தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும் - 2


மனிதாபிமானம்.

யாரோ ஒரு குழந்தைக்கு முகத்தில் ஒப்பிரேசன் செய்ய வேண்டுமாம், அதுக்காக போட்டோவை ஷெயார் செய்!, ஆபிரிக்காவில் குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள், எனவே நீ இங்கே சோறு சாப்பிடாதே! இப்படியாக மனிதாபிமான மாமணிகளின் ஷேயார்கள் உங்களையும் கடுப்பாக்கி இருக்கக் கூடும். மனிதாபிமானத்தை வெளிப்படுத்த ஒரே வழி, செயற்படுவதுதான். சொல்லிக் கொண்டிருப்பது இல்லை. இவற்றை ஷெயார் பண்ணினால் சட் பண்ணும் பெண்கள் வேண்டுமானால் அவர்களை மகாத்மாவாக பார்க்கலாம், ஆனால் மில்லியன் ஷேயார்கள் வந்தாலும் அங்கெ ஒரு குழந்தைக்குக் கூட காய்ந்த ரோட்டி கிடைக்கப் போவதில்லை. இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? பசிப்பிணியை போக்குவதற்கு ஒரு தளம் நடத்துகிறார்கள். அந்தத் தளத்தின் விளம்பர வருமானமானது பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுகிறது. அப்படி ஒரு தளத்தை பேஸ்புக்கில் ஷெயார் பண்ணிப் பார்த்தேன். அதற்கு ஷெயார் ஏன், லைக் கூட கிடைக்கவில்லை. உண்மையாக அக்கறை உள்ளவன் ஷெயார் பண்ணி அல்லவா இருக்க வேண்டும்? இப்படி இருக்கிறது நிலைமை.



இதுதான் நிலைமை.
சிறுமி சாகக் கிடக்கிறாள். ஷெயார் பண்ணுகிறார்கள். ஏன் தெரியுமா???
டாக்குத்தர் இப்படி காத்திருக்கிறாராம்...


 இதைவிடக் கொடுமை என்ன என்றால், கான்சரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவுகிறார்களாம். கான்சர் என்பது ராசிபலனில் (கான்சர் என்பது கடகராசி.) மட்டுமே இருக்கவேண்டுமாம். அதாவது கான்சரை ஒழிக்கப் போகிறார்களாம். என்ன சொல்ல? கான்சர் என்ன, சிலாக்கி மலாக்கியால் வரும் எய்ட்சா, அல்லது வள்ளு வதக்கென்று தின்றால் வரும் வியாதியா, ஒழிக்க? கான்சர் என்பது ஒழிக்கக் கூடிய வியாதி என்பதே தெரியாமல், அதை எப்படி ஒழிக்கப் போகிறார்கள்?

தங்களை மனிதாபிமானர்களாக, இரக்க சீலர்களாக காட்டும் பதிவுகள் ஏராளம். அண்மைய சூப்பர் சிங்கரில் தனது அழகை காட்டியே பிழைத்த சிறுமி, தனது பேஸ்புக் தளத்தில் குழந்தைளுக்கு இனிப்பு கொடுத்த படத்தை அடிக்கடி கவராக விடுகிறார். என்ன சொல்ல வருகிறார்கள் இந்த இரக்க சீலர்கள்? கொடுப்பது தாங்கள்தான் என்பது வாங்குபவர்களுக்கே தெரியாமல் கொடுப்பவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள், அவர்கள் இருக்கும்போதே இவ்வாறு செய்ய வெட்கமாக இருக்காதா? இதனை எனது முகப்புத்தகத்தில் எழுதும் போதெல்லாம் என்னிடம் ஒரு கேள்வி கேட்பார்கள். நீ என்ன பெரிதாக கொடுத்து கிழித்தாய்? என்று.. நான் கொடுத்ததாகவோ, இரக்க சீலனாகவோ எப்போதுமே காட்டிக் கொண்டதில்லை, யாருக்கும் இரக்கப் பட்டதும் இல்லை. சிம்பிள்.


குடும்பம்

எதோ மற்றவன் எல்லோரும் குடித்துவிட்டு தாயை உதைப்பவன் போலவும், தாங்கள் மட்டும் குடியிருந்த கோயில் எம் ஜி ஆர் கணக்காக அம்மாவை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் போலவும், ஹிட் லைக் இப் யூ லவ் யுவர் மாம் என பதிவுகள் வருமே, கடுப்பாகும். அதுவும் அன்னையர் தினம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். இதேபோலத்தான் தந்தையர் தினம், அக்காக்கள் தினம் என நீளுகிறது பட்டியல்.
நெட் கொஞ்சம் சிலோவாகி, நீ 3 செக்கனில் ஷெயார் பண்ணினால் நீ உன் அம்மாவுக்கு மகன் இல்லை.

பேஸ்புக்கில் அம்மாவை விரும்புகிறேன் என அறிவிக்கும் அளவிலா இருக்கிறது உங்களது தாய்மேலான பாசம்? அது ஆத்மா சம்பந்தப்பட்ட உணர்வல்லவா? நான் மூச்சு விடுகிறேன் என்பது போல, அதுவும் எந்தக் கணமும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வல்லவா? இதற்குக் கூடவா விளம்பரம், அறிவிப்பு?

//இந்தப் பதிவுகளை எழுதுவதற்கு முன், கலாய்க்கவென ஒரு படத்தை தயார் செய்தேன், காலப்போக்கில் நம்மவர்கள் தந்தை இறந்ததைக்கூட பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு லைக் வாங்குவார்கள் என்று, இன்றைக்கு பேஸ்புக்கை உலாவியபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, பிரபலமான, அறிவுசார் சிந்தனையாளர் என அறியப்படும் ஒரு கவிஞர், தனது தந்தை இறந்தது சம்பந்தமாக முகப்புத்தகப் பதிவிட்டுள்ளார். தந்தை இறந்த சோகத்தின் நடுவில் ஒருவரால் ஸ்டேடஸ் இட முடியுமா? ஆச்சரியம்தான். அதற்கு ஷேயார்கள் வேறு. //
இது நான் தயாரித்த படம்.
இது மனா புனா போட்ட ஸ்டேடஸ். உண்மை.

பேஸ்புக்கில் இன்னொரு ஷெயார் சம்பந்தப்பட்ட வதை உள்ளது. அதுதான் போட்டோ டக் பண்ணுவது. தீபாவளி, பொங்கல் என்று பண்டிகைகள் வந்துவிட்டால் போதும், அதை நாம் கொண்டாடுகிறோமா, இல்லையா என்றெல்லாம் பார்க்காது ஒரு வாழ்த்து போட்டோ போட்டு ஒரு நூறு பேரை டக் பண்ணி விடுவார்கள். அப்புறம் என்ன, அத்தனை பெறாது கொமெண்டுகளும் நோடிபிகேசனாக வருவது முதல் ஆயிரம் சிக்கல்கள். உண்மையாக அன்போடு வாழ்த்து சொல்லுபவர் மெசேஜில் தனியாக வாழ்த்துவாரா, அல்லது தான் ஏதோ நாட்டின் தலைவர் போல அனைவருக்கும் பொதுவாக வாழ்த்துக்களை எறிவார், நாம் பொறுக்க வேண்டுமா?


பெண்ணியம்.

பெண்ணியத்தை, பெண்ணுரிமையை வைத்து பேஸ்புக்கை ஓட்டுபவர்களை பற்றி தனியாக ஒரு பதிவு இடவுள்ளேன். அங்கே அலம்புகிறேனே...?


தமிழ்!!!!

SHARE IF YOU ARE PROUD TO BE A TAMILAN! பற்றி.. அடுத்த பதிவில்! 
 நான் ஏற்கெனவே இதுபற்றி நாகரிகமாக மூன்று பதிவுகளில் முணுமுணுத்திருந்தது நினைவிருக்கலாம்... இந்தமுறை கொஞ்சம் காமெடியாக...
நாளையே...





இப்படியாக நல்லவர்களாகவோ, புத்திசாலிகளாகவோ, பெண்ணிய வாதிகளாகவோ, புரட்சியாளர்களாகவோ தங்களை காட்டிக்கொள்ளும் வகையிலான பதிவுகளை பார்த்தால் எனக்கு என்ன கொமென்ட் போட விருப்பம் வரும், தெரியுமா?

செத்த மூடுறேளா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்