அணு(atom ) vs ஒவையார் நீயா நானா?
atom என்ற வார்த்தை கிரேக்கத்தில் உள்ள அற்றோமொஸ்(atomos) என்ற வார்த்தையில்
இருந்து எடுக்கப்பட்டது.கிரேக்கத்தில் இப்படித்தான் இருக்கும் ἄτομος .atomosஐப்பிரித்தால் a-not ,temnō-I
cut..இன்விஸிபிள்
கண்ணுக்கு தெரியாதது மேலும்பிடிக்கமுடியாதது என்று பொருள்படும்.
மிகவும் சிறிய பொருட்களுக்கு தாம் அனுபவத்தில் கண்ட சிறியபொருட்களுக்கு மேலும் பிரிக்கமுடியாது என அக்காலத்தில் அறிந்தபொருட்களை சுட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் அற்றோமொஸ் கிரேக்கத்திலும் இந்தியாவிலும் ஒரே பொருள்பட அதே வார்த்தையைப்பயன்படுத்தினர் இந்தியாவில் அதன் பெயர் அணு அதாவது சிறியது,பிரிக்கமுடியாதது(தமக்கு சிறியது என தெரிந்தவற்றுள்) என்று பொருள்படும்.ஆரம்பகாலத்தில் பெரியது என்பதற்கு உவமானமாக மலைபோல் கடல்போல் என்ற வார்த்தைகளைப்பயன்படுத்துவார்கள்.ஏனென்றால் எம் முன்னோருக்கு தெரிந்தவற்றுள் பெரியவைகள் அவைகளாகத்தான் இருந்தது.அவன் மனது கலக்ஸிபோல் பெரியது என்றோ..கருந்துளை மாதிரியான எண்ணம் கொண்டவன் என்றோ அவர்கள் கூறவில்லை.(ஆனால் அண்டம் என்றவார்த்தையை பயன்படித்தியுள்ளார்கள் பின்பு ஏன் ஏனையவற்றை விட்டார்கள் என்பது தெரியவில்லை)அவர்களது காலத்தில் அவர்கள் அறிவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.இதே லொஜிக்தான் அணுவிற்கும்.மணல் தலைமுடி போன்றவற்றை சிறிய பொருட்களுக்கு உவமானமாக கூறினார்கள்.சரி மிக மிக சிறியது ஏதாவதொன்றை அவர்கள் விழிப்பதற்கு அணு என்ற பதத்தைபயன்படுத்தினார்கள்.அணு என்ற வார்த்தை மிக சிறியது என்பதற்கும் Chemical atom இற்கும் பொருந்திவிடுகின்றது என்ற ஒரே காரணத்திற்காக முன்னோர்கள் அணுவைக்கண்டுபிடித்தார்கள் என்பது முட்டாள்தனம்தான்.இது எப்படி இருக்கிறது என்றால் போப்பாண்டவரும் பழனியாண்டவரும் தூரத்து சொந்தம் என்பதுபோல் உள்ளது.இருவரிலும் ஆண்டவர் என்ற பெயர் வருதல் காரணமாக. டெமோகிரிட்டிஸ் அணு பற்றிக்கூறும்போது அணு என்றவார்த்தையுடன் நிற்கவில்லை அவர் நினைத்த அணு என்ற கருத்தியல் பொருள் என்னவென்பதற்கு அவர் விளக்கங்களைக்கூறியிருந்தார்.அவர் கூறியவற்றுள் தவறுகள் உண்டென்று பின்னர் அறியப்பட்டாலும் குறைந்தபட்சம் அணுபற்றிய மேலதிக விளக்கங்களையாவது கூறியிருந்தார்.ஓவையார் மிகச்சிறியது என்ற பொருள்படும் அணு என்றவசனம் Chemical atom ஐ குறிப்பதை விளக்குவதற்கான தகவல்களை போதுமானதாகக்கொண்டிருக்கவில்லை.
கடவுள் ,ஹிக்ஸ் போஸன்,குர்ஆன்,பித்தலாட்டம்,சிவன் துகள்

வள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கு சங்ககாலப்புலவர் இடைக்காடர்
"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத்தறித்த குறள்"
என்று புகழுரைவழங்கக்கேட்ட ஓளவை அதனினும் சிறப்பாக புகழுரை வழங்குவதற்காக பாடியதுதான்
"அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக்
குறுகத்தறித்த குறள்"
நீ என்ன சொன்னாலும் சரி ஓளவை கூறிய அணு கெமிக்கல் அட்டம்தான் என்கிறீர்களா? அப்படியானால் அதே ஓளவைபாடிய பாடல்..பெரியது எது என்று முருகன் கேட்டதற்குப்பாடியபாடல்
நீ என்ன சொன்னாலும் சரி ஓளவை கூறிய அணு கெமிக்கல் அட்டம்தான் என்கிறீர்களா? அப்படியானால் அதே ஓளவைபாடிய பாடல்..பெரியது எது என்று முருகன் கேட்டதற்குப்பாடியபாடல்
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!
இதற்கான பொழிப்புரை....
உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன். எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர். எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது.
(இப்பாடலில் ஒரு பிரச்சனை உள்ளது...வரலாற்றில் பல ஓளவையார்கள் இருந்தார்கள்..அணுவைத்துளைத்து என தொடங்கும் பாடல் பாடியவருக்கும் பெரியது கேட்கின் என பாடிய ஓளவைக்கும் கால இடைவெளி அதிகம்..எனவே சங்க கால ஓளவைக்கு அரொம் பற்றிய அறிவு இருந்தது இறுதிக்கால முருகனின் அருளை நேரடியாகப்பெற்ற ஓளவைக்கு அரொம்,பூமி பற்றிய அறிவு புரிதல் இல்லையெனக்கொண்டாலும் சரிதான்) இப்பாடலில் விஞ்ஞான ரீதியாக எத்தனை லொஜிக்(லாஜிக்) பிழைகள் இருக்கின்றன என்று வெளிப்படையாகவே தெரிந்திருக்கும்.அணு பற்றிய விடயங்களை அறிவதற்கு தேவையான அறிவை விட பூமிபற்றிய விடயங்களை அறிவதற்கு குறைவான அறிவுதான் தேவை...ஓளவையின் பெரியது கேட்கின் என்ற பாடலே ஓளவை அணுவைக்கண்டுபிடித்தார் என்ற கூற்றை தூள் தூளாக உடைப்பதற்கு போதுமானது.

அணுவின் அளவு
10−10 m/100 pm இன்றளவும் அணுவை நுணுக்குக்காட்டிகளால்
அவதானிக்க
முடியவில்லை,இலத்திரனியல் நுணுக்குக்க்காட்டிகளினாலும்
அவதானிக்கப்பட முடியாத பொருளாகவே இருக்கின்றது.அணு இருப்பதை
பரிசோதனை
முறைகள் மூலமே நாம் உணர்ந்திருக்கின்றோம்.அதே
பரிசோதனை
முறைகள் மூலம் அதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய
உருவத்தையும்
கொடுத்துள்ளோம்.எடுத்தவுடனே அணுவிற்கு சரியான உருவத்தை
விஞ்ஞானிகளால்
கொடுக்கமுடியவில்லை.ஒவ்வொருவர் ஒவ்வொரு
மொடல்களை
அறிமுகப்படுத்தினார்கள்.பின்னர் சரியான ஒரு மொடல்
தக்க
காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.முதன் முதலில் Alchemists இரசவாதிகளினால் அணு என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.இரவாதம் என்பது கற்பனையில் மட்டும் நடைபெறக்கூடிய விடயங்கள் என தற்போது அறியப்பட்டாலும் இரவாதிகளின் அறிவியல் தேடல் ஆரம்பங்கள் தான் தற்கால இரசாயனவியல்,மருத்துவத்துறைக்கு முன்னோடிகளாக இருந்தன.பின்னர் அணு என்ற சொல்லைப்பயன்படுத்தியவர் அதாவது atomos ஐ பயன்படுத்தியவர்
அணு என்பது அடிப்படைத்துகள் என்று விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் உடனே அதற்கு உருவம் கொடுக்க முனைந்தார்கள்.ஒவ்வொருவர் ஒவ்வொரு உருவத்தைகொடுத்தார்கள் அதற்குக்காரணமும் கூறினார்கள்.
முதன் முதலில் உருவம் கொடுத்தவர் Democritus உருளைப்பந்தின் வடிவம் என அணுவிற்கு உருவத்தை வழங்கினார்.தொம்ஸன்,ரதபோட்,நீல் போர் என்ற பல விஞ்ஞானிகள் பின்னர் அணுவிற்கு உருவங்களை வழங்கினார்கள்.
காலப்போக்கில் அணு பல அவதாரங்களை எடுத்தது.
விஞ்ஞானத்திற்கு ஒரு பழக்கம் இருக்கின்றது.உருவாக்கப்பட்ட கொள்கைகளை,விதிகளை அப்படியே நிலையாக வைத்திருக்காது.அதாவது அதை மாற்றாது அதுதான் விதி என்று நிர்ணயித்துவிடாது.காரணம் எந்த ஒரு காலத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட,உருவாக்கப்பட்ட கொள்கைகள் அந்தக்காலத்திற்குரிய அறிவினால் மட்டுப்படுத்தப்பட்டவை.எனவே பின்வரும் காலங்களில் உள்ள விஞ்ஞானிகளினால் கொள்கைகள்,கோட்பாடுகள் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்படும்.தேவையான மாற்றங்கள் ஏற்படுத்தபபடும்.தேவையில்லையாயின் தூக்கி குப்பையில் எறியப்படும்.முடிந்த முடிபாக இருக்கும் விடயங்கள் மிக மிக குறைவு.(சில conservation lawக்களில் மட்டும் மாற்றமிருக்காது).
