வரலாற்றின் மிக மோசமான ஒலிம்பிக் தொடக்கவிழா ~ லண்டன் 2012
5 வளையங்கள்
|
லண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழா என்றால் சும்மாவா, அதுவும் டன்னி போய்ல்
வடிவமைத்திருக்கிறார் என்றால் கட்டாயம் பார்க்கத்தான் வேண்டும் என்று 1.30 வரை
விழித்திருந்து இடது பக்கம் பொப்கோர்ன், வலதுபக்கம் பெப்சி போத்தல் சகிதமாக TVயை போட்டால், என்னை நம்பி 230 ரூபாய் முதலிட்டது
உனது பிழை என முகத்தில் குதப்பிவிட்டது நிகழ்சி. இரண்டாம் தடவை
சோதனை எடுத்த மாணவனை அரசாங்கம் ஏமாற்றியதுபோல, கடைசிவரை இதோ, இனித்தான் என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே முடிந்துவிட்டது, மூடிட்டு கிளம்பு என்றுவிட்டார்கள்.
2008 பெய்ஜிங் (ஸாங்க் யிமோன் ஆள் வடிவமைக்கப்பட்டது) நிகழ்சிதான் வரலாற்றின் மிகச்சிறந்த நிகழ்சியாக இருக்கும்போலும்.
42மில்லியன் செலவில் ஏதோ உள்ளூர் களியாட்ட தொடக்கவிழா போல முடித்துவிட்டார்கள். டன்னி போய்ல் உடன் ஸ்டிஃபன்
டல்ட்ரி என்ற இன்னொரு இயக்குனரும் சேர்ந்து வடிவமைத்த 3 மணிநேர நிகழ்வு
தொடக்கத்திலெல்லாம் நால்லாத்தான் போயிக்கிட்டிருந்தது. அனைவருக்கும் இன்ப
அதிர்ச்சியாக பிரிட்டிஷ் அரசி எலிசபத் வருகை அமைந்தது. ஜேம்ஸ் பொண்ட் நாயகர்
டானியேல் கிரேய்க் அரசியை தானே போய் ஹெலியில் லண்டனின் கட்டடங்களுக்குமேலாக அழைத்துவருவதாகவும், (சிலை)சேர்ச்சிலே அவர்களை வாழ்த்தி
அனுப்புவதாகவும், அரங்கத்தில் அரசியும்
பொண்டும் பரசூட்டில் குதிப்பதாகவும் காட்சியமைத்திருந்தார்கள்.
அரசியை அழைத்துவரும் ஜேம்ஸ் பொண்ட்
|
கிளஸ்டோன்பேரி குன்றினை மையமாக வைத்த பழங்கால பிரிட்டிஷ்
சமூகம் அரங்கில் விரிந்தது. பாரம்பரிய நடனங்கள், கிரிக்கெட், தொழில் என மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்க, பின்னனியில் ஒரே சிறுவனின்
குரலில் வில்லியம் பிளேக்கின் ஜெருசலேமிலிருந்து பாடல்கள் ஒலித்தன. அங்கே தோன்றிய
கென்னத் பிரணக் முன்னோடியாக, பிரிட்டிஷ் கிராமங்கள்
தொழில் புரட்சிக்குள் படிப்படியாக நுழைந்தன. வயல்கள் மறைய, தொழிற்கூடங்கள் தோன்றின.
கேன்னெத் ஷேக்ஸ்பியரின் The Tempest இலிருந்து “Be Not Afraid, The isle is
full of noises” என்கிற உரையை ஆற்றினார்.
தொழில் புரட்சியின் ஒரு கட்டமாக கொல்லர்கள் இரும்பை உருக்கி
வார்க்க, அது ஒரு பெரும் வளையமாக
வடிவெடுத்தது. அப்படி ஐந்து வளையங்கள் சேர்ந்து அந்தரத்தில் ஒலிம்பிக் வளையங்கள்
உருவானது. அந்தக் காட்சி மிக அழகாக இருந்தது. ஐந்து வலையங்களும் மேலே எழுந்து, அங்கே இருந்து தீப்பொறிகளை
மழையாய் பொழிந்தன.
அடுத்ததாக மொக்கைகள் தொடங்கின. UK Health Service க்கு சமர்ப்பணம் என்று
கட்டில்களை அடுக்கி காமெடி பண்ணினார்கள். மைக் ஒல்ட்ஃபீல்ட் Tubular Bells ஐ வாசிக்க,நூற்றுக்கணக்கான தாதிகள்
அதற்கு ஆடினார்கள். கட்டிலில் கிடந்த குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் பகுதியாக
ஒன்றை அமைத்திருந்தார்கள். JK Rowling உள்ளிட்டோர் கதைகளை
சொன்னார்கள். கதைகளை சொல்லும்போதே அந்தக் கதைகளின் வோடமோர்ட் உள்ளிட்ட தீய
சக்திகள் வந்தனவாம், பின்னர் பறக்கும் குடைகளில்
வந்த மேரி போப்பினேஸ்கள் குழந்தைகளை காப்பாற்றினராம். இது எல்லாம் பாடசாலை
நாடகங்களில் நடப்பதுபோல நடந்தது.
ஒரு குழு Charriots of Fire வாசித்தது. கடைசியில்
இருந்து ஒரு ஒர்கனை, ஒரு கட்டையை மட்டும்
தட்டிக்கொண்டிருந்தது – ரோவன் அட்கின்சன். நமது Mr Bean!!! அந்தப் பகுதி மெல்லிய
நகைச்சுவை கமியோவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் அடிப்படைத் தவறு
என்னவென்றால், விளையாட்டின் அடிப்படை
விழுமியமான Sportsmanship இனை காவுகொடுக்கும்
நகைச்சுவையாக அது இருந்தது. கல்யாணவீட்டின் இசைநிகழ்ச்சியில் ஒப்பாரி பாடியதுபோல
ஆகியது அது. ஆனால் தனியே நகைச்சுவை என்று பார்த்தால் தரமான British Comedy.
அடுத்த பகுதியாக ஒரு சராசரி குடும்பத்தின் வீட்டின்
இரசனைகளாள காலத்துக்கு காலம் மாறிய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகள் வரிசைதிரண்டன.
அதனிடையே இழையோடவிட்டிருந்த இரண்டு யுவர்களின் காதல் கதை பார்ப்பவர்கள் இதயங்களை
வருடியது. அந்த பிரித்தானிய சமூக ஊடக இணைப்புக்களின் உச்சபட்சமாக இணையத்தை அறிமுகப்படுத்திய
டிம் பெர்னெர்ஸ் லீ தோன்றினார். தொடர்ச்சியாக கார்ல் ஹைட், ரிக் ஸ்மித், டேவிட் போவீ என இசையும்
ஆட்டமும் தொடர்ந்தது. ஆனால் அந்த தொடர் இசை காட்சியமைப்பில் 80,90 களின் முக்கியமான அல்பங்கள், இசை மேதைகள் எல்லாம்
விடுபட்டுவிட்டதாக பார்வையாளர்கள் குறைகூறினார்கள்.
நாடுகளின் வீரர்கள் அணிவகுத்தது அடுத்த மொக்கை. அந்தந்த
நாடுகளின் பெயர்களை ஏதோ கம்பியில் வளைத்து நாம் சின்னவயதில் மயில் நடனம் ஆடும்போது
தோகை கட்டியதுபோல கட்டியிருந்தார்கள். பல நாடுகளின் ஆடைகள் நகைச்சுவையாகவே
இருந்தன. அதிலும் போட்டியை நடத்தும் பிரிட்டன் ஏதோ பெரிய சஸ்பென்ஸ் மாதிரி
கடைசியாக வந்தார்கள். அவர்களின் ஆடைகள்தான் உள்ளதிலேயே நகைப்புக்குரியது. gold paper ஒட்டிய சுண்ணாம்புச் சுவர்
மாதிரி இருந்தது. யாரப்பா இதெல்லாம் வடிவமைப்பது?
