இன்று (29 ஓகஸ்ட் ) மைக்கேல் ஜாக்சனின் பிறந்தநாள் . அவரைப்பற்றி தெரியாதவர்களே இல்லை என்பதால் இங்கே பிறந்தார் , இங்கே வளர்ந்தார் , இங்கே வெள்ளையானார் , அங்கே முஸ்லிமானார் என்பதுபோன்ற தகவல்கள் வெறுத்துப்போயிருக்கும் என்பதால் அதை தள்ளிவிடுவோம். தான் வாழும் காலத்தில் அத்தனை புகழையும் , அத்தனை பணத்தையும் , அத்தனை கெட்டபெயரையும் , அத்தனை நல்லபெயரையும் சம்பாதித்தவர்கள் உண்டா , தெரியவில்லை. இறப்பதற்கு முன் கணம்வரை சர்ச்சைகளில் நீந்தியே வாழ்ந்தவர் , அவரது இறப்புக்கூட ஒரு சர்ச்சைதான் என்பது வேறுகதை. தனது தந்தை முதல் தனது பிறப்புமுதல் அவர் சமாளித்த துன்பங்கள் ஏராளம். ‘ கஷ்டத்தைக்கூட சாதகமா க்கியவர்கள் மத்தியில் தனக்குவந்த குஷ்டத்தைக்கூட சாதகமாகியவர் ’ என்கிற பஞ்சு டயலாக் அவரைப்பற்றி எழாதது ஆச்சரியமே. (வீட்டிலிகோ என்கிற வெண்குஷ்ட வியாதியை சாட்டாக வைத்து வெள்ளையனாக மாறினாரே , அதை சொல்லுகிறேன். ) bubbles என்கிற இந்த குரங்கை தனது மகனைப்போல வளர்த்தார். மனிதர்கள் போல வாழ மட்டுமன்றி, தன்னைப்போல ஆடவும் சொல்லிக்கொடுத்தார். மூன்வாக் கூட செய்யக்கூடிய குரங்கு, இது... (ஒரு கான்சர் ...
கருத்துகள்
கருத்துரையிடுக