உழுந்து வடையில் பிரபஞ்ச ரகசியம்...



இந்து சமய விழக்களில் அதிகமாகப்பயன்படுத்தப்படுவது வடை இதில் மெது வடை கீரை வடை உழுந்துவடை என்று பல வகையறாக்கள் இருந்தாலும் இந்த ஓட்டை வடை இருக்கின்றதே அதில் இந்து சமயம் பிரபஞ்ச விடயம் ஒன்றை மறைத்துவைத்துள்ளது....ஓட்டைவடை அல்லது மெதுவடை பலரது வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அம்சம்...உழுந்துவடை சம்பல் ஒரு டி இதற்கு கே.எப்.சி யும் இணையாகாது என்பது எனது கருத்து.மேலே இந்துசமய விழாக்களில் என்று கூறியிருந்தேன்..கல்யாணவீடு,அந்தியோட்டி என்று எந்த நிகழ்விலாவது பலகாரங்கள் இருக்குமாயின் நிச்சயமாக மெதுவடை இருக்கும். நமது இந்து சமயத்தின் ஊடாக நமது அன்றாட வாழ்வின் அனைத்துவிடயங்களிலும் சம்பந்தப்பட்ட ஓட்டைவடையில் நம் முன்னோர்  ஒரு இரகசியத்தை மறைத்துவைத்துள்ளார்கள் என்று நம்முள் எத்தனை பேருக்குத்தெரியும்? இது நமக்கு மிகப்பெரிய வெட்கக்கேடு...சரி சரி வாருங்கள் நமது முன்னோரின் விஞ்ஞானத்தை அறிவோம்.......ஒரு கலக்ஸியின் பொதுவான வடிவமும் ஓட்டைவடையின் வடிவமும் ஒன்றுதான் ஒரு கலக்ஸியின் மத்தியில் ஒரு கருந்துளை இருக்கும் வடையின் மத்தியில் ஓட்டை இருக்கும்....உழுந்துவடையில் உள்ள உழுந்து துகள்கள்தான் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். நமது கலக்ஸி வெள்ளை நிறமானது உழுந்துவடை வெள்ளை.அத்துடன் பிரபஞ்சம் விரிவடையும் ஓட்டைவடையை பேப்பரில் போட்டு அழுத்தினால் விரிவடையும்.பிரபஞ்சம் கோள்களை ஒரு பாயியில் அமிழ்ந்திருக்குமாறு கருதுகோள்களை எடுத்து கணிப்பிடும் கணிப்புகள் பௌதிகவியலில் உள்ளது.அந்தப்பாயிதான் வடையைப்பொரிக்கும் எண்ணை.(அகப்பை எதைக்குறிக்கின்றது என்று கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது) கலக்ஸி பற்றிய எண்ணக்கரு கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முன்பே எம் முன்னோர்கள் இந்து சமயம் ஓட்டைவடையினூடாக கலக்ஸிபற்றி கூறிவிட்டது இப்பொழுது எமது சமயத்தின் ஏனைய உணவுகளான கொழுக்கட்டை,முறுக்கு போன்றவற்றில் நெபூலா நட்சத்திர வடிவங்கள் இருக்கலாமோ என்று நாஸா விஞ்ஞானிகள் ஆராச்சி செய்துவருகின்றார்கள்....பருப்புவடையில் ஓட்டை இல்லை இது பின்னர் வந்த வடையாகும் அன்னிய கலாச்சாரம் மதம் போன்றவற்றால் உழுந்துவடையின் ஓட்டை அடைக்கப்பட்டது நமது சமய விஞ்ஞானங்களும் பருப்புவடை மாதிரியே அடைக்கப்பட்டுவிட்டது வருந்தத்தக்கது,..........
எமது முன்னோர்களை நினைக்கையில் பெருமையாக இருப்பதுடன் நாக்கும் ஊறுகின்றது...


நாம் ஓட்டைவடையிலேயே பிரபஞ்சத்தை உள்ளடக்கியவர்கள் என்பதை மறக்கக்கூடாது.இதை அடுத்த சந்ததியினருக்கும் பரப்புவோம்

like if u proud to be a Hindu...



தயிர்ல போட்டா தயிர்வட போடலனா மெதுவடை ஓட்டை இருந்தா அது ஓட்டை வட

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்