தேசங்கள்  அவளாட்சியிலிருந்தன" என்றும் கூறியுள்ளான்.
                                                                மெகஸ்தானிஸ் 
மேலும் இவனது கருத்தை போன்றே கிபி 79  ஆம்  ஆண்டு இறந்த பிளைனி என்பவன் "இந்தியாவிட் பண்டேயா என்ற ஒரே சாதி பெண்அரசிற்கு  உட்பட்டவர்கள் என்றும் அவர்கள் 300  தேசங்களை உடையவர்கள் பெரும் சேனைக்கு உரியவர்கள் என்றும் கேர்கிளிஷுக்கு மகள் என்றும் " கூறுகின்றான்.
                                        இவர்கள் இருவரின் செய்தியையும் பாண்டிய வழிவந்த மதுரை  மீனாட்சியின் படையெடுப்பையும்  அவள் மரபில் தோற்றம் பெற்ற கௌரியர்  வம்சத்தில் உருபெற்ற சித்திராங்கதன் மகள் சித்திராங்கதை பற்றிய கதைகளும்  ஒன்றாயிரல் வேண்டும் என்றும் கொள்ளலாம். [பார்க்க சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறு]

                                                       தொடரும்................................
       [தொடரில் குறைகளிருப்பின் எடுத்துரையுங்கள்]
    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்