என் நண்பன் என் முதல் எதிரி
எப்போதாவது உங்கள் நண்பருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டதுண்டா? இக்கருத்து மோதலின் பின் நண்பனை மீண்டும் சந்திக்கும் போது முன்பு இருந்ததை விட உங்களுக்குள் இடைவெளி சற்றுக்கூடியிருந்தது நினைவிருக்கின்றதா?சில நேரங்களில் முகத்தைக்கூட பார்ப்பதற்குக்கடினமாக இருந்திருக்கலாம்.இது உங்களுக்கு நடந்ததோ இல்லையோ தெரியாது ஆனால் எனக்கு நடந்தது. நம்முள் பல பேருக்கு நடந்திருகலாம்.
இளசுகளுக்கிடையில் குறிப்பாக ஆண்களுக்கென்று சில பொதுவான இயல்புகள் இருக்கின்றது. நெருக்கமான 4 நண்பர்கள் இருப்பார்கள் 2 வருட நட்பென்று வைத்துக்கொள்ளுங்களேன் வீட்டில் அம்மா கேட்பார் அவன்ர அப்பா என்ன வேலை?தெரியாது.அவன்ர அப்பான்ர சொந்த இடம் என்ன? தெரியாது. நம்ம கணேஸ் மாஸ்ரரிண்ட சொந்தமாம் அவை தெரியுமா? தெரியாது .ஏண்டா 2 வருசமா வீட்டுக்கு வந்துபோறான் இதுகூட தெரியாதென்னுறாய்? இதற்குப்பதில் இல்லை.
5 வருடம் ஆகியபின் ஓரளவு நண்பனின் குடும்பத்தினரது பெயர்கள்.வேலை நிலவரங்கள் தெரியவரும்.ஆனாலும் நண்பனின் தந்தை தாயின் சொந்தங்கள் எல்லாம் அவ்வளவாக தெரியவராது.காரணம் என்னவென்றா கேட்கின்றீர்கள்?மேலே சொன்னவையெல்லாம் ஒரு முக்கிய மேட்டரே இல்லை. அவன் என்னுடைய பிறண்ட் அவ்வளவுதான்.நட்பு இந்த லெவலுக்கு இருக்கும்.வீட்டிலிருந்து நண்பர்களைப்பார்க்க புறப்பட்டுவிட்டால் வீடு திரும்ப பல மணி நேரமாகும்.நண்பர்களுடன் கூத்தடித்துக்கதைக்கும்போது மாத்திரம் பூமி விரைவாக சுற்றிவிடும்.பெரும்பாலும் வீட்டில் இருந்துவரும் அம்மாவின் கோல்தான் நேரம் சென்றதை நினைவுபடுத்தும்.நண்பர் குழாமுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது யாராவது ஒருவனுக்கு கோல் வரும்போது தெரிந்துவிடும் நேரம் இரவு 10 ஆகிட்டுது அடுத்தது எனக்கு கோல் வரப்போகுது சரி புறப்படுவம்.
இவ்வளவு நேரமும் என்ன கதைத்தீர்கள் என்று கேட்டால் சுருக்கமாக கூறமுடியாமல் ஒன்றுமில்லை என்றபதிலுடன் உள்ளே சென்றுவிடுவோம்.ஏண்டா அவண்ட வீட்டுக்கு பக்கத்தில ஒரு வீட்டில் கல்யாணமாம் தெரியுமா?ஆங்க் தெரியாது அப்ப என்னதாண்டா உனக்குத்தெரியும்? அப்படி என்னத்தை இரவு பகலா கதைக்கிறாய்?
சரி அம்மாமார்கள் இவ்வளவு கேட்கின்றார்களே அப்படி எதைக்கதைக்கின்றார்கள்?
வீட்டில் இருக்கும் அம்மாக்கள் நினைப்பதைப்போல் ஆண்கள் அடுத்த வீட்டுக்கல்யாணம்,அப்பாக்களின் சொந்தம் அவன் என்ன வேலைபார்க்கின்றான்,இவருக்கு பொண்ணுபாக்கிறாங்களாம்,கோவில்ல விஸேஸமாம் என்ற கதைகள் எல்லாம் இருக்காது.ஆண்கள் கூடிக்கதைக்கும்போது அங்கு ஊர்விடயங்கள் சொந்தங்களின் விடயங்கள் எல்லாம் இருக்காது.ஊரிற்குள் ஏதாவது அடிதடி அல்லது யாரவது ஓடிவிட்டால் ஊர் விடயங்கள் வரலாம்.அவர்கள் கதைக்கும் மேட்டர்கள் எல்லாம் உலக லெவலில் இருக்கும். ஒபாமா,ரொம்னி மோதல்,இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம்,கஸாப் தூக்கு சரியா தவறா?மாயாவதி என்ன செய்கின்றார்?,பின்லேடன் கொலை மர்மம்,ஹிட்லர் நாம் நினைப்பதைப்போல் தற்கொலை செய்யவில்லை,உலகம் அழியப்போகின்றதா,ஸ்பேஸ் ஸட்டில் திரு நள்ளாறுக்கு மேல் நிற்கின்றதா?விக்கிலிக்ஸைப்பற்றி இப்போது ஏன் செய்திகள் வருவதில்லை,ரஸ்யா என்ன செய்துக்கொண்டிருக்கின்றது.உலக லெவலில் தீரிக்கப்படமுடியாத பல பிரச்சனைகளுக்கு விவாதங்களுடன் கூடிய தீர்ப்புவழங்குமிடமாகத்தான் அந்த இடம் இருக்கும். ஆனால் அப்படி ஆரம்பிக்கும் விடயங்கள் வந்து முடியும் இடம் சினிமா.
அவளவு நேரமும் நண்பர்குழுவில் எவர் எந்தப்பக்கம் சாய்ந்தாலும் அவர் சாய்ந்த பக்கம் தரைமட்டமாகும்போது கூட அட இது தெரியாமப்போச்சே அல்லது வட போச்சே என்று தோமே என்று விடுபட்ட விடயங்கள் எல்லாம் சினிமா என்ற சப்ரர் வந்ததும் எடுபடாது.
தலைவன்ர படம் எப்படி ஓடிச்செண்டு பாக்கலயா?
ஆமா ஆமா சனம் எப்படி ஓடிச்செண்டு நாம பாக்கிறம்தானே?என்பதில் மோதல் ஆரம்பிக்கும்.யாருக்கு அதிக ரசிகர்கள்?யாருடைய படம் அதிக நாள் ஓடியிருக்கின்றது?2 ஹீரோக்களின் தோல்விப்படங்கள் எத்தனை வெற்றிபப்டங்கள் எத்தனை?யாருக்கு அதிக சம்பளம்? முன்பொரு நாள் ஹீரோவைப்பற்ரிக்கூறிய விடயங்கள் பிழைத்திருக்கும் இவையெல்லாம் மீண்டும் குறிப்பிடப்பட்டு பலத்த வாய்ச்சண்டை.நானும் இதற்கு விதிவிலக்கல்ல இப்படி தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றேன்.இப்போது ஓரளவு தெளிந்துவிட்டேன்.
இப்படியான விவாதத்தில் ஈடுபடுபவர்கள் தம் மானந்தான் விவாதத்தில் பகடைக்காய் ஆக்கப்பட்டுள்ளது என்று உணர்கின்றார்கள்.தன் தலைவனைப்பற்றிய கருத்துக்கள் தோற்றால் அல்லது ஏனைய விடயங்கள் முன் அது சாதாரணவிடயம் ஆக்கப்பட்டால் தாம் தோற்கடிக்கப்படுகின்றோம் என்ற இலூஸன் ஏற்பட்டுவிடுகின்றது.இதன் காரணமாக எதிர்விவாதம் செய்பவரை எதிரியாக பார்க்கும் மனோ நிலை ஏற்பட்டுவிடுகின்றது இறுதியில் எதிரியாகவே ஆக்கிவிடுகின்றது இந்த முரண்பாடு.இதன் உச்சக்கட்ட வெளிப்படுத்தல்கள்தான் விஜய்,அஜித்,ரஜனி போன்றவர்கள் பற்றிக்கருத்துக்கூறுபவர்களை அடித்தல் துன்புறத்தல்கள் நடைபெறுதல்களுக்குக்காரணம்.பேஸ்புக் முகந்தெரியாத பல நண்பர்களை உருவாக்கித்தருகின்றது.ஆனால் எதிரிகளையும் உருவாக்கித்தருகின்றது.அண்மையில் ஒரு சம்பவம் நடந்தது.பேஸ்புக்கில் ஒருவர் பேஜ் ஒன்றை ஆரம்பித்தார் ஐ கேட் விஜய் என்ற பேஜ்.இது விஜய் பான்ஸுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்த அவரைத்தேடிப்பிடித்து நடி ரோட்டில் வைத்து அடித்து அதை போட்டோ எடுத்துவைத்திருந்தார்கள்.பின்னர் நடந்ததை பேஸ்புக்கில் ஸ்ரேட்டஸ்ஸாக போட்டு டோய் நீ அடிவாங்கும்போது கும்பிட்ட போட்டோவை போடவா?என்று கேட்க அய்யோ அண்ணை என்னை விட்டுடுங்க என்று அவர் பப்பிளிக்காக கெஞ்சும் நிலை ஏற்பட்டிருந்தது.காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் இதுதான்.இவ்வாறானவர்களிடம் நீங்கள் சென்று புத்திகூறினால் அதைவிட முட்டாள்தனம் உலகத்திலேயே இருக்கமுடியாது.இதில் கொடுமை என்ன்வென்றால் அடித்தவரையும் அடி வாங்கியவரையும் இணைத்த கைங்கரியத்தை செய்தது பேஸ்புக்தான்.முகந்தெரியாத எதிரிகள் உருவாகின்றார்கள் என்றால் கூடவே 4,5 வருடம் நண்பர்களாக இருப்பவர்களுக்கிடையேயும் இப்படியான மோதல்களை சாதாரணமாகவே உருவாக்கிவிடுகின்றது சினிமா.
சினிமா தொடர்பான விவாதத்தில் ஒருவரது ரசிப்புத்திறன்,நொலேஜ் விவாதத்தில் ஈடுபடும் ஏனையோரைவிட சற்று அதிகமாக இருந்தால் ஏனையோரது தரம் குறைவான ரசனையை காரணம் காட்டி அவர்களை முட்டாளாக்கிவிடுவார்.
ஒருவரது ரசிப்புத்திறனை அலசி அவரை முட்டாள் ஆக்குவது அவ்வளவு யோக்கியமான விடயம் இல்லை.மேலேவா என்று கையைப்பிடித்து மேலே இழுக்கமுடியும்.ஆனால் நீ முட்டாள் என குத்திக்காட்டுதல் தவறான விடயம்தான்.சிலரது மூளைகளின் வேர்ஸன் சிலவற்றை ஏற்றுக்கொள்ளும்.சிலரது வேர்ஸனுக்கு சில விடயங்களை ஏற்றுக்கொள்ளல் மிகக்கடினம் அந்த கருத்தின் தளத்திற்கே அவர்களால் கற்பனைக்குக்கூட பயணிக்கமுடியாது.சிலருக்கு போதுமான கப்பாசிட்டி இருந்தும் மேலே வர விரும்புவதில்லை.
சினிமா தொடர்பான கருத்துவேறுபாடுகள் நெருக்கமான இரு நண்பர்களுக்கிடையில் நடைபெறும்போது ஏதாவது ஒரு நிலையில் இருவருக்கும் மட்டும் தெரிந்த இரசியம் பலர் முன்னிலையில் உடைந்துவிடும்.இது மறக்கமுடியாத ஒரு வலையை ஏற்படுத்திவிடுவதுடன் இருவருக்குமிடையேயான உறவை நிரந்தரமாக முறிப்பதற்கும் வழிவகுப்பதாக அமைந்துவிடுகின்றது.அட கோபத்தில் சொல்லிவிட்டேனே என்று மன்னிப்புக்கேட்டும் பயனில்லை சொன்னது சொன்னதுதான் மாறாத காயம் ஆகிவிடும்.
