சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-04

 எர்னஸ்டோவின் பயணங்கள் 
[இதன் முன்னைய பதிவிட்க்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-03]

அர்ஜென்டினாவில் பிறந்தது முதல் தன் வாழ்வில் எத்தனையோ விதமான  நண்பர்களையும் நபர்களையும் சந்தித்தவர் சேகுவேரா. இதற்க்கு மேலும் பெரும் துணையாக உதவியது அவர்மேட்கொண்டிருந்த பயணங்கள் என்றால் மிகையாகாது. சேகுவேரா தனது இளமைக்காலத்தில் அவரது மனதளவில் தன் பாதை எது என்று பெரிதும் குழம்பி இருக்கின்றார் என்று தெளிவாக தெரிகிறது. என்னதான் இருந்த போதிலும் பிறரைப் போன்று பணத்துடனும்,  வசதியுடனும் ,சிறு சிறு அற்ப சந்தோசங்களுடனும் சச்சரவுகளுடனும் வாழும் குறுகிய வட்ட வாழ்கையை அவர் விரும்பி இருக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் தன் வாழ்கையை செழிப்பு மிக்கதாக அமைத்திருக்கலாம் ஏனெனில் அவர் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர். தன் வாழ்க்கை பயனுள்ளதாக வீரசாகசங்கள் நிறைந்ததாக அமைந்திருக்க   வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் எர்னஸ்டோ குவேரா. இதற்க்கு அவர் தேர்ந்தெடுத்த வழியே பயணங்கள். தன் இலட்சியம் எதை நோக்கியது என்று பல கட்டங்களில் குழம்பினாலும் பயணங்களிலும் தொல்லியலிலும் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவராய் எப்பொதும் இருந்திருக்கிறார்.
சே மோட்டர் பொருத்திய சையிகிள்ளுடன்
அர்ஜென்டின பயணங்களின் முன்னர்.   

 1948 ஆம் ஆண்டு பியூனஸ்அயர்சில் மருதுவதுறையிட்க்கு தன்னை இணைத்திருந்த சேகுவேரா 1950 ஆம் ஆண்டு வடக்கு அர்ஜென்டினா முழுவதிலும் ஒரு சாதாரண மோட்டார் சையிக்கிலின் துணை கொண்டு 4000 மைல்கள் பயணம் மேட் கொண்டிருந்தார். இதன் மூலம் அவர் தன் பெரும் பயணங்களை ஆரம்பித்து வைத்தார். 
சே பயன்படுத்திய மோட்டர் பொருத்திய சையிக்கில்
4000 மைல்கள் பயணம் மேற்கொண்டது இதில் தான்  
ஆனால் இதன் பின்னர் அவர் மேற்கொண்ட பயணங்களே அவர் வாழ்வில் அவரை முக்கியமான கட்டத்திற்க்கு அழைத்து சென்றது எனலாம்.அதாவது  1951-1952 இவாண்டுப் பகுதிகளில் ஏறத்தாள ஒரு வருடம் தன நண்பரான அல்பர்ட்டோ கிறனாடோவுடன் அவர் மேட்கொண்டிருந்த தென்னமெரிக்க பயணங்கள் சேகுவேராவின் தேடலுக்கு நல்ல விருந்தாக அமைந்திருந்தது எனலாம். இப்பயணங்களின் போது தங்கும் இடங்களில் பெரும்பாலான நேரங்களை தொழு நோயாளர்களுடனும் வைத்தியசாலைகளுடனும்களித்ததுடன் தொழு நோயாளிகளிடம் சே காட்டிய பரிவு போற்றத்தக்கது. தொழு நோயாளர்களின் உடலை பார்க்கும் பலர் அவர்களின் மனதை அறிவதில்லை என்று அறிந்த சே மனதளவில் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதையே  பெரிதும் விரும்பினார். [அதாவது அவர்களுடன் ஒன்றாக கால்பந்து விளையாடுதல் மற்றும் உணவு அருந்துதல் போன்றன]. மேலும் இப்பயணத்தை பற்றிய குறிப்புக்களில்  சூக்கிமாட்டா எனும் இடத்திலுள்ள சுரங்கத்தொளிலாளர்கள் படும் கஷ்டங்களையும், இன்கா பழங்குடி நாகரிக மக்கள் தம் சுதந்திரத்தை இழந்த விதம் பற்றியும்,பல இடங்களில் முதலாளிகள் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்தும் சேகுவேரா விபரிக்கும் முறையிலிருந்து அவரின் பாதையை தெரிந்தெடுபதட்க்கு வழிகாட்டி பலகையாகவும் சமூகம் பற்றிய அவரது பார்வையை மேலும் விரிவாக்குவதட்க்கும் இப்பயணங்கள்  பெரிதும் உதவியிருந்தன என்பது தெளிவாகின்றது. இப்பயணங்கள் பற்றிய குறிப்புகளை கொண்டு வெளியிடப்பட்டதே சேயால் எழுதப்பட்ட மோட்டர் சையிக்கில் நாட்குறிப்புக்கள் [MOTORCYCLE DIARIES]. இப்புத்தகம் MOTORCYCLE DIARIES என்று ஒரு திரைப்படமாக வேறு வெளியேறியது. மேலும் இப்பயணங்களின் போது சே பெற்ற அனுபவங்களை இரண்டு கட்டுரையாக எழுதியிருந்ததுடன் அவை பத்திரிகைகளிலும் வெளியாகின.
தென்னமெரிக்க பயணங்களில்
சே மோட்டர் சையிக்கிளுடன்




