கார்ல்மார்க்ஸ்-02

கார்ல்மார்க்ஸின் இரண்டாவது பதிவு இது....
முதல் பதிவைத்தொடர....கார்ல்மார்க்ஸ்-01


இவரது நண்பர் எங்கெல்ஸ் மட்டும் இல்லையெனில் இவரது இத்தகைய இன்னல்களை தாண்டவோ மூலதனம் என்ற மிகப்பெரும் நூலை எழுதவோ முடியாமல் போய் இருக்கும் ....தனது மகள் இறந்த  சமயத்தில் ஜெனி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”



ஆனால் இவரது பின்னைய காலம் சற்று இலகுவாகவே கழிந்த்து. மார்க்ஸுக்கும் ஜெனிக்கும் பிறந்த 6 குழந்தைகளில் மூவரேஉயிர் பிழைத்தனர். அவர்களது பெயர் ஜெனி,லோறா,எலோனர் .மூவரும் தமது காலத்தில் வாழ்ந்த முக்கியா சோசலிச வாதிகளைத்திருமணம் செய்தார்கள்.

மார்க்ஸ் ஒரு சளையாத எழுத்தாளர். அனேகமான சகல ஐரோப்பிய  மொழிகளிலும் அவருக்கு புலமை இருந்தது. அவரது மூலதனம் என்னும் நூல் அவரது வாழ்வின் 40 ஆண்டுகளைப்பிடித்தது என்று கூறுவார்கள்.

மூலதனம் என்னும் மாபெரும் படைப்பு 1867 செப்தெம்பர் 14 ஹம்பார்க்கில் பிரசுரமானது அதன் முதல் பாகம் கொம்யூனிசத்தின் சாரத்தைக்கொண்டிருந்தது. இரண்டாவது பாகத்தை எழுதி முடிப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். அவரது குறிப்புக்களை தொகுத்து அவரது வாழ்நாள் நண்பர் ஏங்கெல்ஸ் அவரது மறைவுக்குப்பின் வெளியிட்டார். இம்மாபெரும் படைப்பைவிட பல முக்கியமான நூல்களையும் மார்க்ஸ் எழுதியுள்ளார்.

 கூலி,உழைப்பு,ஃபிரான்ஸில் வர்க்கப்போராட்டங்கள்,லூயி பெர்னாட்டின் 18 ஆவது புருமெயர்,இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சி,விலை இலாபம் போன்றவை இவற்றுள் பல நூல்கள் இவரால் பொது மன்றங்களில் ஆற்றப்பட்ட உரைகள்தான்.


மார்க்ஸ் வெறுமனையே ஒரு கோட்பாட்டாளர் மட்டுமல்ல அதற்கும் மேல் தனது காலத்தில் புரட்சிகரமான இயக்கங்களில் செயலூக்கத்துடன் பணியாற்றியவர். தற்பொழுது முதலாம் உலகம் என புகழ்பெற்ற உழைக்கும் மனிதரின் முதலாவது சர்வதேச சங்கம் 1864இல் செப்தெம்பர் 24 இல் இவரது தலைமையின் கீழ்தான் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் சோஸலிசக்கொள்கைகளைப்பரப்பியது இந்த அமைப்பே.
மார்க்ஸ்ஸின் வாழ்வப்பற்றி ஏங்கெல்ஸ் கூறுகையில் “முதலாளித்துவ சமுதாயத்தை தூக்கிஎறிவதற்கும் அது உருவாக்கிய அரச நிறுவனங்களை தூக்கிஎறிவதற்கும் பாட்டாளிவர்க்கத்தை அவர்களின் சொந்த நிலை பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் உணர்வடையச்செய்து விடுதலைக்கு எதாவது ஒருவகையில் பங்களிப்பு செய்வதே இவரது நோக்கமாகைருந்தது.
1871-இல் பாரீஸ் கம்யூன் புரட்சி நடந்தபோது ‘அகிலம்’ என்ற அமைப்பு இருந்தது
பாரீஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்த பிறகு இனியும் அகிலம் நீடிக்க வேண்டிய வரலாற்றுத் தேவை இல்லை என்றார் மார்க்ஸ்.
இந்த அகிமலம் என்ற அமைப்புத்தான் சோஷலிசத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச அளவிலான போராட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.

1867 செப்டெம்பர் 14-இல் மூலதனம் வெளியாகி இருந்தது.
1872-இல் ரஷ்யாவில் (பீட்டர்ஸ்பர்க்) மூலதனம் ரஷ்ய மொழியில் வெளியிடப் பட்டது. மார்க்சின் மூலதனம் அவரது 40 ஆண்டு கால உழைப்பு ஆகும். அடுத்த இரண்டு பகுதிகளைப் படித்து, திருத்தி, எழுதி, சரி செய் தார் ஏங்கல்ஸ். இந்த விலை மதிக்க முடியாத பணியைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த லெனின், ‘மூலதனத்தின் இரண்டாவது மூன்றாவது பாகங்களை வெளியிடுவதன் மூலம் ஏங்கல்ஸ் தன் நண்ப ராகிய மாமேதைக்கு ஒரு கம்பீரமாக நினைவுச் சின்னத் தை எழுப்பி விட்டார். அதன் மூலம் அந்த நினைவுச் சின்னத் தின் மீது தன்னை அறியா மலேயே தனது பெயரையும் அழிக்க முடியாத வகையில் பொறித்துவிட்டார். உண் மையில் இவை மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் கூட்டுப் படைப்பாகும்’ என்று எழுதினார் லெனின். 4 பாகங்களைக் கொண்ட மூலதனம் 1954-61-இல் சோவியத் யூனியன் வெளியிடப்பட்டது.
1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடந்து லெனின் தலமையில் பொதுவுடமை ஆட்சி /கம்யூனிஸ்ட் ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ச்செக்கோஸ்லோவாகியா, யூகோஸ்லாவியா, கிழக்க்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, அல்பீரியா, சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளுக்கு கம்யூனிசம் பரவியது.இவைதான் கார்ல்மார்க்ஸ்கண்ட வெற்றிகள்

கார்ல்மார்க்ஸ்ஸின் வாழ்வின் பிற்பகுதியில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி, நுரையீரல் அழற்சியினால் மிகவும் கஸ்டப்பட்டார். இவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இருவரும் படுத்த படுக்கையாகிவிட்டனர்.

 மார்க்ஸ் தேறிவிட்டார். ஆனால் மார்க்ஸ்ஸின் மனைவி 1883 மார்ச் 14 இல் காலமானார். ஆசை மனைவியின் மறைவு மார்க்ஸ்ஸை பெரிதும் தாக்கியது. தன் உயிர்நண்பன் ஏங்கெல்ஸுக்கு தன் மனைவியின் மரணம் பற்றி கூறும் பொழுது “சோனகனும் சேர்ந்து இறந்துவிட்டான் என்றுகூறினார்”.(மார்க்ஸ்ஸின் மனைவியும் பிள்ளைகளும் இவருக்கு சோனகன் என்ற செல்லப்பெயரை வைத்திருந்தனர்)


1883 ஜனவரி 11 இல் தனது முதல் மகள் இறந்த்து இவருக்கு அடுத்த பேரிடியானது.அதன் பின்னர் மேலும் இரண்டுமாதகாலம் தான் உயிர்வாழ்ந்தார்.1883 மார்ச் 14 இல் மார்க்ஸ் இறக்கும் வரை அவரது வாழ்னாள் நண்பர் ஏங்கெல்ஸ்  நாள் தவறாது சென்று மார்க்ஸ்ஸை சந்தித்துவந்தார்.

ஏங்கெல்ஸ் கார்ல்மார்க்ஸ்ஸின் இறுதிக்கட்டங்களை பின்வருமாறு விபரிக்கின்றார் “நாம் அவரை தனியே விட்டு சென்று 2 நிமிடமும் இராது திரும்ப சென்று பார்க்கும் பொழுது அவர் தனது நாற்காலியில் அமைதியாக் நித்திரையாக இருக்கக்கண்டோம் ஆனால் நிரந்தரமாக”
இலண்டன், ஹைகேட் இடுகாட்டில் உள்ள கார்ல் மார்க்சின் கல்லறை

மார்ச் 17 சனியன்று ஹைகேட் இடுகாட்டில் அவரது மனைவியின் கல்லறைக்கு அருகாமையில் மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார். அவரது இறுதிக்கிரிகையில் ஏங்கெல்ஸ் “ அவரது போர் காலங்காலமாக நிலைக்கும் அவரது பணியும் அவ்வாறே வாழும் சிந்தனையாளர்களில் அதி சிறந்தவர் மார்ச் மாதம் 14 ஆம் திகதி மாலை இரன்டே முக்கால் மணிக்கு சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்” என குறிப்பிட்டார்.



இவர் இறக்கும் தருவாயில் இவரிடம் "உலகிற்கு நீங்கள் சொல்லும் கடைசி செய்தி என்ன? என்று கேட்டார்கள்
இதற்கு மார்க்கஸ்ஸின் பதில்
"மூடனே வாயை மூடு தான் வாழும் நாட்களில் உலகுக்கு எந்த செய்திகளையும் சொல்லாத முட்டாள்கள்தான் இறக்கும் போது கடைசியாக ஏதாவது சொல்ல வேண்டும்.

..நாம் ஒரு புதியகொள்கையுடன், இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்க்ள் என்று வறட்டுக் கோட்பாட்டுத் தனமான முறையில் உலகத்தை நோக்கிச் செல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்."

-கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் வரலாற்று நூல்களே இன்றைய இடதுசாரி உலகத்துக்கு ஆணிவேர்! இவர்களது தத்துவங்களை ஏந்தியவர்கள்தான் லெனினும் மாவோவும்



















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முஸ்லிமை கொல்லும் முஸ்லிம்? ~ விஸ்வரூபம் விமர்சனம்.

கமல்ஹாசன் கவிதைகள்

தமிழன் பெருமை - பல்புகள் :)