ஒலிம்பிக் தீபம் தேம்ஸ் நதியூடாக படகில் எடுத்துவரப்பட்டது.
தீபத்தை எந்திவந்தது யார் என்பது நமக்கு தேவையில்லை, படகை ஒட்டிவந்தது யார் தெரியுமா? டேவிட் பெக்காம்!!! அரசியின் James Bond நாடகம் எந்தளவுக்கு இன்ப
அதிர்ச்சியோ, அதே அளவுக்கு இதுவும்
அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அந்த மனிதன் ஒரு அசட்டுத்தனமான, வழக்கம்போல் அழகான
சிரிப்புடன் ஓடிவந்தார். முன்னால் தீபத்தை எந்திவந்த பெண்ணின் நிலைமையை
யோசித்துப்பாருங்கள், பெக்காம் அவளுக்கு ட்ரைவர்!
பெக்கோம் படகோட்டியாக...
|
அங்கே புதுமையாக ஏதாவது செய்யபட்டதென்றால் அது ஒலிம்பிக்
தீபம் ஏற்றியதுதான். 204 நாடுகளுடன் கொண்டுவரப்பட்ட 204 இதழ்கள் அடுக்கபட்டிருக்க, அங்கே தீபம் ஏற்றப்பட, அத்தனை இதழ்களிலும் தீபம்
பற்றி, அவை எழுந்து, அழகான மலர்போன்ற பெரும் தீபமாக
மாறின. இந்த அற்புதமான கணத்துக்கு ஆர்க்டிக் மங்கிஸ் என்கிற ஒரு மொக்கை ட்ரூப்தான்
இசை.
அப்புறம் என்ன, உலகத்தின் முக்கியமான பிரமுகர்கள் கொடியை
ஏந்திவர, முகமது அலியின் தடவலோடு கொடி
ஏற்றப்பட்டது. இனியாவது ஏதாவது கண்ணுக்கு குளிர்ச்சியாக ஆடுவார்கள், பாடுவார்கள் என்று
பார்த்தால், கடையை மூடிவிட்டார்கள்.
எதையெல்லாமோ எதிரார்த்து இருந்தீர்களானால் அங்கே ஒன்றுமே
இருக்காது.
# அரசியின் அறிமுகம், மிஸ்டர் பீன், பெக்காம்... இந்த
மூன்றும்தான் கண்ணுக்கு இதமானவை. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணின் குரல்
காதுக்கு இதமாயிருந்தது.
# இந்த போட்டிகளுக்கான
கட்டுமானப்பணியில் ஏறத்தாழ 200 பாரம்பரியமிக்க கட்டிடங்களை இடித்தார்களாம்.
இடிந்தது இங்கிலாந்தின் பாரம்பரியமேதான். எத்தனை பெரிய அரசு, எத்தனை வரலாறுகள், 4 இராச்சியங்கள்.. எதையுமே
காட்டவில்லை. ஒருவேளை ஏற்கெனவே 2 தடவைகள் காட்டியதுதான் என்று
விட்டுவிட்டார்களோ...
# அரங்கம், வானவேடிக்கைகள், நடனங்கள், இசை எதிலுமே ஆடம்பரம்
தெரியவில்லை. அழகும்கூட. பாடசாலை பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் போல முடிந்தது.
# அரசியே ஏதோ வேண்டா
வெறுப்பாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அதுசரி, மகாராணியே வந்த நிகழ்சியில் மிச்ச அரச
குடும்பத்தார் எங்கே?
![]() | ||
|
ஒட்டுமொத்த ஏமாற்றமாக முடிந்தது நிகழ்சி. மூடுவிழாவாவது
காணக்கூடியதாக இருக்கும் என்று நம்புவோம். அதிலாவது நமது தலைவர் ஒர்கனுடன்
தோன்றாமலா விட்டுவிடுவார்?
(நீதுஜன் பாலா)
(நீதுஜன் பாலா)
கருத்துகள்
கருத்துரையிடுக