அணுக்கள் எடுத்த
வடிவங்களை ரைம்லைனில் பார்ப்போம்...
முதலில் அணுக்கொள்கைகளை உருவாக்கியவர் டோல்ரன்(30 Oct 1803) அவர் அணு என்றால் இப்படித்தான் இருக்குமென்ற ரீதியில் கூறிய
கொள்கைகள்
1. சடப்பொருட்கள் யாவும் அணுக்களால் ஆனவை.
இவற்றிற்கு இடத்தைப் பிடித்துக் கொள்ளும் தன்மையுண்டு.
2. ஒரே மூலகத்தின் அணுக்கள் யாவும் ஒரே இயல்பைக் கொண்டிக்கும்.
3. அணுவை ஆக்கவோ அன்றேல் அழிக்கவோ முடியாது.
4. அணுவை பிரிக்க முடியாது.
2. ஒரே மூலகத்தின் அணுக்கள் யாவும் ஒரே இயல்பைக் கொண்டிக்கும்.
3. அணுவை ஆக்கவோ அன்றேல் அழிக்கவோ முடியாது.
4. அணுவை பிரிக்க முடியாது.
துரதிஷ்ரவசமாக இவர் அணுவைப்பற்றிக்கூறிய பெரும்பாலனவை தவறு
என இப்பொழுது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அடுத்து
அணுபற்றிக்கூறி ஒரு மொடலை அறிமுகப்படுத்தியவர் J.J. Thomson(1 Jan 1897) அவர் அறிமுகப்படுத்திய மொடலின் பெயர் plum pudding
அடுத்த மொடல் planetary model இதை அறிமுகப்படுத்தியவர் Hantaro Nagaoka(29 Oct 1904).சனி கிரகத்தை சூழ உள்ள வளையங்களைப்போல் அணுக்கருவை இலத்திரன்கள் சுற்றிவருகின்றன எனக்கூறினார்.
Ernest Marsden என்பவர் அணுவின் கருவில் நொயூக்கிளஸ் இருக்கின்றது என்பதைக்கண்டுபிடித்தார்.
அடுத்த மொடலை அறிமுகப்படுத்தியவர் Ernest Rutherford இவரது உருவத்தின் படி நேரேற்றம் அணுவின் மையத்தில் சிறிய இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும்.அவற்றை சூழ மறையேற்றம்.
அடுத்த மொடல்(model) Niels Bohr இனால் அறிமுகப்படுத்தப்பட்டது(10/31/1913). இவர் நீல் போர் வெளியிட்ட வடிவத்தின் திருத்திய வடிவத்தை வெளியிட்டார்.இலத்திரன் ஒரு நிலையான பாதையில் சுற்றும்.அந்தப்பாதையை orbit என அழைத்தார்.சக்திகிடைக்கும்போது orbit களை மாற்றிக்கொள்ளும் என்று கருத்தைவெளியிட்டார்.இதற்கு ஆதாரமாக அவர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். hydrogen spectrum தின் உதவியுடன் விளக்கினார்.
அடுத்து அணுவிற்கு ஒரு மொடலை உருவாக்கியவர் erwin schrodinger.குவாண்டம் விசையியல் அடிப்படையில் சமன் பாடுகளை உருவாக்கி.நியூக்கிளியஸ்ஸிற்கும்.இலத்திரன்களுக்குமிடையேயான தூரத்தை வெளிக்கொணர்ந்தவர்.அத்துடன் ஓர்பிட்டுக்களில் துணை ஓர்பிட்டுக்கள் இருப்பதையும் இவர்தான் வெளிக்கொணர்ந்தார்.
அடுத்து Werner Heisenberg என்ற விஞ்ஞானி இலத்திரனின் வேகம்,உந்தம் இரண்டையும் நீங்கள் ஒரே நேரத்தில் அறியமுடியாது என்று தெரிவித்தார்.இதன் மூலம் இலத்திரனின் நிலையை அறியமுடியாது என்ற கருத்தை வெளியிட்டார்.இவரது இக்கருத்து போரின் தியரியில் பிழைகள் இருப்பதை காட்டியது.(you can't know the exact velocity and momentum of the electron at the same time, which means you can't know the exact location of the electron. This principle proves error in Bohr's model because of the uncertainty of the location of an electron.)அரிஸ்ரோட்டலில் ஆரம்பித்தது அணு எனும் பொருளின் தேடல் கி.மு வில் இருந்து இன்றுவரை தொடர்கின்றது.சிறியது என்ற பொருளுடன் நின்றுவிடாத அனைத்திற்கும் அடிப்படையான துணிக்கைபற்றிய விழிப்புணர்வை நோக்கிய 2000 வருடங்களுக்கு மேற்பட்ட தேடல் இது.டோல்ர்ரனில் இருந்து இதற்கு நம் அணு ஆராய்ச்சியின் முன்னோடிகள் எதிர்பார்க்காத அளவிற்கான அறிதல் தொடங்கியிருந்தது.அணு என்னும் பொருள் ஒரே பொருளாக இல்லை என்பதை நாம் அறிந்துகொண்டோம்.அதில் பல உப துணிக்கைகள் உள்ளன என்று அறிந்தோம் அந்த உப துணிக்கைகள் பற்றிய தேடல் ஹிக்ஸ்போஸன் வரை எம்மை அழைத்துவந்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்து விஞ்ஞானிகள் அணுவிற்கு உருவாக்கிய ஒவ்வொரு மொடல்களிலும் தவறுகள் கண்டுபிட்க்கப்பட்டு மாற்றி மாற்றி இறுதி நிலையைப்பெற்றிருக்கின்றோம்.அணுவில் ஒவ்வொரு துகள் கண்டுபிடிப்பிற்கும் ஒவ்வொரு விஞ்ஞானிகளின் பங்களிப்பு இருந்திருக்கின்றது.Neutrons களைக்கண்டுபிடித்தவர் AMES CHADWICK, Electronகளுக்கு பெயரிட்டவர் G. Johnstone Stoney(இலத்திரன் கண்டுபிடிப்பில் ஒருவர்
மட்டும் பங்கேற்கவில்லை பலர் இருக்கின்றார்கள் வாயு அடைத்த குழாய்களுக்குள் ஓளிக்கதிர்கள் தோன்றுவதை Johann Wilhelm Hittorf 1869 ல் அவதானித்ததில் இருந்து இலத்திரன் பற்றிய அவதானிப்பு ஆரம்பிக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிப்பிற்கான உரிமம் தொம்ஸனுக்கு அளிக்கப்பட்டது 1897) ,Protonகளைக்கண்டுபிடித்தவர் ERNEST RUTHERFORD.
எனவே Chemical atom பற்றிய புரிந்துகொள்ளல் டோல்ரனிடமிருந்து ஆரம்பித்தது என கொண்டாலும் இன்றுவரையில் 200 வருடங்களுக்கு மேல் ஆகின்றது.பல விஞ்ஞானிகளின் பங்கு அணுவின் ஒவ்வொரு துகளுக்கும் இருக்கின்றது.இறுதியில் Chemical atom ஐ பூரணமாக நாம் விளங்கிவிட்டோம் ஹிக்ஸ்போஸனுடன்.2012 இல் நாம் முழுமையடைந்துள்ளோம்.சோ 1803-2012 நிச்சயம் நீண்டகாலப்பகுதிதான்.அணு என்ற அடிப்படைப்பொருளை நாம் பாடப்புத்தகங்களில் படிப்பதற்கு பின்னணியில் மேற்கூறிய,கூறாத பல விஞ்ஞானிகள் இருந்திருக்கிறார்கள்.வெளிப்படையாக சொன்னால் கெமிக்கல் அற்றோமிற்கு ஒரே ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது.காரணம் Chemical atomஐ Chemical atom ஆக விளங்கவேண்டுமெனில் மேற்கூறிய அத்தனை விஞ்ஞானிகள் கூறிய அத்தனை விடயங்களும் பரிசோதனைகளுடன் தெரிந்திருக்கவேண்டும்.

இவ்வாறு அவனவன் ஒவ்வொரு செங்கல் செங்கலாக கஸ்ரபப்ட்டு தமக்குள் மோதி அணு எனும் இறுதிப்பொருளை வெளிக்கொணர்ந்தால் ஒரே ஒரு சொல்லில் ஓவையார் அணுவை அப்பவே கண்டுபிடிச்சுட்டார் என்று கூறினால் தலையை எங்கு சென்று முட்டிக்கொள்ள?
மீண்டும் ஒரு முறை...
மீண்டும் ஒரு முறை...
இது எப்படி இருக்கிறது என்றால் போப்பாண்டவரும் பழனியாண்டவரும் தூரத்து சொந்தம் என்பதுபோல் உள்ளது.
தொடரும்.......
கருத்துகள்
கருத்துரையிடுக