யு டியூப் சூப்பர் ஸ்ரார் சாம் அண்டர்சன்

சாம் அண்டர்சன் எனக்கு முதல் முதல் அறிமுகமானது யு டியூப்பினால். ஏதோ நித்திரையில் தவறிதலாக லிங்க்கை அழுத்திவிட "முக்காலா" பாடல் ஒலித்தது சரி என்று விழித்தால் தலையின் நடனம்.பிரபுதேவாவிற்குப் பதில் சாம் அண்டர்சனே ஆடியிருந்தார்.திடீர் என்று கண்கள் இருட்டியது வீட்டில் உள்ளோர் என்னை எழுப்பினார்கள்.பின்புதான் கூறினார்கள் 2 நாட்களுக்கு முன்னர்தான் நான் மயங்கி விழுந்தேனாம்.மக்களே இதைத்தான் இன்ப அதிர்ச்சி என்று நம்மூரில் கூறுவார்கள்.சரி அந்த வீடியோவை நீங்களும் பார்த்துவிடுங்கள்.
தல யு டியூப்பில் பிரபலமான அளவிற்கு சமூகத்தளங்களில் பிரபலமாகவில்லை எனவே தலையை ஒரு முறை நீயா நானாவில் பங்கேற்று பவரின் வழியைக்கையாளுமாறு ரசிகர் மன்றம் கேட்டுக்கொள்கின்றது.
திரைப்பட அனுபவத்தை பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் தல பகிர்ந்து கொள்கின்றார்.
விஜய் டி.வி யில் அது இது எது என்ற ப்ரோகிராமில் கூட சாம் அண்டர்சன் பங்கு பற்றி நிகழ்ச்சையை கௌரவப்படுத்தியிருந்தார்.அந்த ப்ரோக்கிராமின் சிறப்பு என்னவெனில் அதில் சூப்பர் ஸ்ராருக்கே போட்டியாக இருப்பவரான அண்ணன் பவர்ஸ்ராரும் அதில் பங்குபற்றினார் என்பதுதான்.
சாம் அண்டர்சனின் வீடியோக்கள் யு டியூப்பில் லட்சக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டு வருகின்றன.உதாரணத்திற்கு படத்தில் கிளைமாக்ஸின் வீடியோ 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
ஆனால் நமது தல சாம் அண்டர்சனைப்பிடிக்காத சிலர் தலையைப்பற்றி மிகவும் அவதூறான வசனங்களால் திட்டுவதும் தொடர்ந்துவருகின்றது.ஆனால் இதற்கெல்லாம் தலை அசைந்துகொடுப்பவர் அல்ல.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் பவருக்கு
ஏற்கனவே பல முண்ணனி நடிகர்கள் தமிழ் சினிமாவை நன்றாக வாழவைத்துக்கொண்டிருக்கும்போது இவரைப்போன்ற ஆரம்பகட்ட நடிகர்களையும் வளர்த்துவிடவேண்டியது முண்ணனி இயக்குனர்களின் கடமையாகும்.அப்பொழுதுதான் தமிழ் சினிமா விளங்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக