உலக அழிவு திரைப்படங்கள்

உலகம் அழிந்துவிடுமோ என்ற பயம் சகலருக்கும் இருக்கின்றது.சாதாரணமாக சாஸ்திரங்களை நொஸ்ரடாமஸ்ஸின் எதிர்வுகூறல்களை  நம்பாதவர்களைக்கூட விஞ்ஞான ரீதியான அழிவு பற்றிய அனுகூலங்களை அறியும்போது கலங்கிவிடுவார்கள்.பொதுவாக உலக அழிவுபற்றிய திரைப்படங்கள் ஏலியன்கள் வந்து உலகத்தை அழித்துவிடுவார்கள் சில படங்களில் அழிக்கவரும் அவ் ஏலியன்தான் பூமியில் உயிர்கள் உருவாக அனுமதித்தவர்களாக சித்திகரிக்கப்படுவார்கள் ,விண்கற்கள் மோதுவதால் உலகம் அழிதல் போன்றவையும் காட்டப்படும்.இவைகூட உலகம் அழிந்துவிடுமோ என்கின்ற பயத்தை,எண்ணத்தை அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்துகின்றன/பயத்தை ஏற்படுத்துகின்றன.2012 திரைப்படத்திற்கு பின் இணையத்தில் உலக அழிவுபற்றிய விடயங்கள் போதுமான அளவிற்கு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.அந்தப்படத்தின் பின்னர் அழிந்துவிடுவோமோ என்ற பயமும் அதிகரித்துள்ளது.சில இணையத்தளங்கள் உலகம் அழிவதற்கான காரணங்களுடன் ஒரு படி மேலே போய் உலகம் 2012.12.21 இல் அழியப்போகின்றது என்று டேட்டையும் போட்டு ஏதோ ரொக்கற் புறப்பட ஆயத்தம் செய்வதுபோல் ரைமையும் ஓடவிட்டிருக்கின்றார்கள்.என்ன ஒரு வில்லத்தனம்.
இவர்கள் எல்லாம் 2012.12.22 இல் மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கப்போகின்றார்களோ தெரியவில்லை.

உலக அழிவுபற்றிய பதிவுக்கு இங்கே கிளிக்

2012 என்ற ஹொலிவூட் திரைப்படத்தை 2013 இல் பார்க்கும்போது அது ஒரு காமடிப்படமாக தெரியலாம்.ஆனால் உண்மை என்னவெனில் உலகம் என்றாவது ஒரு நாள் அழிந்தால் அந்த அழிவு அப்படத்தில் காட்டப்படது போன்றோ அல்லது அதைவிட மோசமாகவோ கூட நடைபெறலாம்.எனவே 2012 திரைப்படம் தொடந்தும் மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வேலையை  செய்துகொண்டுதான் இருக்கப்போகின்றது.2012 திரைப்படம் அழிவுகளை நம்பக்கூடிய அளவு பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.வெளியிடப்பட்டதும் அண்மையில்தான் அதனால்தான் உலக அழிவு என்றதும் அந்தப்படத்தின் நினைவுவருகின்றது ஆனால் இதுவரை பல உலக அழிவைப்பற்றிய ஹொலிவூட் படங்கள் வெளிவந்துவிட்டன.வந்த அனைத்துப்படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது.அனைத்துப்படங்களிலும் உலக அழிவால் முதலில் பாதிக்கப்படும்  நாடு அமெரிக்காவாகத்தான் இருக்கும், நகரம் நியூயோர்க்காக இருக்கும்.ஒட்டு மொத்த உலகத்தையும் காப்பாற்றும் ஹீரோவாக ஆபத்தாண்டவனாக அமெரிக்க இராணுவம் வந்துவிடும். நான் தான் உலகைக்காப்பாற்றும் ஹீரோ என்பதை மறைமுகமாக கூவுகின்றது பேரிக்கா..சாரி....அமெரிக்கா..

1950 க்கு முன்னர் 4 படங்கள் வந்துள்ளன.சோ 1950 இல் இருந்து படங்களின் வரிசை ஆரம்பிக்கின்றது.2000இல் இருந்து 2009 வரை 55 படங்கள் வெளிவந்துள்ளன.முழு லிஸ்ரையும் அவதானிக்க இங்கே கிளிக். இந்த லிஸ்டில் உள்ள சகல படங்களுமே அப்படியே உலகம் ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் படங்களைக்குறிப்பவை அல்ல.மனித இனம் மட்டும் அழிந்துபோகும் படங்களும் உள்ளடக்கம் உதாரணம்..ரெஸிடென்ற் ஈவில்.

இதுவரை  நான் பார்த்து ரசித்த உலக அழிவுபற்றிய படங்கள்...

நிக்கலஸ் கேஜ் நடித்த திரைப்படம்.படத்தைப்பார்த்தால் தலை சுற்றும் அந்த அளவிற்கு படத்துல்  பல ருவிஸ்ட்கள் இருக்கின்றன.இறுதியில் உலகம் எப்படி சூரியப்புயலால் அழிகின்றது என்று காட்டியிருப்பார்கள்.உலக அழிவுபற்றிய சாத்தியங்களைக்கூறும் ஏனைய காரணிகள் பல இருந்தாலும் சூரியப்புயலால் ஏற்படும் அழிவுக்கு ஒரு நாளே போதுமானது. திரைபப்டத்தின் லிங்க்

அழிவு இப்படித்தான் இருக்கும்..




மற்றிக்ஸ் ஹீரோ keanu reeves  ஏலியனாக நடித்திருந்தார்...ஒரு ஏலியன் உடலைக்கண்டுபிடிக்கின்றார்கள்.அது உடனடியாக மனிதனாக மாறிவிடுகின்றது.பூமியைப்பாதுகாக்கவேண்டுமானால் மனிதர்களை அழிக்கவேண்டும் என்ற நோக்கமாக ஏலியன் பூமிக்குவந்திருந்தது..

Polygraph Operator: I'm going to ask you a series of control questions. Are you currently in a seated position? 
Klaatu: Yes. 
Polygraph Operator: Are you human? 
Klaatu: My body is. 
Polygraph Operator: Do you feel pain? 
Klaatu: My body does. 

Regina Jackson: What is your purpose in coming here? 
Klaatu: There is a gathering of world leaders not far from here; I will explain my purpose to them. 
Regina Jackson: I'm afraid thats not possible. Perhaps you should explain yourself to me instead. 
Klaatu: Do you speak for the entire human race? 
Regina Jackson: I speak for the President of the United States. Now, please; tell me why have you come to our planet. 
Klaatu: *Your* planet. 
Regina Jackson: Yes; this is our planet. 
Klaatu: No, it is not. 


The Day After Tomorrow



 global warming இனால் அண்டாட்டிக்காவில் பனி உருகத்தொடங்குகின்றது.ஜாக் கிளைமேட் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்.அவர் பனி உருகுவதால் பூமியின் கிளைமேட் மாறுதல் தொடர்பாக ஒரு தியரியைக்கூறுகின்றார்.உலக வெப்பமயமாதலின் நீண்டகால விளைவால் ஏற்படப்போகும் மாற்றம் தொடர்பான விதிதான் அது.ஆனால் உடனேயே அந்த மாற்றம் நிகழ்ந்துவிடுகின்றது.கால நிலையில் சடுதியான மாற்றம் ஏற்படுகின்றது.மிகப்பெரிய புயலின் தாக்கம் தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது.

Independence Day


வில் சிமித் இதில் நடித்திருக்கின்றார்.கதை வழக்கமான கதைத்தான் ஏலியன்கள் பூமியைத்தாக்குகின்றன.அதிலிருந்து மனிதர்கள் எப்படித்தப்பிக்கின்றார்கள்? என்பதுதான் கதை.




war of the worlds


ஹீரோ ரொம் குருஸ்.ஏலியன் அட்டாக் கதைதான்.ஆனால் வழக்கமாக ஏலியன்கள் வேறு கலக்ஸிகள் கிரகங்களில் இருந்துவரும்.ஆனால் இந்தப்படத்தில் ஏலியன் பூமிக்குள் இருந்தே வருகின்றது.ஏலியனுடனான போரில் மனிதர்கள் தோற்றுவிடுகின்றார்கள்.இறுதியில் மனிதனைக்காப்பாற்றியது.பக்ரீரியாக்கள்தான். படம் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும்.வழக்கமான சில ஏலியன் கதைகள்போல் ஏலியங்களைப்பார்த்தவிடன் தோன்றும் கேலிச்சித்திர  எண்ணங்கள் இதைப்பார்க்கும்போது ஏற்படாது என்று நம்புகின்றேன்.




Deep Impact


1998 இல் வெளிவந்த திரைப்படம் இது.2012 படம்வருவதற்கு முன்னர் உலக அழிவை மிக மோசமாக இப்படத்தில்தான் பார்த்தேன்.விண்கல் பூமியின் மீது மோதி அழிவை உண்டாக்குகின்றது.



2012

அறிமுகம் தேவையற்ற திரைப்படம் இது.உலக அழிவைக்காட்டுவதைத்தவிர்த்து இப்படத்தில் நாம் கவனிக்கவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.தப்பிப்போவதற்கென உருவாக்கப்பட்ட ஸிப்களுக்கு விலை பேசப்படுகின்றது.ஒரே வரியில் சொன்னால் பணக்காரன் வாழ்வான் ஏழை அழிவான்.உயிரின் விலை எவ்வளவு என்பது இப்படியான தருணத்தில் வெளிப்பட்டுவிடும்"உயிர் விலைமதிப்பில்லாதது" என்பார்களே உண்மைதான் இந்த சிற்றிவேஸன் வந்தால் இவர்கள் ஒரு உயிருக்கு கூறும் விலை சாதாரண மக்களுக்கு  விலைமதிப்பல்லாததுதான்...

தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

முஸ்லிமை கொல்லும் முஸ்லிம்? ~ விஸ்வரூபம் விமர்சனம்.

தமிழன் பெருமை - பல்புகள் :)