எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் Batteries எப்படி இருக்கும்?

மின்கலங்கள்  மின்சக்தியை இரசாயனசக்தியாக சேமித்துவைத்திருப்பவை.முதலாவது மின்கலம்   Alessandro Volta இனால் 1800 இல் அமைக்கப்பட்டது.செப்பு, நாகத்தகடுகளுடன் மேலும் மெருகூட்டப்பட்ட வடிவம் 1836 இல் டானியல்லினால் உருவாக்கப்பட்டது.இவர்கள்தான் நமது இன்றைய மின்கலத்தின் முன்னோடிகள்.ஆரம்பத்தில் உலக அளவில் சக்திமுதலுக்காக இது பயன்படுத்தப்படாதுவிடினும் தற்பொழுது உலகம் முழுவதிலும் சக்திமுதலாகப்பயன்படுத்தப்பட்டுவருகின்றது.இதற்கு ஆதாரமாக மின்கலங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் வருடத்திற்கு 46 பில்லியன் டொலர்களை ஈட்டுகின்றன.

காலாகாலமாக மின்கலங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.பயன்படுத்துவோம் எறிந்துவிடுவோம்.சில மின்கலங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றிப்பயன்படுத்தலாம்.ஆனால் எவ்வளவு காலம்தான் இப்படியே பயன்படுத்துவது.இதன் காரணமாக சில டிஸைனேர்ஸ் எதிர்கால மின்கலங்களை வடிவமைத்துள்ளார்கள்.இவை எதிர்காலத்தில் பயன்பாட்டுக்குவரலாம்.இவற்றால் சூழலுக்கு பாதிப்பும் குறைவு செலவும் மிச்சம்.

மின்கலத்தின் வரலாறு





Wind-Up Batteries


உங்களது மின்கலத்தில் சார்ஜ் முடிந்துவிட்டது என்றால் கவலைப்படத்தேவையில்லை மின்கலத்தில் சிவப்பு நிறலைட் எரியும். நீங்கள் படத்தில் காட்டியது போல் மின்கல்த்தில் உள்ள பகுதியை கழற்றி சுற்றினாலே போதும் மீண்டும் சார்ஜ் ஏறத்தொடங்கிவிடும்.போதுமான அளவிற்கு சார்ஜ் ஏறியதும் பச்சை நிறத்திற்கு லைட் மாறிவிடும்.சுற்றுவதை நிறுத்திவிட்டு மீண்டும் மடித்து  பற்றியைப்பயன்படுத்திக்கொள்ளலாம். இதை வடிவமைத்தவர் Qian Jiang.

இதை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கும் படம்



Finger Battery Charger


இது போன் பற்றி உங்கள் போனில் சார்ஜ் குறைந்துவிட்டால் பற்றையை கழற்றி 130 தரம் படத்தில் காட்டியதுபோல் சுழற்றினால் போதும் சார்ஜ்ஜுடன் கூடிய பற்றி ரெடி.வீணாக சார்ஜ்ஜருடன் கடை கடையாக ஏறியிறங்கத்தேவையில்லை.

அந்த 130 ஏன் என்பதற்கான விளக்கம்தான் மேலே காட்டப்பட்டுள்ளது.இதை டிஸைன் செய்தவர்Yanko Design.

Jump Rope Battery Charger

நீங்கள் உடற்பயிற்சிசெய்யும்போதே சார்ஜ்ஜையும் ஏற்றிக்கொள்ளலாம்.ஸ்கிப்பிங்க் செய்யும் கருவியின் பிடி போன்ற அமைப்பை கொண்டது இந்த சார்ஜ்ஜர்.இதனுள் சார்ஜ் செய்யவேண்டிய மின்கலத்தை பொருத்திவிட்டு நீங்கள் உங்கள்பாட்டிற்கு பயிற்சியை செய்யவேண்டியதுதான்.சார்ஜ்ஜின் விபரம் டிஸ்பிளேயில் தெரியவரும்.

இதை வடிவமைத்தவர்  Jooyong Kim 

Hungry Batteries



இது எப்படி செயற்படுகின்றது என்ற விபரம் வெளியிடப்படவில்லை.தற்போதைக்கு இது கற்பனையான டிஸைன்தான்.பற்றி சார்ஜ் குறையும்போது சுருங்கிவிடும் இதன் மூலம் பற்றி சார்ஜ் குறைவு என்பதை அறியமுடியும்.பற்றியை கடித்து நசிக்க தேவையில்லை அதுவாக சுருங்கி இயலுமான அளவு மின்சாரத்தை வழங்கும்.இதை  டிஸைன் செய்தவர்  Mac Funamizu.

Continuance USB-Powered Battery




எப்படி பயன்படப்போகின்றது என்பது பார்த்தாலே புரிந்திருக்கும். USB மூலம் இந்த பற்றியை சார்ஜ் செய்யமுடியும்  பின்னர் தேவைப்படும்போது  USB மூலம் உங்கள் போன் ஐபாட் போன்றவற்றிற்கு மின்சாரத்தை வழங்கமுடியும்.இந்த பற்றியிருந்தால் சார்ஜர் என்ற ஒன்று தனியாக தேவையில்லை.டிஸைன் செய்தவர்கள் Haimo Bao, Hailong Piao, Yuancheng Liu & Xiameng Hu

Direct Plug-In Batteries

 Qian Jiang ,Yiying Wu என்பவர்களால் டிஸைன் செய்யப்பட்டது.தனியாக சார்ஜ்ஜர் தேவையில்லை(போகிறபோக்கில் சார்ஜ்ஜரே இருக்காது).பற்றியிலேயே சார்ஜ் செய்வதற்கான பின்னும் இருக்கும்.பற்றியில் இருந்து அதை வெளியே எடுத்து பிளக்கில் செருகி சார்ஜேற்றினால் போதுமானது.



One-Size-Fits-All






நாம் பயன்படுத்தும் மின்கலங்கள் பல ஸைஸ்களில் கிடைக்கின்றன.ஏ ஸைஸில் இருந்து டி ஸைஸ் வரை ஒவ்வொரு ஸைசிற்கும் ஒவ்வொரு விலை ஒரு ஸைஸை இன்னொன்றுக்கு பயன்படுத்த முடியாது.சோ இதை எப்படி சமாளிப்பது?இதற்குத்தேவை இந்த மின்கலம்.AtoD Battery இதுmemory foam  இனால் இது ஆக்கப்பட்டிருக்கும்.எனவே பற்றியை நசித்து தேவையானவற்றிற்குள் போட்டுக்கொள்ளலாம்.ஸ்பிறிங்க் மாதிரி தொழிற்படும்.இந்த வகையான மின்கலம் சந்தைக்கு வந்தால் இந்த ஒரு மின்கலமே போதுமானது.டிஸைனுக்கு உரியவர் Yanko .

தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்