அல்பெர்டோ கிறனாடோவுடன்   சே 

சே தென்னமெரிக்காவில் மேட் கொண்டிருந்த பயணங்களின்
வரைபடமும் இடங்களும் 

இப்பயணங்களின் பின்னர் பியூனஸ்அயர்சிக்கு  திரும்பிய குவேரா வழமையாக 6  ஆண்டுகள் தேவைப்படும் மருத்துவ படிப்பை 3 ஆண்டுகளில் முடித்து பட்டமும் பெற்றிருந்த குவேரா மீண்டும் தன பயணங்களை ஆரம்பித்து விட்டார் .அடுத்து அவர் மேட்கொண்டிருந்த பயணங்களில் மிகவும் முக்கியமான மற்றும் அவருக்கு அவரது பாதையையும் இலட்சியத்தையும் காட்டிய பயணமாக கருதும் பயணம் 1953 ஆம் ஆண்டு தன் மற்றொரு நண்பரான காலிகாவுடன் சேர்ந்து   குவேரா மேட்கொண்டிருந்த மத்திய அமெரிக்க பயணங்களாகும். இப்பயனங்களில் முதல் கட்டங்களில்  நண்பர் காலிகா அவருடனிருந்தார் பிற்கட்ட பயணங்களை சே தனித்து மேற்கொண்டார். இப்பயணங்கள் மூலம் சே பெற்றிருந்த நண்பர்களும் நபர்களும் பெரும்பாலும் அரசியல் சார்ந்தவர்களாகவே இருந்தனர். மேலும் இக் காலகட்டங்களில் பயணித்த இடங்களில் நிலவிய அரசியட் பிரச்சினைகளும் சேயை அரசியல் சார்ந்து இழுத்து சென்றன. அவ்வளவு ஏன் இப்பயணங்களின்  போதுதான் சேவின் வாழ்வில் பல முக்கிய சந்தர்பங்களும் நிலவின. சேவின் முதல் மனைவியான ஹில்டா காடியாவுடன் நெருக்கம் மற்றும் திருமணம், வரலாற்றுகளில் தடம் பதித்த சந்திப்புக்களில் ஒன்றான சே மற்றும் பிடல் காஸ்ட்ரோவின் சந்திப்பு [இது மேக்ஸ்சிக்கோவில் நிகழ்ந்தது கியூபப் புரட்சிக்காக ஆயுதங்களை கைப்பற்றும் நோக்குடன் மேட் கொண்டிருந்த தாக்குதலில் தோல்வியுற்று சிறையிலிருந்த காஸ்ட்ரோ மன்னிப்பு  பெற்று சிறையிலிருந்து வெளியேறி மேக்ஸ்சிக்கோவிட்க்கு வந்திருந்து  அடுத்த கட்ட போராட்ட முயற்சிகளை இங்கிருந்தே மேட் கொள்ள திட்டமிட்டிருந்தார் காஸ்ட்ரோ அச்சமயத்தில் மேக்ஸ்சிக்கோவில் இருந்த குவேராவுடன் ஏற்பட்ட சந்திப்பே இது] , மத்திய அமெரிக்காவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகள் போன்றன மெல்ல மெல்ல சேவை அவரது இலட்சியத்தை நோக்கி திருப்பின. 
பிடலுடன் சே 
காடியாவுடன் சே 


மத்திய அமெரிக்க பயணங்களும் இடமும் 
இச் சந்தர்பத்திலேயே தன் அரசியல் குறித்த பார்வையை விசாலப் படுத்தினார் சே. இதனால் மேலும் அதிகமாக கம்யூனிஷியத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸ்சின்  புத்தகங்களை வாசித்திருந்த சே தன்னை அவரது சீடனாயும் கருததொடங்கினார்   என்பது அவர் அவரது அம்மாவுக்கு   எழுதிய கடிதங்கள் மூலம் தெளிவாகிறது. சேவின் பயணங்கள் அவருக்கு சிறந்த அனுபவங்களையும் இலட்சியத்தையும் அளித்தன. மருத்துவத்துறையில் சேயின் ஈடுபாடு காரணமாக ஆரம்ப கட்டங்களில் அவர் மருத்துவப் பொறுப்பை கியூபப் புரட்சிகளில் ஏற்கப் பணிக்கப்பட்டார். புரட்சியின் நியாயத்தன்மை விளங்கவே தன்னை முழு மனதோடு அதில் ஈடுபடுத்திக் கொண்டார் சேகுவேரா.
                                                         
                                                            தொடரும்..........................................................
 [இப்பயணங்கள் குறித்து என்னால்   எழுத முடியுமானவரை சுருக்கமாய் தந்துள்ளேன் ஏனெனில் இவை எழுத்தாளருமான சேகுவேராவால் உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட நாட்குறிப்புக்கள் ]  

குறைகளிருப்பின் அறியத்தரவும்                                        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்