இளைஞர்கள் தமக்குள் மோதிக்கொள்ளும் முக்கியமான முதலாவது விடயம் காதல்.ஒருவன் காதலிக்கும் பெண்ணை இன்னொருவன் காதலித்தால் பிரச்சனை தொடங்கிவிடும்.அதுவும் பெண்கள் இருக்கிறார்களே சில வேளைகளில் இருவருக்குமே பொஸிட்டிவ் ரியாக்ஸன் கொடுத்துவிடுவார்கள் அப்படி ரியாக்ஸன் கொடுத்துவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள் இங்கே ஒரு ரெஸ்லிங்கே நடக்கும்.
ஆனால் நண்பர்களுக்கிடையில் இவ்விடயம் நடந்தால் ஒருவன் ஒரு பெண்ணை 1 வருடமாக காதலிக்கின்றான்.மற்றவர் 3 வருடமாக காதலிக்கின்றார்,விடயம் இருவருக்கும் தெரிந்துவிடுகின்றது.உடனே இருவருக்குமிடையில் அவரவர் நண்பர்கள் சமாதானத்தூது செல்வார்கள் பேச்சுவார்த்தைகள் நடக்கும் விசாரணைகள் நடக்கும்.சின்சியரா லவ் பண்ணுறானா விசாரனைகள்.சகலவற்றை விட ஒரு விடயம் முக்கியமாகக்கவனிக்கப்படும் அந்தப்பெண் யாரைவிரும்புகின்றாள்?.இவ்வளவும் சரிவந்துவிட்டால் உடனே விட்டுக்கொடுத்துவிடுவான்.அந்தப்பெண் வீதியால் செல்லும்போது "அண்ணி' என்று கிண்டல் செய்துவிட்டும் செல்வான். நெருங்கிய நண்பர்களுக்கிடையில் இவ்வாறு நடக்க வாய்ப்புக்கள் மிகக்குறைவு ஏனென்றால் அழகாக இருக்கும் யாரையாவது பார்த்துவிட்டாலே போன் செய்து அந்தப்பெண்பற்றி கொமண்ட் அடிப்பார்கள் என்றால் காதலித்தார் விடுவார்களா? ஆனால் அதையும் மீறி இறுதிக்கட்டத்தில்தான் இருவரும் ஒரே பெண்ணைத்தான் காதலிக்கின்றோம் என தெரிந்துவிட்டால்.முதலில் அந்த விடயத்தை அறிந்தவன் அடடே இதை அவனிடம் கூறியிருந்தால் துரோகியாகியிருப்பேனே என்று அனைத்தையும் அத்துடன் முடித்துக்கொள்ளத்தான் அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது.
நாம் நாகரீகமடைவதற்கு முன்னர் குரங்காக இருந்த காலத்தில் இருந்து எமது ஜீனில் தொடர்ந்துவந்துகொண்டிருக்கும் பெண்களுக்காக மோதிக்கொள்ளும்,பெண்களுக்காக போட்டியிடும் அந்த விடயத்தையே எமது பரம்பரை அலகில் பதிந்த அந்த விடயத்தையே எம்மால் பகுத்தறிவின் துணையுடன் வெற்றிகொள்ள முடிகின்றது.ஆனால் சினிமா தொடர்பான விடயங்களில் மட்டும் எமது அறிவு தோற்றுவிடுகின்றது.சினிமா நம்மை எவ்வளவு முட்டாள் ஆக்குகின்றது என்பதை இதிலிருந்து தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
ஒரு நாள் உங்களது நண்பனுடன் சினிமா தொடர்பாக கருத்துமோதலில் ஈடுபட்டுவிட்டு வீடு சென்றால் அன்று இரவு பேஸ்புக்கில் அவன் இடும் ஸ்ரேட்டஸ்ஸை லைக் செய்யக்கூட மனம் வராது.அவன் மீது அவ்வளவு கோபம்.அன்று எனது நண்பன்தான் எனது முதல் எதிரி.மோதல் கோபம் எல்லாவற்றையும் மறந்து அடுத்த நாள் அவனது முகத்தை நேரே பார்ப்பதற்கு சற்று சங்கடமாக இருக்கும். பின்புற மண்டையில் கருத்துமோதல்களின் குரல் எதிரொலித்துக்கொண்டிருக்கும்.உங்கள் இருவருக்குமிடையேயான இடைவெளி சற்றுக்கூடியிருக்கும்.உங்களது நண்பன் தனக்குத்தெரிந்த நண்பர் ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் நாளில் அவருடன் என்ன பேசுவது என்று தெரியாத சங்கட நிலையை நீங்கள் இங்கே உணரவேண்டியிருக்கும்.
எதற்காக நட்பை விட ஒரு விடயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?இருவருக்குமிடையேயான நட்புடன் ஒப்பிடுகையில் ரஜனி,கமல்,சூரியா,அஜித்,விஜய் எல்லாம் வெறும் தூசிதான் என்பதை ஏன் புரிந்துகொள்ளமறுக்கின்றார்கள்?சிலர் ஒரு படி மேலே போய் தலைவா என்று விழிப்பதுடன்.அவர்கள் தலைவர் என கருதும் மகான்கள் பற்றி நண்பர்கள் ஏதாவது கருத்துக்கூறினால் அவனது குடும்பத்தைக்கூட இழுத்துக்கதைக்கின்றார்கள்.
இவர்கள் தலைவா என விழித்துக்கூறும் ரஜனி,கமல்,விஜய்,அஜித் போன்ற ஏனைய நடிகர்கள் எந்தவிதத்திலும் இவர்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவப்போவதில்லை.எந்த உதவியையும் செய்யப்போவதுமில்லை.தலைவா எனக்கொடிபிடிப்பவர்களை யார் என்றும் தலைவருக்கு தெரியப்போவதுமில்லை.சகலரும் சுய நலவாதிகளேதவிர நாட்டிற்கு தன் நலம் பார்க்காது உழைக்கும் தியாகிகள் இல்லை.காரணம் நாம் தலைவா என விழிக்கும் சூப்பர் ஹியூமன்ஸ் அல்ல அவர்கள். அவர்களும் குடும்பம் குழந்தை குட்டி என வாழும் சராசரி மனிதர்கள்தான்.அவர்களது வருமானம் கோடிக்கணக்கில் இருக்கும் ஆனால் உதவி செய்வது இலட்சக்கணக்கில்தான் அல்லது ஆயிரக்கணக்கில் தானே புயல்,சிவகாசி வெடிவிபத்து என்று சில விடயங்களை அலசினாலே போதும்.சிலர் சில கருத்துக்களை முன் வைக்கின்றார்கள்.அதென்ன ஒரு அனர்த்தம் நிகழ்ந்தால் அல்லது யாருக்காவது உதவி செய்யவேண்டுமென்றால் அந்த நடிகர் உதவி செய்யவில்லை இந்த நடிகர் உதவி செய்யவில்லை என்று கூவுகின்றீர்கள்.அவர்கள் உழைக்கும் பணம் அவர்கள் நினைத்தால் உதவி செய்யலாம்.வீணாக அவர்களை உதவி செய்யும்படி திணிக்கக்கூடாது.உதவி செய்யாவிட்டால் கெட்டவர்கள் என்று பெயர் வந்துவிடும் என்ற காரணத்திற்காகவே நடிகர்கள் சிறுதொகைப்பணத்தைக்கூட கொடுக்கின்றார்கள்.என்கிறார்கள்.
பிரச்சனை என்னவென்றால் தமது ஒவ்வொரு படங்களிலும் ஆபத்தாந்தவனாக தம்மை அறிவித்துக்கொள்பவர்கள் நடிகர்கள்தான்.அவ்வாறான சினிமா ஹீரோயிசத்தை நம்பும் ரசிகன்தான் தலைவா என அழைக்கின்றான்.தலைவா என்ற வார்த்தை அதற்கே உரிய உணர்வுகளுடன் வெளிப்படும்போதுதான் பால் ஊற்றுதல்,தேங்காய் உடைத்தல் காவடி எடுத்தல் போன்றவற்றிற்கு ரசிகரை எடுத்து செல்கின்றது.அப்படி உன்னை மானசீகமாக தலைவா என்று அழைக்கும் ரசிகர்களுக்கு மற்ற மனித ஜென்மங்கள் சராசரி குடும்பத்தவன் கூட மனமிரங்கி உதவி செய்யும் சந்தர்ப்பத்தில் கூட ஒரு நடிகனும் உதவி செய்யாவிடில் அவரை என்னவென்று சொல்வது.ஆனால் அவ்வாறான நேரங்களிலும் ஒரு உதவியும் செய்யாமல் அதைப்பற்றி மூச்சே விடாமல் ரசிகர்களை நீ முட்டாள் என அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.இப்படியானவர்களுகாக வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் எமக்கு குறுக்கேவராதவர்களுக்காக எமக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்களை ஏன் நாம் விட்டுக்கொடுக்கவேண்டும்?
