நீங்கள் பேஸ்புக்கில் உங்கள் சகோதரியை காதலித்துவிட்டால்
நீங்கள் பேஸ்புக்கில் உங்கள் ரத்த உறவையே காதலித்துவிட்டால் என்ன ஆகும்.பேஸ்புக்கின் கொடூரமான முகங்களில் இதுவும் ஒன்று.பேஸ்புக்கில் நமக்கு புதிதாக ஒருவர் அறிமுகமாவது மிக இலகு.ரிக்குவெஸ்ட் கொடுத்து அக்ஸெப்ட் செய்தால் ஓகே.பின்னர் ஹாய் உடன் ஆரம்பிக்கும் கதைகள் லைஃப் எப்படி போய்க்கிட்டிருக்கு? என்ன சாப்பிட்டாச்சா? என்று சென்று டியர் உனக்கு மெஸேஜ் அனுப்பாம இருக்க முடியல ரேஞ்சிற்கு சென்றுவிடும்.ஒரு மாதிரியாக மெஸேஜ் அனுப்புவதற்கு நாம் அடிமையாகிவிடுவோம்.பேஸ்புக்கில் புதிதாக வரும் ரிக்குவெஸ்ட்களில் ஆண்கள்,பெண்கள் பல புனைபெயர்களில் உலாவருகின்றார்கள்.பிரியாக்குட்டி,கன்னுக்குட்டி அது இது என்று பல பெயர்கள் வரும்.ஆனால் இது ஆணா பெண்ணா என்பது இரண்டாவது பிரச்சனை.ஆரம்பத்தில் சட்டில் ஆரம்பிக்கும் கதைகள் காதலில் சென்று முடிவடைந்தபின்னர்...அது உங்கள் சகோதரி,சகோதரனாக இருந்தால்..இவ்வளவு நாட்களும் நீங்கள் காதலித்தது உங்கள் சகோதரனை/சகோதரியை என்று தெரிந்தால் எப்படி இருக்கும்? இதெல்லாம் நடக்க சாத்தியமில்லாதவைகள் இல்லை.புனைபெயரில் உலாவரும் போது உண்மையில் அது யார் என்று அவர்களாக கூறாதவரை உங்களுக்கு அது யார் என்பதைக்கண்டுபிடிக்கமுடியாது.
எனவே பேஸ்புக்கில் சட் செய்யும்போது மிக கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.இந்த மெஸேஜ்ஜை ஒரு குறும்படமாக எடுத்திருக்கின்றார்கள்.ஆரம்பத்தில் இலகுவாக சட்டிங்க் தொடங்குகின்றது.பின்னர் டேட் செய்யவிரும்புவதாக ஆண் கூறுகின்றார்.உனக்கு முன்பு வந்ததும் என்ன செய்வாய் என்று கேட்க உன்னருகில் வந்து....மிச்சம் சஸ்பெண்ட் என்று அப்படியே சட்டிங்க் தொடர்கின்றது.இறுதியில் சந்திப்பதற்கு அட்றெஸ் கேட்கின்றார் ஆண் .அவளும் ஒரு நெட்கபேயின் அட்றெஸ் கொடுக்க அங்கு செல்கின்றார்.அங்கு தன்னை கபின் நம்பர் 5இல் சந்திக்குமாறு அவள் கூற அந்த ஆண் அங்கு சென்று கதவை ஓபின் செய்கின்றார் உள்ளே இருந்தது அவருடைய சகோதரி...
சட் செய்யும்போது யாருடன் சட் செய்கின்றோம் என்ற விழிப்புணர்வும் தேவை எதுக்கும் ஒன்றுக்கு 10 தடவைகள் சிந்திக்கவேண்டும்.பேக் ஐடிக்களின் தொல்லைகளுடன் இப்படியான பிரச்சனைகளையும் நாம் கவனமாகத்தான் கையாளவேண்டும்...என்னைக்கேட்டால் உங்களுக்கு நேரடியாகத்தெரிந்த பெண்ணைவேண்டுமானால் பேஸ்புக் வழியாக காதலிக்கலாம் அல்லாத யாரையும் காதலித்தால் அது பெண்தானா?அல்லது பேக் ஐ.டியா...அவளது படம்தான் ப்ரொபைல் பிக்ஸரில் உள்ளதா என்று பல விடயங்களில் சிக்கல் இருக்கின்றது.பேஸ்புக்கில் காதலித்த பெண்ணை நேரில் பார்த்ததும் தற்கொலை செய்துகொண்டவர்களும் இருக்கின்றார்கள்.எல்லாம் நம் கைகளில்தான் இருக்கின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக