முஸ்லிமை கொல்லும் முஸ்லிம்? ~ விஸ்வரூபம் விமர்சனம்.
// இந்த லிங்கில் படத்தின் தடை சம்பந்தப்பட்ட பழைய பதிவு உள்ளது. பார்க்கத் தேவையில்லை. ஆனால் பதிவுக்கு கீழே உள்ள கொமெண்டுகள்... அப்பப்பா... அப்படியே ஆன்மீக அடக்கத்தின் ஆதாரம். // # # # முதலில் ஒரு அண்டாவை எடுத்துக் கொள்ளவும். துப்பாக்கி அரை கிலோவும், போக்கிரி முக்கால் கிலோவும் நன்றாக வாணலியில் விட்டுக் கலக்கவும். அத்துடன் வேட்டையாடு விளையாடு டச்சை கொடுத்து, அண்டாவில் இட்டு சூடாக்கி இறக்கும்போது தசாவதாரம் காட்சிகள் சிலவற்றை லேசாக தூவி விடவும். இதோ... சுடச் சுட விஸ்வரூபம் ரெடி! (இதற்காக எதோ விஜயின் படங்களை கமல் கொப்பி அடிக்கத் தொடங்கிவிட்டார் என எண்ணற்க. அது மகாபாவம். மேற்கூறிய படங்களை ஒத்த பல படங்கள் உலகளாவிய ரீதியில் வெளிவந்துள. உலகளாவிய மசாலா கூட்டுத்தான் அது. சாம்பாரை செய்தது கமல் என்பதால் காரம் அதிகம்.) ஆக்ஷன் கதைகளை சில வகைகளில் அடக்கலாம். வெடிகுண்டு ஒன்றை வெடிப்பிலிருந்து தடுப்பது, வில்லன்களின் கோட்டைக்குள் வில்லனாக நடித்து புகுந்து வேட்டையாடுவது, நாட்டுக்கு நாடு துரத்தல். இப்படி. இது கமல் என்கிற மகா கலைஞனின் படைப்பு என்பதால் சகலமும் கலந்து வந்திருக்கிறது. சென்...
கருத்துகள்
கருத்துரையிடுக