நாம் நாளைய தினமே வீதியில் விபத்துக்குள்ளாகி நாதியற்றுக்கிடந்தால் சாப்பிட்ட குறையில் கை கழுவாது ஓடிவருபவன் எனது நண்பன்தான்.எனது வீட்டில் யாராவது மரணமடைந்துவிட்டால் இரவு பகல் வீட்டில் நின்று உதவி செய்வது எமது நண்பர்கள்தான்.வீட்டில் திருமணம் நடைபெற்றாலும் வாழை கட்டுவதுமுதல் பல வேலைகளை செய்வது எமது நண்பர்கள்தான்.எல்லாவற்றையும் விட காதல் தோல்வியை வீட்டிலும் சொல்லமுடியாமல் எமக்குள்ளேயே மறைக்கவும் முடியாமல் அல்லாடும்போது ஓ என்று கட்டிப்பிடித்து கதறி அழுவதற்கும் நண்பர்கள்தான் தேவை.ஒருவன் உங்களுக்கு அடித்துவிட்டால் உங்களில்தான் தவறு என்றால் கூட உங்களுக்காக சப்போர்ட் செய்வது உங்களது நண்பர்கள்தான்.நீங்கள் வீடு செல்வதற்கு பிந்திவிட்டால் உங்கள் அம்மாவிடமிருந்து முதலாவது தொலைபேசி அழைப்பு உங்களுக்கு உங்கள் அம்மா அடுத்ததாக தொலைபேசியில் அழைக்கும் நபர் உங்கள் நெருக்கமான நண்பராகத்தான் இருக்கும்.
இப்படி எனது/எமது வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் முழுமையாக எமக்கு உதவி செய்யும் எமக்காகவே பல விடயங்களை செய்யும் நண்பனுக்கு கொடுக்காத அந்த புண்ணாக்கு ம### டாஸ் மரியாதையை நான் எதற்காக ஒரு நடிகருக்குகொடுக்கவேண்டும்?
எனதுநண்பன்,ரஜனியைப்பற்றியோ,கமலைப்பற்றியோ,விஜயைப்பற்றியோ,அஜித்தைப்பற்றியோ எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானாலும் பேசலாம்.அவன் கீழ்த்தரமாக பேசும் நடிகனுக்கு நான் ரசிகனாக இருக்கலாம்.ஆனால் அவர்கள் அனைவரையும் விட எனக்கு மிகவும் முக்கியமானவன் அவன் காரணம் அவன் எனது "நண்பன்".நடிகர்கள் கீழே விழுந்தால் அவர்களை நிமிர்த்துவதற்கு பலர் இருக்கின்றார்கள்,அவர்களது தகப்பனார் அவரது குடும்பம் அது இதென்று ஒரு கூட்டமே இருக்கும்.நீங்கள் விழுந்தால் எழும்புவதற்கு உங்கள் நண்பன்தான் தேவை.
ரசிகனுக்கும் வெறியனுக்கும் வித்தியாசம் இருக்கின்றது.ஐ மீன் ஹார்ட் கோர் ரசிகர்கள்.எந்த விடயத்திலாவது அளவுக்கதிகமான வெறி இருத்தல் ஒரு மனோ வியாதி அதை மேனியா என்று அழைப்பார்கள்.அது ஒரு மதிக்கத்தக்க தனித்துவமான குவாலிபிக்கேஸன் அல்ல.எனக்கு மன நிலை சரியில்லை என்று அனைவர் முன்பு ஒத்துக்கொள்வதும் நான் டை ஹார்ட் பான் என்பதும் ஒன்றுதான்.

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே

கருத்துகள்
கருத்துரையிடுக