விஸ்வரூபம் - சூரியன் பார்த்து குரைக்கும் நாய்கள்...
எந்த நேரத்தில் படத்துக்கு விஸ்வரூபம் என்று கமல் பெயர் வைத்தாரோ தெரியவில்லை, படம் தொடர்பான பிரச்சனைகள் இத்தனை விஸ்வரூபம் எடுத்து அவரையும், அவர் அல்லது அவர் சார்ந்தது சார்பானவர்களையும் குடைந்து வருகிறது. முதலில் அது தொடர்பான பிரச்சனைகள் எழுந்து, தான் தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து முதலிட்டு எடுத்த படம் கையை சுட்டுவிட்டால் என்ன பண்ணுவது என்று பயந்ததால் டி டி ஹெச் முறையில் தொலைக்கட்சிகளில் படத்தை ரிலீஸ் திகதிக்கு முன் இரவில் ஒளிபரப்ப திட்டமிட்டு, அதனால் வந்த பிரச்சனைகளை தாண்டி வந்தபிறகும், இந்த முஸ்லிம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தங்களை புண்படுத்துவதாக கமல் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் ஏதாவது ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்குவது சாதாரணமாகி விட்டது. என்னய்யா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? கலை, கலைஞன் என்பதெல்லாம் காட்டாறு மாதிரி. அப்படித்தான் இருக்கும். எங்களால் தாங்க முடியாவிட்டால் ஒதுங்கிப் போய்விட வேண்டியதுதான். என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது? உங்கள் விருப்பத்துக்குத்தான் படம் எடுக்க வேண்டுமா ஒரு மகா கலைஞன்? பணத்துக்காக பெண்களது அங்கங்களை கா