நடராஜர் - 5 - ஆடல் வல்லான்
5.3: நடனம்
ஆனந்த தாண்டவம், ஊழித் தாண்டவம் இவற்றுக்கு இடையாக நூற்றெட்டு தாண்டவங்களை
இறைவன் ஆடுகிறார். நடனத்தின் தலைவனாக இருந்து பாரத முனிவருக்கு பாரத நாட்டியத்தை
போதித்தது இறைவனே.
நூற்றெட்டுத் தாண்டவங்கள்
உடலை வளைத்து ஆடக்கூடிய நூற்றெட்டு கரணங்களையும் இறைவன் ஆடிக் காட்டினார்
எனவும் நம்பப்படுகிறது. அந்த நூற்றெட்டு கரணங்களும் சிதம்பரம் ஆடல் வல்லான்
கோபுரத்தில் (கிழக்கு ராஜகோபுரம்) அழகிய பெண் ஆடுவதாக அமைக்கப்பட்டுள்ளன. (தஞ்சை
பெரிய கோவிலிலும் இவை அமைக்கப்பட்டு, 81 சிற்பங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.)
அந்த நூற்றெட்டு கரணங்களும் வருமாறு:
தாளபுஷ்பபுடம், வர்திதம், வலிதோருகம்,
அபவித்தம், ஸமானதம், லீனம்,ஸ்வஸ்திக ரேசிதம், மண்டல ஸ்வஸ்திகம், நிகுட்டம், அர்தத நிகுட்டம்,கடிச்சன்னம்,
அர்த்த ரேசிதம், வக்ஷஸ்வஸ்திகம், உன்மத்தம், ஸ்வஸ்திகம்,ப்ருஷ்டஸ்வஸ்திகம்,
திக் ஸ்வஸ்திகம், அலாதம், கடிஸமம், ஆக்ஷிப்த ரேசிதம்,விக்ஷிப்தாக்ஷிப்தம்,
அர்த்த ஸ்வஸ்திகம், அஞ்சிதம், புஜங்கத்ராசிதம்,ஊத்வஜானு, நிகுஞ்சிதம்,
மத்தல்லி, அர்த்த மத்தல்லி, ேரசிதநிகுட்டம், பாதாபவித்தம், வலிதம், கூர்நிடம், லலிதம்,
தண்டபக்ஷம், புஜங்கத்ராஸ்த ரேசிதம்,நூபுரம், வைசாக ரேசிதம், ப்ரமரம்,
சதுரம், புஜங்காஞ்சிதம், தண்டேரசிதம்,விருச்சிக குட்டிதம், கடிப்ராந்தம், லதா வ்ருச்சிகம், சின்னம், விருச்சிக ரேசிதம்.விருச்சிகம்,
வியம்ஸிதம், பார்ஸ்வ நிகுட்டனம், லலாட திலகம், க்ராநதம்,குஞ்சிதம்,
சக்ரமண்டலம், உேராமண்டலம், ஆக்ஷிப்தம், தலவிலாசிதம்,அர்கலம்,
விக்ஷிப்தம், ஆவர்த்தம், லோலபாதம், விவ்ருத்தம், விநிவ்ருத்தம், பார்ஸ்வக்ராந்தம், நிசும்பிதம், வித்யுத் ப்ராந்தம், அதிக்ராந்தம், விவர்திதம்,கஜக்ரீடிதம், தவஸம்ஸ்போடிதம்,
கருடப்லுதம், கண்டஸூசி, பவ்ருத்தம்,பார்ஸ்வ ஜானு, க்ருத்ராவலீனம்,
ஸன்னதம், ஸூசி, அர்த்தஸூசி,ஸூசிவித்தம், அபக்ராந்தம், மயூரலலிதம்,
ஸர்பிதம், தண்டபாதம், ஹணப்லுதம்,பிேரங்ேகாலிதம், நிதம்பம்,
ஸ்கலிதம், கஹஸ்தம்,
பர ஸர்ப்பிதம், சிம்ஹவிக்ரீடிதம், ஸிம்ஹாகர்சிதம், உத் விருத்தம், உபஸ்ருதம், தலஸங்கட்டிதம்,ஜநிதம்,
அவாஹித்தம், நிேவசம், ஏலகாக்ரீடிதம்,
உருத்வ்ருத்தம், மதக்ஷலிதம்,விஷ்ணுக்ராந்தம், ஸம்ப்ராந்தம், விஷ்கம்பம், உத்கட்டிதம், வ்ருஷ்பக்ரீடிதம்,ேலாலிதம், நாகாபஸர்பிதம், ஸகடாஸ்யம்,
கங்காவதரணம்.
இந்துசமயத்தை ஏற்காதோருக்கும்,
மதங்கள் கடந்தவர்களுக்கும்கூட நடராஜர் உருவத்தில் அறிந்துகொள்ளுவதற்கு
எத்தனையோ உள்ளது. தத்துவங்களின் திண்ம வடிவமான நடராஜர் இந்துக்கள்
அல்லாதோருக்கு என்ன வைத்திருக்கிறார்?
...பார்ப்போம்.












































































































கருத்துகள்
கருத்துரையிடுக