தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் எல்லோருமே நாக்கையோ, அல்லது அகப்படும் எதையாவதோ பிடுங்கிக்கொண்டு சாகவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. தனிமனிதர்களின் துதிபாடி, நாயக வழிபாட்டை முன்னிறுத்தி எடுத்தால் மட்டுமே படம் ஓடும் என்கிற ஒரே ஒரு மந்திரத்தை வைத்துக்கொண்டு உலக மொக்கையாக படங்களைக் கொடுத்து வெறுப்பேற்றியதும் அல்லாது, அவை தொடர்ச்சியாக படுதோல்விகளை மட்டுமே அடைந்தாலும், தொடர்ச்சியாக – விடாப்பிடியாக அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த நிலைமையில் 2012 இன் மெகாஹிட் படமாக ஒரு இலையான் நாயகனாக நடித்த படம் பெருவெற்றி பெற்றிருக்கிறது. தமிழர்களுக்கு அறிமுகமான நாயகன் இல்லை, இயக்குனர் இல்லை, கதை இல்லை, நாயகி இல்லை, ஒப்புக்காக மூன்று காட்சிகளில் மட்டும் வரும் சந்தானம்.. ஆனால் அஜித் என்கிற மந்திரப் பெயருக்காகவே – இந்தியாவிலேயே பெரிய ஒபினிங்கை தரக்கூடிய அந்த உச்ச நட்சத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட பில்லா 2 வை மிஞ்சி வாரி எடுத்தது நான் ஈ படம் வசூலை. 6 , 000 , 000 $ செலவில் தெலுங்கில் எடுக்கப்பட இந்தப் படம் தெலுங்கில் 20 ,000,000 $ ஐயும் , தமிழில் 4 ,000,000 $ ஐயும் அள்ளிக் குவித்துள்ளது. தேவை...
கருத்துகள்
கருத்துரையிடுக